- September 13, 2024
உள்ளடக்கம்
🛕 காஞ்சியில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்மனை போற்றி இயற்றப்பட்ட துக்க நிவாரண அஷ்டகம் இது இந்த அஷ்டகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் காஞ்சி காமாட்சியம்மன் படத்திற்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, மனமொன்றி இந்த அஷ்டகத்தை படிப்பதால் உங்களை பாடாய்படுத்தும் அனைத்து துன்பங்களும் நீங்கும். வீட்டின் தரித்திர நிலை மாரி, செல்வ சேகரம் ஏற்படும். குடும்பத்தினர் நலம் பெறுவார்கள். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் விலகி செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றிகளை அடையும்.
🛕 உயிர்களில் மனிதர்களை மட்டுமே துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் அதிகம் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் நமது கர்ம வினை பயன் காரணமாக நமக்கு ஏற்படுவதாக இருக்கிறது.அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக இருப்பவள் அன்னை பராசக்தி. உலகத்தை இயங்க செய்பவள். பண்டைய அகண்ட பாரதம் எனப்படும் தற்போதைய பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்த்து மொத்தம் சக்தி வழிபாட்டிற்குரிய 51 சக்தி பீடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் நகரத்தில் நின்று அருள்புரியும் காமாட்சி அம்மன் கோவில். அந்த காமாட்சி அம்மனின் அஷ்டகத்தை துதிப்பது அனைத்து நலன்களையும் வழங்கும்.
மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்
தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
துக்க நிவாரண அஷ்டகம் முற்றிற்று!
Also, read
Good