×
Sunday 13th of October 2024

Nuga Best Products Wholesale

ஆள்வோன் இனமே (மர வகையில் ஒன்றான) அரசமரம்


7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சங்களில் குறியீடுகளும், எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் எச்-1எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை ஹரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்தியாவில் புது டெல்லி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

மேலும் இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களது படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 1, பக்கம் 157-லும்  இதனைப் பற்றிய மற்ற குறிப்புகள் பக்கம் 370-லும் பதிவிடப்பட்டுள்ளன.

சதுர வடிவிலான இம்முத்திரையின் மேல் பகுதியில் புடைப்பு வகையை சார்ந்த, ஒரு குறியீடும், நான்கு எழுத்துக்களும், கீழ் பகுதியில் ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் (பரத்தை அறிந்தவன்) என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. 1-ஆவது எழுத்தும், 2-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன. புடைப்பு வகையை சார்ந்த குறியீடும், எழுத்துக்களும் துணி, மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு படித்தறியக் கூடியவை.

இந்த முத்திரை, ஆழி +  (னி + மே) + போ + தி. ஆழினிமே போதி எனப் படிக்கப்படுகிறது.

இவற்றில் ஆழி என்பது ஆளி, ‘னி’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘மே’ என்பது 10-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘போ’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘தி’ என்பது 7-ஆவது உயிர்மெய் எழுத்து.

ஆழினிமே (ஆளினிமே) : ஆள்வோன் இனமே, செடிவகையே, தூய்மையான கருத்துக்களே
போதி : அரசமரம்,
பொருள்: ஆள்வோன் இனமே (மரவகையில் ஒன்றான) அரசமரம்.

போதி என்னும் அரசமரத்தடியில் கௌத்தமர் ஞானம் பெற்றார் என்பதனால் அரசமரம் மரங்களின் அரசன் என்பதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். மேலும் பெரியதாக வளரக் கூடியதும், பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடுவதும், பாலினத்தை சார்ந்ததுமான இம்மரத்தின் இலைகள் இதயம் போன்று அகண்டு நீண்டு கூர்மையான நுனியை உடையவை என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இம்மரம் திருவாடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் ஸ்தல மரமாகும். மேலும் அரச மரத்தின் இலையின் வடிவம், பார்வதி தேவி என்பதைக் குறிக்கும் ஈ என்னும் சிந்து சமவெளி நாகரிகப் பழந்தமிழ் 4-ஆவது உயிர் எழுத்தின் வடிவமுமாகும்.

இந்திய மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த பாரத ரத்னா பட்டம்  அரச இலையின் வடிவமுடையது என்பது இதன் தனிச் சிறப்பாகும் எனத் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • July 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • May 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • May 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்