×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?


Ragi Kozhukattai Recipe in Tamil

ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?

தேவையான உணவு பொருட்கள்
1. ராகி மாவு – 200 கிராம்
2. சிவப்பு அரிசி புட்டு மாவு – 200 கிராம்
3. பாசிப்பருப்பு – 1 கப்
4. தேங்காய் துருவியது – 1 கப்
5. வெல்லம் – 1 கப்
6. நெய்

How to Prepare Ragi Kozhukattai Recipe in Tamil?

ராகி கொழுக்கட்டை செய்முறை

  • ராகி மாவை கடாயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
  • அதே அளவு சிவப்பு அரிசி மாவு எடுத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தண்ணீர் 2.5 கப் எடுத்து எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.
  • சிறிது சிறிதாக இந்த தண்ணீரைச் சேர்க்கவும், மாவை கலக்கவும்.
  • மாவை ஆற விடவும்.
  • இனிப்பு பூரணம் செய்ய, முதலில் வெல்லத்தை கொதிக்க விட்டு வடிகட்டவும்.
  • பின் பாசிப்பருப்பை வேக வைக்கவும்.
  • கடாயில் சிறிது நெய் சேர்த்து தேங்காயை வறுக்கவும்.
  • இப்போது வெந்த பருப்பு, வடிகட்டிய வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும்.
  • சிறிது நேரத்தில் கட்டியானவுடன் பூரணம் தயார்.
  • இப்போது கொழுக்கட்டை மாவை எடுத்து, 2 நிமிடம் கடாயில் என்னை ஊற்றி சூடாக்கவும்.
  • இந்த செயல்முறை மாவின் பிசு பிசுப்பை நீக்குகிறது.
  • இப்போது கொழுக்கட்டை மாவின் உள்ளே இனிப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • இட்லி குக்கரில் 10 நிமிடங்கள் நீராவியில் வேக வைக்கவும்.
  • சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.

Also, read


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • May 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • May 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • April 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?