×
Monday 29th of May 2023

Nuga Best Products Wholesale

மனித உடல் உறுப்புகள் ஒரு கடிகாரம்


Human Organs Working Time in Tamil

இந்த நேரத்துல நம்ம உடம்பு என்ன செய்யும்?

? எத்தனை கோடி, கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி, எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்துப்பார்த்து பெரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

? நம்ம உடம்பை பத்தி, நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும். இப்போ, நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம், எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க:

? நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

Human Organs Function Time

Lung – 03:00 AM to 05:00 AM

? விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

Large Intestine – 05:00 AM to 07:00 AM

? விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

Stomach – 07:00 AM to 09:00 AM

? காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்; இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

Spleen – 09:00 AM to 11:00 AM

? காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்; நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

Heart – 11:00 AM to 01:00 PM

? முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

Small Intestine – 01:00 PM to 03:00 PM

? பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம். இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

Bladder – 03:00 PM to 05:00 PM

? பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

Kidney – 05:00 PM to 07:00 PM

? மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

Pericardium – 07:00 PM to 09:00 PM

? இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock Absorber; இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

Triple Heater – 09:00 PM to 11:00 PM

? இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் நேரம். டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

Gallbladder – 11:00 PM to 01:00 AM

? இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

Liver – 01:00 AM to 03:00 AM

? இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது, கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்தப் பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

 

Also, read


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • March 27, 2023
ஜோதிடம்: கோள்களும் அவற்றின் தன்மைகளும்
  • March 11, 2023
ரஜ்ஜு பொருத்தம் - திருமண வாழ்க்கை சிறக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  • January 31, 2023
ஆறுகால பூஜை