- January 26, 2023
உள்ளடக்கம்
அஸ்வகந்தா: அஸ்வகந்தா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். இதனுடைய இலை, வேர்கள் மற்றும் கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. இது வடமொழியில் அஸ்வகந்தா என்றும், தமிழில் அமுக்கிரா கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
🌳 அஸ்வம் என்றால் வடமொழியில் குதிரை என்றும் கந்தம் என்றால் கிழங்கு என்றும் பொருள், இதனால் “அஸ்வகந்தா” என்று பெயர் பெற்றது. அமுக்குரா கிழங்கு இலைகளை பூசும் போது இது உடலில் தோன்றும் கட்டிகளை அமுக்கும் வல்லமை கொண்டது. இதை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும்.
🌳 அமுக்கரா கிழங்கு, நாட்டு அமுக்கரா மற்றும் சீமை அமுக்கரா என்ற இரண்டு வகைகள் உண்டு. மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறுகிளையும் உடைய 5 அடி வரை வளரக்கூடிய குறுஞ்செடிவகை இந்த அஸ்வகந்தா. கோவையிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் தானே வளர்வது, கிழங்கு மருந்துவப் பயனுடையது. ஏற்றுமதிப் பொருளாகப் பயிர் செய்யபடுகிறதது. உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இக்கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தி என்றழைக்கப்படுகிறதது. “அஸ்வகந்தி லேகியம், அஸ்வகந்தித் தைலம்” ஆகியவை பெரும்பாலானோர்க்கு அறிமுகமானதே.
🌳 நோய்நீக்கி உடல் தேற்றியாகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாதுவெப்பு அகற்றியாகவும், பசி உண்டாகியாகவும், இச்சை பெருக்கியாகயாகவும் செயல்படும்.
🌳 அமுக்கரா கிழங்கில் உள்ள விதாபெரின் A என்ற உட்பொருள், இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை தடுக்கும் ஆற்றலைப் பெற்றது. ஏனென்றால் இதில் அடோப் சோனிக் என்ற பண்பு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.
சர்க்கரை நோய்: சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. ஆரோக்கியமானவர்கள் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் அமுக்கரா கிழங்கு பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் அமுக்கரா கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
🌳 அஸ்வகந்தாவில் உள்ள பீட்டா சக்தி மூட்டு வலி மற்றும் மூட்டு வாதம் போன்றவற்றை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
🌳 ஜலதோஷம் உள்ளவர்கள் அஸ்வகந்தா பொடியை தேநீரில் போட்டு குடிக்கும்போது ஜலதோஷம் கிருமிகளை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
🌳 அஸ்வகந்தாவில் இருக்கும் விதானோலிட் என்ற ரசாயன உட்பொருள் வலி நிவாரணியாகவும்,நோய் தொற்றை எதிர்க்கவும் பயன்படுகிறது.
🌳 ஆண்ககள் & பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன பிரச்சினை காரணமாக ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் நல்ல மருந்தாக அஸ்வகந்தா பயன்படுகிறது. இதிலுள்ள சத்துக்கள் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
🌳 இதய சம்பந்தமான நோய்களை குணப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு அஸ்வகந்தா பயன்படுகிறது.
🌳 அஸ்வகந்தா அல்லது அமுக்கரா கிழங்கை அடிக்கடி அளவாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
Also, read: Sitharathai Medicinal Uses in Tamil (சித்தரத்தை மருத்துவப் பயன்கள்)
மன அழுத்தம் & தூக்கமின்மை: அஸ்வகந்தா சூரணம் (Ashwagandha Churna) பயன்படுத்தும்போது, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலரது தூக்கமின்மைக்குக் காரணம் மன அழுத்தம். இந்த அஸ்வகந்தா சூரணத்தைப் பயன்படுத்தும் பொழுது மனம் அமைதி பெற்று நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்.
🌳 மருத்துவ குணங்கள் மிக்க அஸ்வகந்தா, பொதுவாக பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் அமேசானில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்: Buy Ashwagandha Amazon India
அஸ்வகந்தா தீமைகள்: அஸ்வகந்தா/அமுக்கரா கிழங்கு அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. இரத்த உறைதல் தடைபட்டு இரத்தப்போக்கு அதிகரிக்கும் மலச்சிக்கலை அதிகரிக்கும், தூக்கம் அதிகரித்து சோம்பல் உண்டாகும்.
முக்கிய குறிப்பு: மேலே கூறிய விளக்கங்களைக் கண்டு நீங்களாக உட்கொள்ளக்கூடாது. மருத்துவரின் அறிவுரை படி உபயோகிப்பது நல்லது.