×
Sunday 13th of October 2024

Nuga Best Products Wholesale

சுக்கு மல்லி காபி செய்வது எப்படி?


Sukku Malli Coffee Powder Recipe in Tamil

மழைக்காலங்களில் சுக்கு மல்லி காபி குடிப்பது ரொம்ப நல்லது. தொண்டை கரகரக்கும் போது, சளி பிடித்திருக்கும் போது இந்த காபி குடிப்பது இதமாக இருக்கும்.

இந்த சுக்கு மல்லி காபி பொடியை செய்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி விதை – 1/4 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
சுக்கு – 1 அங்குல துண்டு
பனை வெல்லம்  – 1/3 கப்

Sukku Malli Coffee Podi Seivathu Eppadi

செய்முறை

  • வெறும் கடாயில் மல்லி விதை, மிளகு, ஏலக்காய் இவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.
  • சுக்கு தோலினை சுரண்டிவிட்டு லேசாக நசுக்கி கொள்ளவும்.
  • அனைத்தையும் ஒன்றாக கொரகொரப்பாக பொடிக்கவும்.

  • பனை வெல்லத்தை துருவி நீர் ஊற்றி கொதிக்க வைத்த பின் வடிகட்டவும்.

  • பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றி 1 டேபிஸ்பூன் பொடித்த பொடியை போட்டு கொதிக்க வைக்கவும்.

  • கொதித்த பின் வடிகட்டி பனை வெல்ல நீரை கலந்து சூடாக பருகவும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • May 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • May 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • April 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?