×
Sunday 24th of October 2021

Ganesha Pancharatnam – கணேச பஞ்சரத்னம்


Ganesha Pancharatnam Lyrics in Tamil with Meaning

கணேச பஞ்சரத்னம் விளக்கம்

1. முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலா தராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அநாயகைக நாயகம் வினாஸிதே பதைத்யகம்
நதாஸுபாஸு நாஸகம் நமாமி தம் விநாயகம் ||

மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்பொழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதி கொண்டோரைக் காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்று வணங்கியவரை குறைதீர்த்துக் காப்பவர்.

2. நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் |
ஸுரேச்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் ||

வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும் நாயகன், கஜாஸுரனுக்கும், கணங்களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.

3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம் |
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் ||

கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் க்ஷேமத்தைச் செய்தவர் விநாயகர். அவர் மேலும் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி, தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நன்மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.

4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்த்தி பாஜனம் |
புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம்பஜே புராண வாரணம் ||

ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர். பரமசிவனின் மூத்தமகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.

5. நிதாந்த காந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம்
தமேக தந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ||

மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.

6. மஹா கணேஸ பஞ்சரத்ன மாதரேண யோ(அ)ன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேஸ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத் ||

இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாறோ, அவர் நோயின்றி குறையேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

…கணேச பஞ்சரத்னம் ஸம்பூர்ணம்…

 

Also, read


2 thoughts on "Ganesha Pancharatnam – கணேச பஞ்சரத்னம்"

  1. NARAYANAN K says:

    Aanmeegam website services of translating sanskrit slokas in tamil is truly wonderful. It’s a great service to people and my humble tributes to them

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 16, 2021
சிவவாக்கியம் – சிவவாக்கியர் பாடல்கள் (301 - 450)
  • September 6, 2021
சிவவாக்கியம் - சிவவாக்கியர் பாடல்கள் (151 - 300)
  • July 30, 2021
ஶ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்திர சத நாமாவளி