- May 18, 2022
உள்ளடக்கம்
தேன் தானும் கெடாது தன்னுடன் சேரும் பொருளையும் கெட விடாது.
தேனைப் பற்றி தேனீக்கள் என்ற ஒரு அத்தியாயமே சுத்த சத்திய புனித வேதம் திருக்குர்ஆனில் உள்ளது.
தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. முத்து போல உருண்டு நகரும் தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.
இதை நாய் முகராது; அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது.
வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்து கால் ஸ்பூன் தேனை வைத்து நன்றாக மத்தித்தால் உள்ளங்கை நன்றாக கொதிக்கும் அப்படி கொதித்தால் அது நல்ல சுத்தமான தேன்.
காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு.
தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.
காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது. சுடு தண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது.
அதனால் தேனை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நன்றாக நக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டு பிறகு சுடுநீர் அருந்தவும்; வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை ஏறாது.
வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல. பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.
ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது – ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு (சித்த மருந்துகள்) தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்.
Also, read