- July 6, 2022
உள்ளடக்கம்
🛕 கட்டங்கம் என்பதற்கு கட்டுவாங்கம், மழுவாயுதம், மாத்திரைக்கோள், தண்டு (தண்டம்) எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
🛕 அக்கட்டங்கத்தில் மனித தொடை எலும்பு, மனித மண்டை ஓடு, பாம்பு ஆகிய மூன்றும் காணப்படும். மனித தொடை எலும்பு தண்டுப் பகுதியாகவும், அதன் மேல் பகுதியில் மனித மண்டை ஓடும் பொருத்தப்பட்டிருக்கும். தண்டுப் பகுதியை சுற்றி கொண்டு மண்டை ஓட்டின் ஒரு கண் துவாரத்தின் வழியாக பாம்பு தன் தலையை நீட்டிக் கொண்டிருக்கும். இது சிவபெருமான் தனது திருக்கருங்களில் ஏந்திய ஆயுதங்களில் ஒன்றாகும் என்பதால் அவருக்கு கட்டங்கம் என்னும் மழுவாயுதம் கொண்ட ‘கட்டங்கன்’ என்ற சிறப்புப் பெயருண்டு.
🛕 அதற்குச் சான்றாக திருச்சி மாவட்டம், இலால்குடி (திருத்தவத்துறை) சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில், காஞ்சி ஏகாம்பர நாதர் திருக்கோவில், வாலீஸ்வரர் திருக்கோவில் ஆகியவற்றில் இந்தக் கட்டங்க ஆயுதத்துடன் சிவ வடிவங்களைக் காணலாம்.
🛕 ‘எல்’ எனப் பெயர் கொண்ட ஆதவனுக்கும், பாலை நிலைத்தின் தேவி என்னும் துர்க்கைக்கும் கட்டங்கம் ஓர் ஆயதமாகும்.
🛕 கட்டங்கத்தைச் சிவனடியார்கள் ஞானத்தின் சின்னமாகவும், சைவ சமயத்தின் அடையாளமாகவும் கூறுவர். சைவ சமயத்தின் ஒரு பிரிவான காபாலிகச் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் அதைக் கையில் வைத்திருப்பதுண்டு.
🛕 ‘கட்டங்கம் கையில் ஏந்துவான் காண்’ என்பது அப்பர் என்னும் திருநாவுக்கரசர் வாக்காகும். இரண்டாம் திருமுறையில் ‘கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன் (பா.1964)’ எனவும், சேரமான் பெருமான் இயற்றிய திருக்கயிலாய ஞானஉலா என்னும் திருப்பதிகத்தின் இறுதியில் ‘காபாலி கட்டங்கன் ஊரேறு போந்ததுவா’ எனவும் கூறுகின்றன.
🛕 வைகுந்த பெருமான் கோவில் கல்வெட்டு சாசனம் (S.I.I. Vol-II, no. 135 p.2), பல்லவ மாமன்னன் 2-ஆம் நந்திவர்மனுடைய முடிசூட்டு விழாவின் போது அவருக்கு செங்கோலுடன் கத்வாங்கம் என்னும் கட்டங்கம் முதலியன அளிக்கப்பட்டதாகக் கூறுகிறது.
🛕 திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி தாலுகா, பல்லபுரம் கல்வெட்டுச் சாசனம் ஒன்றில் கட்டங்கத்துடன் திருப்பாதங்கள், திருக்குறியீடு, செவ்வந்தி மலர், பீடத்துடன் கூடிய சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளதை, தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
🛕 அமெரிக்க நாட்டின் பழங்குடிகளான மாயா (மாயன்) மக்கள் விட்டுச் சென்ற எச்சங்கள் ஒன்றில் பாம்பு ஒன்று, தொடை எலும்பில் சுற்றிக் கொண்டு மண்டை ஓட்டின் கண் வழியாக தலையை நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி
Also, read