- July 6, 2022
எம்-1323எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தற்போது பாகிஸ்தானில் உள்ளதொரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்,ஐ தொகுப்பு 1, பக்கம் 160-லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 439-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,
நீள் செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 9 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த இந்த எழுத்துக்கள் மிருதுவான துணி அல்லது மரப்பட்டை ஆகியவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக – ப + ளை + ய + ர்; + மோ + ன + ம்; (அ)ரு + ள், பளையர் மோனம் (அ)ருள் எனப் படிக்கப்படுகிறது.
இவற்றில் உள்ள ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ளை’ என்பது 16-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ய’ என்பது 11-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ர்’ என்பது 12-ஆவது மெய் எழுத்து, ‘மோ’ என்பது 10-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ம்’ என்பது 10-ஆவது மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ள்’ என்பது 16-ஆவது மெய் எழுத்து ஆகியவையாகும்.
பளையர் : விலங்கு முதலியவற்றை வளை வைத்து பிடிக்கும் வளையர் (வலையர்)
மோனம் : அமைதி, பேசாதிருத்தல்
(அ)ருள் : பொழிவு, கருணை, நல்வினை, ஏவல் (தூண்டுகை), சிவசக்தி
பொருள்: விலங்கு முதலியவற்றை வளை வைத்து பிடிக்கும் வளையர்களின் அமைதி சிவசக்தி.
பொருள் விளக்கம்: இவ்விடத்து விலங்கு முதலியவற்றை பளையர் என்னும் வளையர் (வலையர்) வளை வைத்து பிடிப்பதென்பது குறிப்பாக அனைத்து சீவாத்மாக்களை அமைதியாகத் தன்வசப்படுத்துவது சிவனிற் பிரியாத சக்தி என்பதைக் குறிப்பதாகக் கருதலாம்.