- July 6, 2022
எச்-228எ,பி என்னும் அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று அரப்பாவில் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்தியாவில் புது டெல்லி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,
இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களது படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 1, பக்கம் 215 – லும் இதனைப் பற்றிய மற்ற குறிப்புக்கள் பக்கம் 371 – லும் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த முத்திரை அரைவட்ட முனைகள் உடைய நீள் செவ்வக வடிவம் உடையது. இதன் ‘எ, பி’ ஆகிய இரண்டு புறங்களில் குறியீடுகளும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
‘எ’ என்னும் முன்புறம்
‘எ’ என்னும் முன்புறத்தில் மூன்று குறியீடுகளும், நான்கு எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
குறியீடுகளில், முதலாவது குறியீடு சீப்பு வடிவிலான ‘சீ’ என்னும் 3-ஆவது உயிர்மெய் எழுத்து. இரண்டாவது, மூன்றாவது குறியீடுகள் சிவபெருமானின் 16 வெளிப்பாடுகளில் ‘சண்டேசன், பிச்சாடனன்’ ஆகிய இரண்டு திருவுருவங்கள். அவ்விரண்டும் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளன.
எழுத்துக்களில், ‘ல்’ என்பது 13-ஆவது மெய் எழுத்து, ‘லா’ என்பது 13-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ம் ‘என்பது 10-ஆவது மெய் எழுத்து, ஐந்து கோடுகளை கொண்ட ‘ஐ’ என்பது 9-ஆவது உயிர் எழுத்து.
‘ம், ஐ’ ஆகிய இரண்டும் இணைந்து ‘மை’ என்னும் 10-ஆவது மெய் எழுத்து பிறக்கிறது. அதனடிப்படையில் இந்நான்கு எழுத்துக்களும் ‘அ’ எனும் 1-ஆவது எழுத்தோடு அல்லாமை எனப் படிக்கப்படுகிறது. ஏனெனில் தமிழ்ச் சொற்கள் மெய் எழுத்துக்களால் துவங்கப்படுவதில்லை.
வெப்பம் என்பது உயிருக்குரிய பன்னிருவகை வேதனைகளான – அனல், இடியேறு, குளிர், ஆயுதம், மருந்து, நீர், காற்று, பசி, தாகம், முனிவறாமை, பிணி ஆகியவற்றில் அனல் என்பதைக் குறிப்பதாகும். ‘அனலாடி’ என்பது சிவபெருமானின் ஒரு பெயராகும்.
பொருள்: திரு சண்டேசனும், திரு பிச்சாடனனும் அனலாடி என்னும் சிவபெருமானின் வெளிப்பாடுகள்
‘பி’ என்னும் பின்புறம்
‘பி’ என்னும் பின்புறத்தில் மூன்று சிறிய வட்டங்கள், பரமஞானக் குறியீடு, மூன்று சிறிய வட்டங்கள், பரமஞானக் குறியீடு, மூன்று சிறிய வட்டங்கள், பரமஞானக் குறியீடு, மூன்று சிறிய வட்டங்கள் என ஒன்றையடுக்து மற்றொன்றாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றை பன்னிரண்டு சிறிய வட்டங்கள், மூன்று பரமஞான குறியீடுகள் என அடையாளப்படுத்த முடிகிறது.
மூன்று சிறிய வட்டங்களில் மேலே உள்ள முதலாவது வட்டம் ‘ள்’ என்னும் 14-ஆவது மெய் எழுத்து, நடுவே உள்ள இரண்டாவது வட்டம் ‘ளா’ என்னும் 14-ஆவது உயிர்மெய் எழுத்து, கீழே உள்ள மூன்றாவது வட்டம் ‘ள் ‘என்னும் 14-ஆவது மெய் எழுத்து.
இம்மூன்று எழுத்துக்கள் (சிறிய வட்டங்கள்) முதலில் ‘உ’ என்னும் 5-ஆவது உயிர் எழுத்துடன் (உ) + ள் + ளா + ள். உள்ளாள் எனப் படிக்கப்படுகிறது. ஏனெனில் தமிழ்ச் சொற்கள் மெய் எழுத்துக்களால் துவங்கப்படுவதில்லை.
உள்ளாள் : உள்ளால் பயிலும் ஆள் (உயிர்), உளவாறிவோர்
பன்னிரண்டு சிறிய வட்டங்கள்: உயிருக்குரிய பன்னிருவகை வேதனைகளான – அனல், இடியேறு, குளிர், ஆயுதம், மருந்து, நீர், காற்று, பசி, தாகம், முனிவறாமை, பிணி ஆகியவற்றைக் குறிப்பதாகும். அல்லாமை என்பது அனல் என்பதை இந்தப் பன்னிரண்டு சிறிய வட்டங்கள் உறுதி செய்கின்றன.
மூன்று பரமஞானக் குறியீடுகள் : படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை புரியும் கடவுளின் மூவகைச் செயல்கள்.
பொருள்: திரு சண்டேசனும், திரு பிச்சாடனனும் அனலாடி என்னும் சிவபெருமானின் வெளிப்பாடுகள். அவ்விருவரும் உளவாறிவோரும், முத்தொழில்களை புரிவோருமாவர் என்பதை அறிவதே பரமஞானம்.
முக்கியக் குறிப்பு: இந்த முத்திரையில் ஐந்து கோடுகள் ‘ஐ’ என்னும் 9-ஆவது உயிர் எழுத்து என்பதும், ‘ம் + ஐ’ ஆகிய இரண்டும் இணைந்து ‘மை’ என்னும் 10-ஆவது உயிர்மெய் எழுத்தாகப் பிறக்கும் என்பதைத் தொல்காப்பியர் அருளிய தொல்காப்பியம் ‘மெய்யோடு எய்யினும் உயிர் இயல் தெரியா’ எனக் கூறுகிறது.