Thengai Biscuit Recipe in Tamil
சுவை மிகுந்த தேங்காய் பிஸ்கட் செய்வது எப்படி?
2. வெண்ணெய் – 80 கிராம்
3. சர்க்கரை – 40 கிராம்
4. வறுத்த தேங்காய் துருவல் – 25 கிராம்
5. வெனிலா சுகர் பவுடர் – அரை தேக்கரண்டி
6. பாதாம் பருப்பு தூள் – 15 கிராம்
7. உப்பு – சிட்டிகை
How to Make Coconut Biscuit in Tamil?
தேங்காய் பிஸ்கட் செய்முறை
முதலில் உருக்கிய வெண்ணெய்யுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் சீனி, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பின் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சமதளத்தில் வைத்து சப்பாத்தி போல் வார்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும். பின் 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.
Also, read
Leave a Reply