×
Saturday 12th of October 2024

Nuga Best Products Wholesale

புதுமனை புகும்போது பசுவை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்?


Why Cow is Entering in House Warming Ceremony in Tamil?

புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்?

பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். தேவதைகளும் பசுவில் வாசம் செய்கிறார்கள். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம்.

பஞ்சகவ்யம், (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கும் உகந்தது, மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம்.

குளம்படிபட்ட தூசி நமது உடலில் பற்றிக்கொண்டால், நீராடிய தூய்மை உண்டு. மேய்ந்து வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை நல்ல வேளையாக முஹுர்த்த சாஸ்திரம் சொல்லும் (கோதூளி லக்னம்).

பசு மாட்டின் சாணி நெருப்புடன் இணைந்து திருநீறாக உருவெடுக்கும். நீராடியதும் தூய்மை பெற திருநீறை அணியச் சொல்லும் சாஸ்திரம், நெற்றியில் த்ரிபுண்ட்ரம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தும். ஈசனின் உடல் முழுதும் திருநீறு ஜ்வலிக்கும். குழந்தைகளின் பயத்தை அகற்ற மந்திரத்தை உச்சரித்து திருநீறு அணிவிப்பது உண்டு.

நாம் செய்த பாபம் அறவே அகல பசுவை தானமாக அளிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம். ரஜஸ்வலா தோஷ நிவர்த்திக்கு பசுவை கொடையாக வழங்கச் சொல்லும் சாஸ்திரம். பசு வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணன். கோபாலன் என்ற பெயர் அவனது பசு பணிவிடையை சுட்டிக்காட்டும். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும்.

புதுமனை புகுவிழாவில் மனையின் தூய்மைக்குப் பசு வேண்டும். முதலில் பசுமாடு மனையில் புகுந்து தூய்மை பெற்ற பிறகு நாம் நுழைவது, நமது முன்னேற்றத்துக்கு அத்தாட்சி. வீடு விளங்க பசுமாடு வேண்டும். பசுவை நான்கு கால் பிராணியாக, விலங்கினமாக மட்டுமே பார்க்கக் கூடாது. அதில் ஒட்டுமொத்த தேவதைகளும் ஒன்றியிருப்பதால், அதன் வரவானது, செல்வத்தில் வரவாக மட்டுமின்றி மகிழ்ச்சியின் வரவாகவும் அமையும். ஆகையால் புதுமனைப் புகுவிழாவில் முதலில் வீட்டுக்குள் நுழைவது பசுவாக இருக்கவேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • August 14, 2024
பக்தி