×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

108 அம்மன் போற்றிகள்


108 Amman Potri in Tamil

108 அம்மன் போற்றி

1. ஓம் அங்காள அம்மையே போற்றி
2. ஓம் அருளின் உருவே போற்றி
3. ஓம் அம்பிகை தாயே போற்றி
4. ஓம் அன்பின் வடிவே போற்றி
5. ஓம் அனாத ரட்சகியே போற்றி
6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி
7. ஓம் அன்னப்பூரணியே போற்றி
8. ஓம் அமுதச் சுவையே போற்றி
9. ஓம் அருவுரு ஆனவளே போற்றி
10. ஓம் ஆதி சக்தியே போற்றி
11. ஓம் ஆதிப்பரம் பொருளே போற்றி
12. ஓம் ஆதிபராசக்தியே போற்றி
13. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
14. ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி
15. ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி
16. ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி
17. ஓம் ஆதியின் முதலே போற்றி
18. ஓம் ஆக்குத் சக்தியே போற்றி
19. ஓம் இன்னல் களைவாளே போற்றி
20. ஓம் இடர்நீக்குவாளே போற்றி
21. ஓம் இமயத்து அரசியே போற்றி
22. ஓம் இச்சா சக்தியே போற்றி
23. ஓம் இணையிலா தெய்வமே போற்றி
24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி
25. ஓம் இயக்க முதல்வியே போற்றி
26. ஓம் இறைவனின் இறைவியே போற்றி
27. ஓம் இகம்பர சுகமே போற்றி
28. ஓம் ஈசனின் தாயே போற்றி
29. ஓம் ஈஸ்வரி தாயே போற்றி
30. ஓம் ஈகைப் பயனே போற்றி
31. ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி
32. ஓம் ஈசனின் பாதியே போற்றி
33. ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி
34. ஓம் ஈசனின் இயக்கமே போற்றி
35. ஓம் ஈஸ்வரி ஆனவளே போற்றி
36. ஓம் ஈகை குணவதியே போற்றி
37. ஓம் உண்மை பொருளே போற்றி
38. ஓம் உலகை ஈன்றாய் போற்றி
39. ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி
40. ஓம் உருவம் ஆனாய் போற்றி
41. ஓம் உமை அம்மையே போற்றி
42. ஓம் உயிரே வாழ்வே போற்றி
43. ஓம் உயிராய் இருப்பாய் போற்றி
44. ஓம் உடலாய் அ¬ந்தாய் போற்றி
45. ஓம் உமாமகேஸ்வரியே போற்றி
46. ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி
47. ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி
48. ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
49. ஓம் ஊரைக்காப்பாய் போற்றி
50. ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி
51. ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி
52. ஓம் ஊடல் நாயகியே போற்றி
53. ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி
54. ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
55. ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
56. ஓம் எங்களை காப்பாய் போற்றி
57. ஓம் எண்குண வல்லி போற்றி
58. ஓம் எழில்மிகு தேவி போற்றி
59. ஓம் ஏழிசைப் பயனே போற்றி
60. ஓம் ஏகம்பன் துணைவி போற்றி
61. ஓம் ஏகாந்த ருபிணியே போற்றி
62. ஓம் ஏழையை காப்பாய் போற்றி
63. ஓம் ஐங்கரன் தாயே போற்றி
64. ஓம் ஐயனின் பாகமே போற்றி
65. ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி
66. ஓம் ஐம்பொறி செயலே போற்றி
67. ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி
68. ஓம் ஒருமாரி உருமாரி போற்றி
69. ஓம் ஒன்பான் சுவையே போற்றி
70. ஓம் ஒலி ஒளி ஆனாய் போற்றி
71. ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி
72. ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
73. ஓம் ஒங்காரி ஆனாய் போற்றி
74. ஓம் ஒங்காரி அங்காளி போற்றி
75. ஓம் ஓம்சக்தி தாயே போற்றி
76. ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி
77. ஓம் ஒங்கார சக்தியே போற்றி
78. ஓம் கல்விக் கடலே போற்றி
79. ஓம் கற்பூர வல்லி போற்றி
80. ஓம் கந்தன் தாயே போற்றி
81. ஓம் கனகாம்பிகையே போற்றி
82. ஓம் கார்மேகன் தங்கையே போற்றி
83. ஓம் காளி சூலியே போற்றி
84. ஓம் காக்கும் அங்காளியே போற்றி
85. ஓம் சங்கரி சாம்பவீ போற்றி
86. ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி
87. ஓம் சாந்தவதியே போற்றி
88. ஓம் சிவகாம சுந்தரி போற்றி
89. ஓம் சினம் தணிப்பாய் போற்றி
90. ஓம் சிங்க வாகனியே போற்றி
91. ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி
92. ஓம் சுந்தரவல்லி போற்றி
93. ஓம் சூரசம்மாரி போற்றி
94. ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி
95. ஓம் தாட்சாயணிதேவி போற்றி
96. ஓம் திரிபுரசுந்தரி போற்றி
97. ஓம் தீபச் சுடரொளியே போற்றி
98. ஓம் நடன நாயகி போற்றி
99. ஓம் நான்மறைப் பொருளே போற்றி
100. ஓம் நீலாம்பிகையே போற்றி
101. ஓம் நீதிக்கு அரசி போற்றி
102. ஓம் பஞ்சாட்சரியே போற்றி
103. ஓம் பம்பை நாயகியே போற்றி
104. ஓம் பார்வதா தேவி போற்றி
105. ஓம் பாம்பின் உருவே போற்றி
106. ஓம் பார்புகழும் தேவியே போற்றி
107. ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
108. ஓம் பிறவி அறுப்பாய் போற்றி.

வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றியை சொல்லி வந்தால் தடைகள் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கும்.
Read, Also


3 thoughts on "108 அம்மன் போற்றிகள்"

  1. அன்னையின் அருளை பெற துணை புரிந்ததுக்கு நன்றி ஐயா. 🙏🙏🙏🙏

  2. Post chotanikkari bhagavati Amman 108 names

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 13, 2024
திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகள்
  • August 13, 2024
அவனிதனிலே பிறந்து - திருப்புகழ் 110
  • July 21, 2024
ஸ்ரீ தேவி பாகவத புராணத்தின் சாராம்சம்