அவல் கேசரி செய்வது எப்படி?
How to Make Aval Kesari Recipe in Tamil?
அவல் கேசரி செய்வது எப்படி?
தேவையான உணவு பொருட்கள்
அவல் – 1 கப்
நெய் – அரை கப்
வறுத்த முந்திரி – சிறிது
பச்சைக் கற்பூரம் – சிறிது
சர்க்கரை – 1 கப்
உலர்ந்த திராட்சை – 1 தேக்கரண்டி
கேசரிப் பவுடர் – 2 சிட்டிகை
ஏலக்காய் பொடி – 3 சிட்டிகை
How to Prepare Aval Kesari?
- அவலை வாணலியில் கொட்டி வறுத்து, ஆறவிட்டு ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
- வாணலியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை மற்றும் கேசரிப் பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதி வந்ததும், அவலை நன்குக் கிளறிக் கொண்டே கொட்டவும்.
- நன்கு கிளறி விட்டு ஓரத்தில் நெய்யை ஊற்றவும்.
- அதனுடன் பச்சைக் கற்பூரம், முந்திரி, திராட்சை, ஏலப்பொடி ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும்.
- சுவையான அவல் கேசரி தயார்.