- July 6, 2022
உள்ளடக்கம்
அகில உலக நாகரிகங்களில் எல்லாம் மூத்த நாகரிகம் என்பது 7500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகமாகும். அந்நாகரிகத்திற்குச் சான்றாகத் திகழ்பவை சிந்து சமவெளி பகுதியில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளும், எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகளாகும்.
அவற்றில் கா-53எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை காளிபங்கன் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ. சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,
கா-53எ என்னும் இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான தொகுப்பு 1, பக்கம் 308 –லும், இதனைப் பற்றிய குறிப்புக்கள் பக்கம் 374-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த முத்திரை இந்தியா, புதுடெல்லியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
சதுர வடிவிலான இந்த முத்திரையின் இடது பகுதி உடைந்துள்ளது. இதில் முக்கோண வடிவிலான மூன்று மலைகளின் வடிவங்களும், அவற்றின் மேலே ‘ஈ’ என்னும் 4-ஆவது உயிர் எழுத்தும், பொறிக்கப்பட்டுள்ளன. இவை மலை ஈ என படிக்கப்படுகிறது.
மலை – பருவதம் (இமயமலை)
ஈ – ஈ என்னும் பறவை, குகை, தாமரை, பாம்பு, பார்வதி, திருமகள்.
பொருள்: இமயமலை அரசனால் வளர்க்கப்பட்ட பருவதவர்த்தினி என்னும் பார்வதி
இந்த முத்திரை பருவதவர்த்தினி, பர்வதராசகுமாரி, இமயவதி, மலைமகள் என்னும் பார்வதி தேவியின் எழலை (தோற்றத்தை) எழில் சொல்லுதல் என்னும் குறிப்பிற் சொல்லுவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.