- July 6, 2022
🛕 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலகட்டத்தைச் சார்ந்ததும், உலகின் மூத்த நாகரிகம் என்பதுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் ஒன்றானதுமான ‘இறந்தவர் மேடு’ எனும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட ஒரு தொல்லியல் அகழாய்வின் போது முத்திரை எண்: எம்;-1103எ கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது பாகிஸ்தானில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
🛕 இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு-2 முன் அட்டைப்படமாகவும், பக்கம் 116-லும் அச்சிடப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய மற்ற குறிப்புகள் பக்கம் 437-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
🛕 இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர், அறிவியல் ஆன்மிக விஞ்ஞானி தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவிக்கும் செய்தியாவது,
🛕 சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் ஒன்று, ஆறு, பத்து ஆகிய எண்களும், ஆழி என்பதைக் குறிக்கும் குறியீடும், ஆறு எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. எண் ஆறு என்பது ‘மே’ என்ற எழுத்தின் உள்ளேயும், ‘ரு, ரூ, ப ஆகிய மூன்று எழுத்துக்கள் இணைந்தும், ‘ம்’ என்ற எழுத்து தனித்தும், எண் பத்து என்பது பா’ என்ற எழுத்தின் உள்ளேயும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ் பகுதியில் ஒரு சிவபெருமானின் வாகனமான காளையின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.
🛕 புடைப்பு வகையைச் சார்ந்த எண்களும், குறியீடும், எழுத்துக்களும் துணி, மரப்பட்டை ஆகிய மிருதுவானவற்றில் அச்சிட்டு படித்தறியக் கூடியவை. இந்த முத்திரை, ஒரு+ஆழி+ஆறு+ மே+ரு+ரூ+ ப+ ம்+ பத்து+பா. ‘ஒரு ஆழி ஆறு மேருரூபம் பத்து பா’ எனப் படிக்கப்படுகிறது.
🛕 இவற்றில் உள்ள, ‘மே’ என்பது 10-வது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-வது உயிர்மெய் எழுத்து, ‘ரூ’ என்பது 12-வது உயிர்மெய் எழுத்து, ‘ப’ என்பது 9-வது உயிர்மெய் எழுத்து, ‘ம்’ என்பது 10-வது மெய் எழுத்து, ‘பா’ என்பது 9-வது உயிர்மெய் எழுத்து,
ஒன்று : எண்ணிக்கை, ஒற்றுமை
ஆழி : சக்கரப்படை, சக்கரம், வட்டம் – மண்டலம், பரிவேடம்
ஆறு : எண்ணிக்கை, பயன், அறம், சமயம் – நூல், வழி
மேருரூபம் : மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபிரான்
பத்து : எண்ணிக்கை, பத்து, பற்று
பா : பாட்டு, அழகு, தூய்மை
பொருள்: ஒற்றுமையான மண்டலத்தின் நூல் சிவபெருமானைப் பற்றிய பத்துப்பாட்டு
🛕 திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்துப்பாடல் என்னும் நூலைப் போன்ற அல்லது பதிற்றுப்பத்து என்னும் நூலைப் போன்ற, மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானைப் புகழ்ந்து பாடப்பட்ட பத்துப்பாட்டு என்னும் நூல் ஒன்று, ஒற்றுமையான மண்டலமாகக் கருதப்பட்ட சிந்து சமவெளியில் இருந்துள்ளதை இந்த முத்திரைக் குறிப்பிடுவதாகவும், அந்நூல் கிடைக்காமல் போய் இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.