- May 18, 2022
உள்ளடக்கம்
முடக்கத்தான் கீரையை மாதம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. முடக்கத்தான் கீரை குழம்பு எப்படி செய்வது என்ற குறிப்பினை இங்கே பார்க்கவும்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை – 1/2 கப்
புளிகரைசல் – 2 கப்
சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 1/4 கப்
பூண்டுப்பல் – 4
வெங்காயம் – 1 (நீளவாக்கில் அரிந்தது)
கறிவேப்பிலை – சிறிது
வடகம் – 2 டீஸ்பூன்
செய்முறை
பாத்திரத்தில் முடக்கத்தான் கீரையை சிறிது நல்லெண்ணெயில் வதக்கி ஆற வைக்கவும்.
அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி வடகம் சேர்த்து தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் சாம்பார் பொடி சேர்த்து லேசாக வதக்கி, உப்பு மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு நன்றாக கொதிததும், வதக்கிய கீரையை ஒன்றும் பாதியுமாகவோ அல்லது மைய அரைத்து குழம்பில் சேர்க்கவும்.
நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கவும்.