×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

உள்ளம் என்னும் ஆன்மாவின் அழகு (சிறப்பு) தெய்வத்தன்மை


உள்ளடக்கம்

The Beauty of Soul is Divine Character

(சிந்து சமவெளி நாகரிக முத்திரை கூறுகிறது)

🛕 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டக் காலத்தைச் சார்ந்ததும், உலகின் மூத்த நாகரிகம் என்பதுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட அகழாய்வின் போது முத்திரை எண்: M-1684a கண்டெடுக்கப்பட்டுள்ளது.

🛕 இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 3.1, பக்கம் எண்: 14-லும் மற்ற குறிப்புகள் பக்கம் எண்: 415-லும்; குறிப்பிடப்பட்டுள்ளன.

🛕 இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் அறிவித்துள்ள செய்தியாவது:

🛕 சதுர வடிவிலான இந்த முத்திரையின், மேல் பகுதியில் நான்கு எழுத்துக்களும், ‘சீ’ என்பதைக் குறிக்கும் சீப்பு வடிவிலான குறியீடு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவம் ஒன்றும், பரம்மஞானம் (பரத்தை அறிந்தவன்) என்பதைக் குறிக்கும் குறியீடு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த முத்திரையில் வலமிருந்து இடமாகப் பொறிக்கப்பட்டுள்ள புடைப்பு எழுத்துக்களும், குறியீடும் மிருதுவான துணி, மரப்பட்டை போன்றவற்றில் அச்சிட்டு படித்து பொருள் அறியக் கூடியவை.

🛕 இந்த முத்திரை ‘உள் உரூ(பம்) சீ’ எனப் படிக்கப்படுகிறது. ‘உள்’ என்பதற்கு உள்ளிடம், உள்ளம் என்னும் ஆன்மா, மனம், இடம், உள்ளான் என்னும் பறவை எனவும், ‘உரூ(பம்)’ என்பதற்கு உருவம், வடிவம், அடையாளம், விக்கிரகம், நிறம், அழகு, நிலை, சாயை எனவும், ‘சீ’ என்பதற்கு திரு – திருமகள், சிறப்பு, அழகு, தெய்வத்தன்மை, பாக்கியம் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

🛕 அதாவது ‘உள் உரூ(பம்) சீ’ என்பதற்கு உள்ளம் என்னும் ஆன்மாவின் அழகு (சிறப்பு) தெய்வத்தன்மை என்பது தெரியவருகிறது. அதற்கு ஒரு சான்றாக “உள்ளம் பெருங்கோயில்” எனத் துவங்கும் திருமூலர் அருளிய திருமந்திரம் 1823-ஆவது பாடலைச் சுட்டிக்காட்டலாம்.

🛕 மேற்கண்டவற்றின் வாயிலாக 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளியில் வாழ்ந்த நாகரிக மக்கள் பழந்தமிழர்கள் என்பதும் அவர்களது தாய்மொழி பழந்தமிழ் மொழி என்பதும் தெரியவருவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Thanks,

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • July 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • May 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • May 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்