×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

கிரஹ பிரவேச திருவிழா


உள்ளடக்கம்

Griha Pravesh in Tamil

கிரக பிரவேசம் என்பது ஒரு வகையான  இந்து சடங்காகும், இது ஒரு தனிநபர் அல்லது ஒரு குடும்பம் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் போது செய்யப்படுகிறது.  இந்த விழாவில், புதிய வீட்டை பெருமைப்படுத்தும் வகையில், பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்படும். சில நேரங்களில், வீடு கட்டி முடிக்கும் முன்பே கிரக பிரவேசம் சடங்கினைச் செய்து முடிப்பார்கள். ஒரு கற்றறிந்த இந்து பூசாரி அல்லது ஒரு ஜோதிடர் கிரக பிரவேச சடங்கை செய்ய பொருத்தமான தேதியைக் தேர்ந்தெடுப்பார்.

பல்வேறு பூஜைகளில், வாஸ்து பகவானை மகிழ்விக்கவும், புதிய வீடுகளில் இருந்து தீய சக்திகளை விரட்டவும் வாஸ்து பூஜை செய்யப்படும். சத்யநாராயண பூஜை, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம் ஆகியவையும் நடைபெறும். பெரும்பாலும் கிரகப்பிரவேசம் ஜனவரி – பிப்ரவரி  மாதம் (தை மாதம்) மற்றும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதம் (ஆவணி மாதம்) ஆகிய மாதங்களில் செய்யப்படும். செவ்வாய் மற்றும் பிற கரிநாட்களில் கிரகபிரவேசம் செய்யக்கூடாது.

பெரும்பாலும் அதிகாலையில் செய்யப்படும் இந்த வைபவத்தை செய்வதற்கு முன்பு, கணபதி, கிருஹலக்ஷ்மி மற்றும் சூரிய பகவானை வழிபட வேண்டும்.

பண்டைய காலங்களில், மக்கள் ஒரு புதிய வீட்டை வாங்கும்போது, கிரக பிரவேச விழாவினை சிறப்பாக  கொண்டாடுவார்கள், இது பெரும்பாலும் பெரிய அளவினதாக இருக்கும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் உறவினர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். பெரும்பாலான மக்கள் சொந்த தொழில் அல்லது விவசாயம்  செய்பவர்களாக இருப்பார்கள், மேலும் அவர்களுக்கு சொந்த விவசாய நிலங்கள் இருக்கும். இந்த விழாவை அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில்(Flats) குடியிருக்கிறார்கள், மேலும் அவர்கள் இந்த விழாவை தங்கள் நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான மக்கள் வங்கிகள் / நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடன் பெற்று அடுக்குமாடி குடியிருப்பினை(Flats)  வாங்குகிறார்கள், இதன் காரணமாக, பூஜையில் கலந்து கொள்ளும் போது கூட, அவர்களின் எண்ணங்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது பற்றி மட்டுமே இருக்கும், மேலும் அவர்களும் அவசர, அவசரமாக விழாவில் பங்கேற்பார்கள், விழா முடிந்ததும், சரியாக உணவை கூட சாப்பிடாமல், அவர்கள் தங்கள் பிஸி ஷெட்யூல் காரணமாக தங்கள் அலுவலகங்களுக்கு விரைவார்கள் . ஆனால், இப்போதெல்லாம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால், தம்பதிகள் இருவரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சம்பாதிப்பதற்காக வேலைக்கு செல்கிறார்கள்  என்பதால், அவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது.

புதிதாக வீடு வாங்கும் மக்கள், கிரக பிரவேச விழா துவங்கும் முன், ஷீரடி சாய்பாபா, குரு ராகவேந்திர சுவாமிகள் போன்ற புனித குருக்களை வழிபட்டு, புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் நிம்மதியாகவும், வளமாகவும் வாழ வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில், புதிய வீடு வாங்குவது மிகவும் கடினம், குறிப்பாக நடுத்தர மக்களுக்கு! இருப்பினும், நமது கடின உழைப்பின் மூலமும், சர்வவல்லமையுள்ள இறைவனிடம் நமது அதீத பக்தியைக் காட்டுவதன் மூலமும் நாம் ஒரு சிறிய அளவிலான வீட்டை வாங்க முடியும். புதிய வீடு வாங்க நினைப்பவர்கள் முதல் கடவுளான விநாயகர், வாஸ்து பகவான், தெய்வீக சிற்பி விஸ்வகர்மா ஆகியோரை தவறாமல் வழிபட்டு வர வேண்டும்.

“ஓம் ஸ்ரீ கிரஹலக்ஷ்மிகணபதி  நமஹ”

எழுதியவர்: ரா. ஹரிசங்கர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • August 11, 2024
சிரிப்பு நம் நோய்களை குணப்படுத்துகிறது
  • August 7, 2024
நாம் எங்கே இருக்கின்றோம்?