- July 6, 2022
எச்-651எ என்ற அடையாள எண்ணுடையதொரு சிந்து சமவெளி முத்திரை அரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முத்திரை பாகிஸ்தானில் உள்ளதொரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்,ஐ தொகுப்பு 2, பக்கம்- 307-லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 442-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சதுர வடிவிலான இந்த முத்திரையில் 4 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த இவ்வெழுத்துக்களை மிருதுவான துணி அல்லது மரப்பட்டையில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, உ + (இ)ட் + ட + ஆ. உ (இ)ட்ட ஆ எனப் படித்தறியக் கூடியது.
இவ்வெழுத்துக்களில் ‘உ’ என்பது 5-ஆவது உயிரெழுத்து, ‘(இ)ட்’ என்பது 5-ஆவது மெய்யெழுத்து, ‘ட’ என்பது 5-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ஆ’ என்பது 2-ஆவது உயிரெழுத்து ஆகியவையாகும்.
உ : சிவபெருமான், உமையம்மை
(இ)ட்ட : கொடுத்த, வைத்த, படைத்த
ஆ : சிற்றுயிர், ஆன்மா, ஆகுகை, ஆவது
பொருள்: சிவபெருமான் படைத்ததாகுகை.