×
Saturday 12th of October 2024

Nuga Best Products Wholesale

சிவபெருமான் நெற்றிக்கண்


Lord Shiva Third Eye Story in Tamil

சிவபெருமானின் நெற்றிக்கண் (Sivan Netrikan)

🛕 அழித்தல் மற்றும் இறப்பிற்கான செயலைப் செய்பவர் இறைவன் சிவபெருமான். பிரம்மர் உயிரைப் படைப்பதும், விஷ்ணு படைக்கப்பட்ட உயிரை காக்கவும் இருக்கும்போது அந்த உயிருக்கு முக்தி அளிக்கக்கூடிய இறப்பை வழங்கும் இறைவனாக திகழ்பவர் சிவபெருமான்.

🛕  கோபம்:  சிவனின் கோபத்தை நினைத்து பார்க்கும்போது நமக்கு தோன்றுவது அவரின் நெற்றிக்கண் என்றறியப்படும் மூன்றாவது கண். இந்த நெற்றிக்கண் பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று நமக்கு அறிந்து கொள்ளும் ஆவல் தானாகவே வருவதுண்டு. இந்து மதத்தின் எல்லா நூல்களும் சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையிலும் இந்த கண் பற்றிய ரகசியம் வெவ்வேறாக உள்ளன.

What Will Happen if Shiva Opens his Third Eye

🛕  நெற்றிக்கண் திறப்பு:  இறைவன் சிவன் இந்த உலகத்தை அழிவிலிருந்து பல முறை காப்பாற்றியுள்ளார். அவருடைய நெற்றிக்கண் திறக்கும் போதெல்லாம் அது ஒரு சிக்கலான மற்றும் அவசர நேரங்களைக் குறிப்பதாக அறியப்படுகிறது. துன்பங்களுக்கு அழிவைக் கொடுக்கும் நேரமாகவும் இருக்கிறது.

🛕  சிவபெருமான் மற்றும் காமதேவன்:  ஒருமுறை காமதேவன் சிவனை தியானத்திலிருந்து கலைக்க முயற்சிக்கும்போது சிவபெருமான் கோபமடைந்து தன் நெற்றிக்கண்ணை திறந்தார். அவரது நெற்றிக்கண் காமதேவனை அழித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பாக உருவகப்படுத்தப்படுகிறது.

🛕 எந்த ஒரு பொருள் சார்ந்த உணர்வும் ஆன்மீக பாதையில் தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என்பது இதன் மூலம் அறியப்படுவதாகும்.

🛕  சிவபெருமானும் பார்வதி தேவியும்:  ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டுக்காக சிவனின் கண்களை மூடியதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக ஒரு கதை உண்டு. சிவபெருமானின் இரண்டு கண்கள் சூரியன் மற்றும் சந்திரன் என்று கூறப்படுகிறது. ஆகவே பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடியவுடன் இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. ஆகவே பிரபஞ்சத்திற்கு ஒளியை கொடுக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை திறந்ததாக கூறப்படுகிறது.

🛕  யோகிகளின் வழிகாட்டி:  சிவனின் நெற்றிக்கண் ஞான ஒளி மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும். எல்லாவற்றையும் அறிந்த யோகியாக சிவபெருமான் அறியப்படுகிறார். அவருக்கு பின்னால் வந்த யோகிகள் மற்றும் துறவிகளுக்கு அவர் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறார். சிவபெருமான் ஒரு யோகியாக இருந்து பல ஆண்டுகள் கடுமையான தவத்திற்கு பிறகு ஞான ஒளியைப் பெற்றார். இந்த மூன்றாவது கண் என்பது ஞானம் மற்றும் நீதியின் கண்ணாகும். அவருக்கு பின்னால் வரும் துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் விளங்குகிறார்.

🛕 உண்மையான எழுச்சி மற்றும் விழிப்புணர்வு இவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். சிவபெருமானின் மூன்றாவது கண் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை அவர் பார்க்க உதவுகிறது. அவரைப் பின்தொடர்ந்து வரும் துறவிகளும் எதிர்காலத்தைப் பற்றிய ஞானத்தை அறிந்து கொள்ளும் நிலையை அடைய வேண்டும். அதிகரித்த ஞானம் மற்று சித்தியை குறிப்பதாக இந்த மூன்றாவது கண் அமைகிறது.

🛕  ஒரு சாதாரண மனிதனின் வழிகாட்டி:  பொருள் சார்ந்த இந்த பூலோகத்தில் எல்லாவற்றையும் அடைந்திட நமது கண்கள் நமக்கு உதவுகிறது. இந்த கர்ம ஷேத்திரத்தில் நாம் வாழ்வதற்கு கண்கள் அவசியமாகிறது. கவர்ந்து இழுக்கும் இந்த உலகின் பொருட்கள் நமது ஆன்மீக சிந்தனைக்கு இடையூறாக இருக்கும். இந்த ஆன்மீக பாதை நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். இந்த பாதையை நாம் தேர்ந்தெடுக்கும் போது பல இடையூறுகள் நம்மை பாதிக்கும்.

🛕 அந்த நேரத்தில் நமது சிந்தனை ஒரு நிலைப்பட வேண்டும். நம்மை நாமே வழி நடத்தி சரியான பாதையில் பயணிக்க வேண்டும். இந்த எழுச்சி மற்றும் விழிப்புணர்வைக் குறிப்பது சிவபெருமானின் மூன்றாவது கண். கவனச் சிதறல் உண்டாகும் நேரத்தில் சற்று நிதானமாக நமது உண்மையான லட்சியம் என்ன என்பதை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.

🛕 எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மூன்றாவது கண் உள்ளது, அதாவது ஒழுக்கநெறிக்கான வழிகாட்டுதல் தேவைப்படும் சமயத்தில் அவர் விழிப்புடன் இருக்க அதனைப் பயன்படுத்த வேண்டும்.

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை