×
Friday 15th of September 2023

Nuga Best Products Wholesale

மகா சிவராத்திரி விரதம் மற்றும் மந்திரங்கள்


சிவராத்திரி ஐந்து வகைப்படும்:

  • நித்திய சிவராத்திரி
  • பட்ச சிவராத்திரி
  • மாத சிவராத்திரி
  • யோக சிவராத்திரி
  • மகா சிவராத்திரி

Maha Shivaratri 2023 in Tamil

மகா சிவராத்திரித் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் வரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் நாள் (மாசி மாதம் 6-ஆம் நாள்) மகா சிவராத்திரித் திருநாள். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வு இது. அன்று மஹேசனே மனித உருவில் இறங்கி வந்து, பக்தர்களோடு கலந்து, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜென்ம ஸாபல்யம் அளிக்கும் நாள். மக்களை நல்வழிபடுத்த, ஜீவ காருண்யத்தை பறைசாற்ற, வாழ்க்கை ரகசியத்தை அறியச்செய்ய, மனதில் நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க, பரம்பொருளால் ஏற்படுத்தபட்ட அதிசய தெய்வீக அமைப்பு இது.

அறிதலையும், புரிதலையும், உணர்தலையும், மறைதலையும்’ அன்று பரமேஸ்வரன் வாரி வழங்கும் தருணம். நம்மிடம் வேகம், விவேகம் என்ற இருதுருவமும் ஒன்றாகி எண்ணங்கள் பவித்திரமாகும் நேரம். அப்போது இந்த ஆதிகுருவின் அருளே பொருளாகும்.  சகல தோஷ நிவர்த்தியும் ஜென்ம ஸாபல்யமும் பெறலாம். ‘தன்னைப் படைத்தவனை பவித்திரமாக நினைப்பவன் இந்த ஒரு நாளில் பரமாத்வாவை அடையலாம்’ என்பது சாஸ்திரம்.

மஹா சிவராத்திரி அன்று தேடிப்போனால், பரமனே தென்றலாய், காற்றாகி நமக்குள்ளேயே சுவாசிப்பான். நீராகி, நிலமாகி, வானாகி, வளியாகி, ஒளியாகி, அண்டசராசரமாகி, ஜீவஜோதியாக நமக்குள்ளே ஐக்கியமாகி நம் ஆன்மாவோடு இரண்டறக் கலப்பான் என்பது சாஸ்த்ரங்கள் சொல்லும் உண்மை. படைத்தவன் மட்டுமே செய்யும் விந்தை இது. மெய்ஞானம் என்கிற சித்தாந்தத்தை நம் ஆன்மாவில் பரிபூரணமாகப் பதிப்பான். இது இல்லாமல் இந்த ஜீவாத்மாவுக்கு ஜென்ம ஸாபல்யம் கிடைக்காது.

How to Fast on Maha Shivaratri in Tamil

மகா சிவராத்திரி விரதம்

விரதமுறை: மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

பலன்: நிம்மதியான இறுதிக்காலம்

இப்படிப்பட்ட மகா சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Maha Shivaratri Mantra in Tamil

​சிவ பஞ்சாட்சரம்

ஓம் சிவயநம – யநமசிவ – மசிவயந – வயநமசி – நமசிவய

சிவபெருமானுடைய இந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது பஞ்ச பூத சக்திகளையும் பெற முடியும். இதை கட்டாயம் இந்த நாளில் 108 முறை உச்சரிக்கலாம்.

சிவன் மூல மந்திரம்

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!

திருமூலர் அருளிய இந்த சக்தி வாய்ந்த சிவன் மூல மந்திரம் சிவனுடைய மூல மந்திரமாக கொள்ளப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று இம்மந்திரத்தை உச்சரித்தால் எவ்விதமான துன்பங்களும் உங்களை விட்டு விலகி விடும்.

சிவ ருத்ர மந்திரம்

ஓம் நமோ பகவதே ருத்ராய

பாவம் போக சொல்ல வேண்டிய மந்திரம்

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

பாவ வினைகள் இருந்து மோட்சம் பெறுவதற்கு சிவனுடைய இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். மகா சிவராத்திரி அன்று இம் மந்திரத்தை உச்சரித்தால் பலன்களும் இரட்டிப்பாகும்.

சிவன் தியான மந்திரம்

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

இந்த தியான மந்திரத்தை உச்சரிப்பவர்கள் சகலமும் வசமாகும் என்பது நியதி.

சிவபெருமான் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே!
மஹாதேவாய தீமஹி!
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்!

மந்திரங்களில் காயத்ரி மந்திரம் மிகவும் உயர்ந்தது ஆகும். மந்திரங்களுக்கு தலைவனாக இருக்கும் காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரங்கள் எதுவும் இல்லை என்று கூறலாம். கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.

எம பயம் நீங்க சிவன் மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

வாழ்வில் பயம் இல்லாமலும் தைரியமாகவும் இருக்க, எம பயம் நீங்க, தோல்வி குறித்த பயங்கள் நீங்க சிவனுடைய இந்த மந்திரத்தை இன்றைய நாளில் உச்சரிப்பது நல்ல பலனாக இருக்கும்.

 

Also read the below Slokas on Maha Shivaratri in Tamil



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • August 22, 2023
திருக்கழிப்பாலை அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோவில்
  • August 15, 2023
பாண்டூர், ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் [20.8.2023]
  • July 30, 2023
ஶ்ரீ கருட தண்டகம் - Garuda Dandakam in Tamil