×
Saturday 12th of October 2024

Nuga Best Products Wholesale

சிந்து சமவெளி முத்திரை கூறும் M-1390A யானையின் சிறப்பு


உள்ளடக்கம்

Indus seal M-1390A depict the significance of Elephant

இறைவன் படைத்த அனைத்து வகை சீவராசிகளில் மிகச்சக்தி வாய்ந்ததும் மிகப்பெரிய உடலுமுடையது யானை. அந்த யானையின் காட்சி, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி மன மகிழ்ச்சியை அளிக்கத்தக்கது.

மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற சர்பத்தை கயிராகவும், தேவர்கள் ஒரு புறமாகவும், அசுரர்கள் மறுபுறமாகவும் திருப்பாற்கடலைக் கடைந்த போது யானை வெளிப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு.

யானையின் திருவுருத்தை வணங்கி வழிபட்டு அதற்கு உணவு அளிப்பது மிகச் சிறந்த செயலாகக் கருதுவது பழந்தமிழர் மரபாகும். தமிழகத்திலுள்ள அருள்மிகு ஐயனார் கோவில்களில் அவரது ஊர்தியான யானையின் சுதைச் சிற்பங்களைக் காணலாம்.

தமிழகத்தை அரசாண்ட மன்னர்கள் தங்களது பட்டத்து யானையின் மீது அமர்ந்து வீதி உலா வந்தனர் என்பதை வரலாற்று நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. புதுகோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் 8000 ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், கறுஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளதுமான பாறை ஓவியம் ஒன்று அதற்கு ஒரு சான்றாகக் காட்சியளிக்கிறது.

சிவபெருமான் இட்ட பணியின் பேரில் தேவாதி தேவர்கள் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரை வெள்ளை யானை மீது அமர்த்தி கைலாயத்திற்கு அழைத்து சென்றதைப் பற்றி சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணம் கூறுகிறது.

மேற்கண்ட யானையின் சிறப்பைப் பற்றி பலவேறு நூல்களில் கூறப்பட்டுள்ளன. அவையாவன:

யானை அதிக மரியாதைக்குரிய விலங்காகவும், வடமொழியில் யானையை கஜ என்று குறிப்பிடுகின்றனர். 18 மங்கலகரமான சொற்களான சீர், மணி, பரிதி, “யானை”, திரு, நிலம், உலகு, திங்கள், கார், மலை, சொல், எழுத்து, கங்கை, நீர், கடல், பூ, தேர், பொன் ஆகியவற்றில் யானை என்றப் பெயர் சொல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறைவன் யானையின் மீது அமர்ந்து உலா வருவது ஆணவத்தையும், ஐம்புலன்களையும், அருள் என்னும் அங்குசத்தால் அடக்குவதைக் குறிக்கும் என தெய்வத்திரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள் “ஆலயம் ஏன்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் வெள்ளை யானையின் பெயர் ஐராவணம் என்பதாகும். இந்திரனின் வாகனமாகக் கருதப்படும் ஐராவதம் என்னும் நான்கு கொம்புகள் கொண்ட வெள்ளை யானை ஏழு மாமுழம் உயரமுடையதாகச் “செவ்வந்திபுராணம்” கூறுகிறது.

பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளைத் திக்பாலகர்கள் காத்தருளுவது போலவே எட்டு யானைகளும் காப்பதாகவும் கூறுப்படுவதுண்டு. அவற்றில் ஆண் யானைகளின் பெயர்கள் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பந்தம், சார்வபவுமம், சுப்ரதீகம் எனவும், பெண் யானைகளின் பெயர்கள் சுப்மிரமை, கபிலை, பிங்கலை, அனுபை, தாம்ரபர்ணி, சுபதந்தை, அங்களை, அஞ்சனாவதி எனக் கூறப்படுகின்றன.

திருக்கோவில்களில் யானைகளுக்கு அனுதினமும் பூசை செய்து வணங்குவது பழங்கால மரபு. அப்பூசையை கஜ(யானை) பூசை என்பர். அவ்வாறு யானையை பூசிப்பது அதன் உடலில் குடிகொண்டுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களைப் பூசிப்பதற்கு ஒப்பாகும் எனக் கூறப்படுகிறது.

யானையின் தலையில் பிரம்தேவரும், நெற்றியில் முருகப்பெருமானும், கண்களில் வீரபத்திரரும், மத்தகத்தில் சூரிய சந்திரர்களும், மூக்கில் முழுமுதல் கடவுளான விநாயகப்பொருமானும், மூச்சுக்காற்றில் மத்திரரும், முகத்தில் பாக்கிய இலக்குமியும், தந்தத்தில் வீரஇலக்குமியும், அதன் நுனியில் எமதர்மரும், கபாலத்தில் நரசிம்மமூர்த்தியும், நான்கு பாதங்களில் நான்கு மறைகளும், தும்பிக்கையில் மகாவிஷ்ணுவும், வயிற்றில் அக்னிதேவரும் குடி கொண்டுள்ளதாகக் சிற்பசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

சிருஸ்டி லயக்கிரமத்தின்போது மரம் போல பரந்து விரிந்த பாகுபாடுகள் எல்லாம் ஒரே பிண்டமாக, பெரிய உடலுடைய யானையைப் போல் ஒடுங்குவதைக் குறிக்கும் என்பர்.

அன்னை மகாலட்சுமியை அபிசேகம் செய்த போது யானை பிளிறி ஆனந்த ஒலியை எழுப்பியதாகவும், அதைக் கண்ட அன்னை மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஸ்ரீ சூக்தம் கூறுகிறது. அதற்குச் சான்றாக ஆதிலட்சுமி, கஜலட்சுமி, வரலட்சுமி ஆகிய மூன்று திருவுருவங்களை இரண்டு யானைகள் அபிசேகம் செய்வது போன்ற சிற்பங்களைத் தமிழகத்துச் சிற்பிகள் திருக்கோவில் கருவறை முன்வாசலின் மேலே வடிமைத்துக் காட்டியுள்ளனர்.

Indus seal M-1390A depict the significance of Elephant

மேற்கண்ட சிறப்புக்களைக் கொண்ட ஒரு யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள M-1390A என்ற சிந்து சமவெளி முத்திரையில் 7500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் எழுத்துக்களால் “சீ உரு யா” எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“சீ” என்பது திரு என்பதையும், “உரு” என்பது உருவமுள்ளது என்பதையும் “யா” என்பது யானை என்பதையும் குறிக்கும் சொற்களாகும். எனவே அம்முத்திரை “திரு உருவமுள்ளது யானை” என பழந்தமிழச் சொற்களால் யானையைப் பற்றிக் குறிப்பிடுவது ஒரு சிறப்புச் செய்தியாகும் என தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் குறிப்பிட்டுள்ளார்.

Also, read

Our Sincere Thanks to: 🙏 T.L.Subash Chandira Bose 🙏

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • July 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • May 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • May 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்