- September 13, 2024
உள்ளடக்கம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பகவத் கீதா கிஞ்சிததீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன நசர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன நசர்ச்சா
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
க்ருபயா பாரே பாஹி முராரே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி:
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:
குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். நாம் போகும் காலம் வரும் போது நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க்கல்விகளில் நேரத்தை வீணாக்காதே. நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.
மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
ஏ மூடனே அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு. சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை. நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான். அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை. நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.
நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்
அழகான பெண்களின் அழகிய கொங்கைகளையும் வயிற்றுப் பிரதேசங்களையும் பார்த்து மயக்க ஆவேசம் அடையாதீர்கள். இவையெல்லாம் புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள் மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.
நளிநீ தள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்
தாமரை இலையில் தங்கி இருக்கும் நீரானது நிலையில்லாதது. அது போல வாழ்க்கையும் மிகவும் நிலையில்லாதது இந்த உலகில் எல்லாமும் எல்லாரும் வியாதியாலும் தற்பெருமையாலும் விழுங்கப்பட்டவர்கள் மேலும் (அந்த வியாதியாலும் தற்பெருமையாலும் ஏற்படும்) சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள் இதை நீ அறிவாய். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.
யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே
எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும் பின்னர் வலிவிழந்த நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே
எது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ அது வரையில் தான் உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள். உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால் இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
பாலஸ்தாவத் க்ரீடா சக்த:
தருணஸ்தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:
சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர். பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது. முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள். ஐயோ! பரம்பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
கா தே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயம் அதீவா விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:
யார் உனது துணைவி? யார் உனது புதல்வன்? இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது; பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது. நீ யாருக்கு உரியவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்? அந்த உண்மையை இப்போது எண்ணிப்பார் சகோதரனே.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:
அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும். பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும். மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும். அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: காசார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்ஸார:
இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்? நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்? செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்? உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்?
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா
த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா
மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்? .மூடனே ஏன் இந்த நிலை உனக்கு? உனக்கு இவை நல்ல கதி இல்லை. மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே. பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:
பகலும் இரவும்,மாலையும் காலையும், வாடையும் கோடையும் மீண்டும் மீண்டும் வருகின்றன. காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது. வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் என்ன ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா
செல்வம் எப்போதும் நிலைக்காதது. அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர். சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்; செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது. அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம். பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.
காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும். தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும். சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும். சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும். சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும். கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும்.
இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது. அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிட்டு
இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
Also, read
அத்புதம், ஆனந்தம்.
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ முடமதே.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Tqvm . I really appreciate it.
நன்றி
Thank you.. very good information of life.
Meaning not given for all stanzas. Please try to provide. Would appreciate.
Super I can clearly recognise it super work 👍👍👍
Thanks for your valuable feedback @Krishna
super . thanks
Valuable information.. இப்போ நான் இதை புரிந்து கொண்டேன்.. thank you..
Thank you for the valuable feedback.. 🙏
Really good and good effort
Thanks for your valuable feedback Mr. Govindan Balasubramani
அருமை..பஜகோவிந்தம் தெரிநது கொண்டேன். தமிழ் விளக்கமும் தெரிந்துகொள்ள உதவிட இயலுமா..நன்றி
கருத்துக்களுக்கு மிக்க நன்றி @சர்வ சத்ய தாஸ்! விளக்கத்தையும் பதிவிட்டுள்ளோம்..