×
Saturday 12th of October 2024

Nuga Best Products Wholesale

பொரிச்ச ரசம் செய்வது எப்படி?


Poricha Rasam Recipe in Tamil

இந்த ரசத்தின் சிறப்பு புளியில்லாமல் தக்காளி அதிகம் சேர்த்து செய்வது. உபவாசம் இருக்கும் நாட்களில் புளியில்லாமல் இந்த ரசம் செய்வார்கள்.

தேவையான பொருட்கள்

தக்காளி – 2 பெரியது
வேகவைத்த துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – 1 கொத்து
துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க

நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/8 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1

நெய்யில் வதக்க

காய்ந்த மிளகாய் – 2
கடலைபருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 1/2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

பொரிச்ச ரசம் செய்முறை

  • நெய்யில் வதக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

  • பாத்திரத்தில் 3 கப் நீர் ஊற்றி நறுக்கிய  தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

  • தக்காளி வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு சேர்க்கவும்.

  • மேலே நுறைத்து வரும் போது தேவையான நீர் ஊற்றி கறிவேப்பிலை + கொத்தமல்லி சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • May 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • May 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • April 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?