- January 26, 2023
உள்ளடக்கம்
🍇 குழந்தைகளோ, பெரியவர்களோ உலர் திராட்சையைப் பார்த்துவிட்டால் இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு உலர் திராட்சைக்கு உண்டு.
🍇 உயர்ந்த ரக திராட்சையை தரம்பிரித்து காய வைத்து உலர் திராட்சை தயாரிக்கப்படுகிறது.
🍇 உலர் திராட்சையில் கால்சியம், இரும்புச் சத்து, நார் சத்து , மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, போன்ற பல்வேறு சத்துக்களும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.
🍇 100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன.
🍇 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளதால் முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
🍇 பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி நீங்கும்; ஆரோக்கியம் கூடும்; ரத்தசோகை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
🍇 இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம்.
🍇 வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வைக்குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும்.
🍇 இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கு பொட்டாசியம் சத்து தேவை. உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும்.
🍇 இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவும். எனவே சர்க்கரை நோயாளிகளும், உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம்.
🍇 மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர, காமாலை நோய் குணமடையும்.
🍇 மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன், ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.
🍇 குழந்தைக்கு பால் காய்ச்சும் போது, அதில் இரண்டு பழத்தை துண்டு செய்து போட்டு, காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
🍇 மூலநோய் உள்ளவர்கள், தினசரி உணவுக்குப் பின்னர், காலையிலும், மாலையிலும், 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
🍇 நரம்புக் தளர்ச்சி, மற்றும் தாம்பத்திய குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கருப்பு உலர் திராட்சையை ஒரு மாதம் உண்டு வந்தாலே நரம்புகள் வலுப்படும்.
🍇 குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள், இரவு உணவுக்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், சத்தான பால் உற்பத்தியாகும்.
🍇 தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகை, தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
🍇 எனவே நீங்களும் இனிமேல் தினமும் இரவில் உலர் திராட்சையை (Raisin) சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.