×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வாழ்வியல் தத்துவக் குறியீடுகள் கண்டுபிடிப்பு


Three Auspicious Symbols found in Thiruvannamalai Temple

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் வாழ்வியல் தத்துவக் குறியீடுகள் கண்டுபிடிப்பு

🛕 திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் வாழ்வியல் தத்துவக் குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் கண்டறிந்துள்ளார். அந்தக் குறியீடுகள் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளரும், தமிழ்ச்செம்மல் மேட்டூர் அணை மா.பாண்டுரங்கன் அவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தியாவது,

🛕 தமிழகத்தில் பழங்காலத்தில் கட்டப்பட்டுள்ள பழமையான திருக்கோவில்களில் ஏராளமான குறியீடுகள் காணக்கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மனிதக் குலத்திற்கு மிகவும் அவசியமான வாழ்வியல் தத்துவங்களை (உண்மைகளை) உணர்த்துபவையாகும். அவை உணர்த்தும் தத்துவங்களை அறிந்தவர்களும் உண்டு, அறியாதவர்களும் உண்டு.

திருவண்ணாமலை மூன்று குறியீடுகள்

🛕 அண்ணாமலையார் கோவிலின் கருவறைக்கு முன்புறமாக உள்ள நந்தி மண்டபத்தில் பதிக்கப்பட்டுள்ள பலகைக் கல் ஒன்றில் 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்த மூன்று மங்களகரமான குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

Three Auspicious Symbols found in Thiruvannamalai Temple

🛕 அவை இடமிருந்து வலமாக சுவத்திகம், சந்திரப் பிறையுடன் கூடிய மேல் நோக்கும் முக்கோணம், நிறைகுடம் ஆகியவை ஆகும். அம்மூன்று குறியீடுகளில் மிகச் சிறந்தத் தத்துவங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவையாவன-

எட்டு மங்களகரமான குறியீடுகள் (நன்றி: திருக்குறியீட்டியல் – ப.74)

🛕 இரட்டைச்சாமரம், ஸ்ரீவத்சம், சுவத்திகம், தீபம், பூர்ணகும்பம் (நிறைகுடம்), ரி~பம், கண்ணாடி, சங்கு ஆகிய எட்டும் எட்டு மங்களகரமான குறியீடுகளாகும்.

🛕 திருவண்ணாமலை மூன்று குறியீடுகளில் இடது புறமாக உள்ள சுவத்திகமும், வலது புறமாக உள்ள நிறைகுடமும் மேற்கண்ட மங்களகரமான சின்னங்களில் உள்ளடங்கும்.

🛕 நடுநாயமாக உள்ள சந்திரப் பிறையுடன் கூடிய மேல்நோக்கும் முக்கோணம் மங்களம் எனப் பொருள்படும் சிவம் என்பதையும், பஞ்ச பிரம்மங்களில் ஒன்றான இளம்பிறை சந்திரனைத் தன் சிகையில் அணிந்த பொன்னிறமான தற்புரடர் என்னும் கிழக்குத் திசை நோக்கும் சிவபெருமானின் திருமுகத்தையும் குறிப்பதாகும்.

🛕 மங்களகரமான இம்மூன்று குறியீடுகள் கோவிலில் எழுந்தருளியுள்ள தற்பரன் என்னும் பரம்பொருளான இறைவனிடமும், தற்பறை என்னும் உமையம்மையுடனும் ஆன்மா தன்னைப் பதியாகக் கருதும் அறிவை அருளவேண்டி வழிபட வேண்டும் எனும் செய்தியை குறிப்பால் உணர்த்துவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose
M.Pandurangan
M.Pandurangan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 23, 2024
சுடர் டிரஸ்ட், திருச்சேறை
  • August 11, 2024
சிரிப்பு நம் நோய்களை குணப்படுத்துகிறது
  • August 7, 2024
நாம் எங்கே இருக்கின்றோம்?