×
Thursday 14th of September 2023

Nuga Best Products Wholesale

கோவிந்தாஷ்டகம்


Govindashtakam Lyrics in Tamil

கோவிந்தாஷ்டகம்

பாடல் : ஆதிசங்கரர்

ஸத்யம்ʼ ஜ்ஞான மனந்தம்ʼ நித்ய மனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ
கோ³ஷ்ட²ப்ராங்க³ண-ரிங்க²ணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் |
மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ பு⁴வனாகாரம்ʼ
க்ஷ்மாமாநாத²மநாத²ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

? சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம் இடைவெளியற்றது. (அனாகாசம்இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்) எனும் பரம்பொருள் மாட்டுத் தொழுவத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறான். அனாயாசமானவன் மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்). தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும் உருவமின்றியும் உலகே உருவாகவும் திகழ்வோன். ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும் தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்) பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை வணங்குவீர்.

ம்ருத்ஸ்நா மத்ஸீஹேதி யசோதா தாடன சைசவ ஸந்த்ராஸம்
வ்யாதித வக்த்ரா லோகித லோகா லோக சதுர்தசலோகாலிம்
லோகத்ரயபுரமூல ஸ்தம்பம் லோகா லோக மநாலோகம்
லோகேசம் பரமேசம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்.

? இங்கு மண்ணைத் தின்கிறாயே என யசோதை அடிக்க வருகையில் குழந்தைப்பருவத்தின் பீதியை அடைந்தவன். திறந்த வாயில் லோகாலோக பர்வதங்களுடன் கூடிய பதினான்கு லோகங்களைக் காட்டியவன். மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன். உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்) தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்) லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும் பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை வணங்குவீர்.

த்ரைவிஷ்டப-ரிபு-வீரக்⁴நம்ʼ க்ஷிதி-பா⁴ரக்⁴நம்ʼ ப⁴வ ரோக³க்⁴நம்ʼ
கைவல்யம்ʼ நவநீதாஹாரமநாஹாரம்ʼ பு⁴வனாஹாரம் |
வைமல்ய-ஸ்பு²ட-சேதோவ்ருʼத்தி-விஶேஷாபா⁴ஸ-மநாபா⁴ஸம்ʼ
ஶைவம்ʼ கேவல-ஶாந்தம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

? அமரர்பகையாம் அரக்கவீரரை அழிப்பவன் புவியின் பாரத்தை அழிப்பவன் பிறவிப்பிணியை அழிப்பவன் தானொருவனேயானவன் (கைவல்யம்) வெண்ணெய் உண்பவன் (நவநீதாஹாரம்) உணவற்றவன் (அனாஹாரம்) உலகனைத்தும் உண்பவன் (புவனாஹாரம்) மாசற்றுத் தெளிந்து சிறந்த மனவெளியில் தோன்றுபவன் தோற்றமற்றவன் மங்கள வடிவினன் (சைவம்) தனித்து மாறுபாடற்றிருப்பவன் (கேவல சாந்தம்) அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

கோ³பாலம்ʼ பூ⁴லீலா-விக்³ரஹ-கோ³பாலம்ʼ குல-கோ³பாலம்ʼ
கோ³பீகே²லந-கோ³வர்த⁴நத்⁴ருʼதி-லீலாலாலித-கோ³பாலம் |
கோ³பி⁴ர்நிக³தி³த கோ³விந்த³-ஸ்பு²ட-நாமாநம்ʼ ப³ஹுநாமாநம்ʼ
கோ³-தீ⁴-கோ³சர-தூ³ரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

? கோபாலன் விளையாட்டாய்ப் புவியில் கோபால உருவெடுத்தவன் கோபால குலத்தவன் கோபியருடன் விளையாடி கோவர்த்தனம் தூக்கி கோபர்களை லீலைகளால் சீராட்டியவன் பசுக்கள் கூவியழைக்கும் கோவிந்தா என்ற சிறப்பான பெயருடையவன் மிகப்பல பெயர்களுடையவன் புலன்களும் புத்தியும்  செல்லமுடியாத தூரத்திலிருப்பவன் அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

கோ³பீ-மண்ட³ல-கோ³ஷ்டீ²-பே⁴த³ம்ʼ பே⁴தா³வஸ்த²மபே⁴தா³ப⁴ம்ʼ
ஶஶ்வத்³கோ³கு²ர-நிர்தூ⁴தோத்³க³த-தூ⁴லீ-தூ⁴ஸர-ஸௌபா⁴க்³யம் |
ஶ்ரத்³தா⁴-ப⁴க்தி-க்³ருʼஹீதாநந்த³மசிந்த்யம்ʼ சிந்தித-ஸத்³பா⁴வம்ʼ
சிந்தாமணி-மஹிமாநம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

? சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன். வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன். வேற்றுமையற்றவன். பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன். சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன். அறியவொண்ணாதவன்.சத்தியப்பொருளென அறியப்படுபவன். சிந்தாமணியின் மகிமையுடையவன். அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

ஸ்னான-வ்யாகுல-யோஷித்³-வஸ்த்ரமுபாதா³யாக³முபாரூட⁴ம்ʼ
வ்யாதி³த்ஸந்தீரத² தி³க்³வஸ்த்ரா தா³துமுபாகர்ஷந்தம்ʼ தா: |
நிர்தூ⁴தத்³வயஶோகவிமோஹம்ʼ பு³த்³த⁴ம்ʼ பு³த்³தே⁴ரந்தஸ்த²ம்ʼ
ஸத்தாமாத்ரஶரீரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

? குளியலில் ஆழ்ந்த யுவதிகளின் ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டபின்பு திக்கே ஆடையாக நின்று தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை அருகில் அழைப்பவன். வேற்றுமையும் சோகமும் மோகமும் அற்றவன்.[வேற்றுமையும் சோகமும் மோகமும் அழிப்பவன்] அறிபவன் (புத்தன்) அறிவின் அகத்துள் இருப்பவன் உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன். அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

காந்தம்ʼ காரணகாரணமாதி³மநாதி³ம்ʼ காலக⁴நாபா⁴ஸம்ʼ
காலிந்தீ³-க³த-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோ³ஷக்⁴நம்ʼ
காலத்ரயக³திஹேதும்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||

? காந்தன் காரணங்களுக்கெல்லாம் காரணமானவன் முதலானவன் முதலற்றவன் கருமேகச்சுடர் காளிந்திப் பொய்கையில் காளியன் சிரத்தில் மீளமீள அழகுநடனம் புரிபவன் காலமானவன் காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன் அனைத்தையும் தோற்றுவிப்பவன் கலியின் தீங்குகளை அழிப்பவன் காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன் அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

ப்³ருʼந்தா³வனபு⁴வி-ப்³ருʼந்தா³ரகக³ண-ப்³ருʼந்தா³ராதி⁴த-வந்த்³யாங்க்⁴ரிம்ʼ
குந்தா³பா⁴மல-மந்த³ஸ்மேர-ஸுதா⁴னந்த³ம்ʼ ஸுமஹானந்த³ம் |
வந்த்³யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்³யாநந்த³-பத³த்³வந்த்³வம்ʼ
நந்த்³யாஶேஷ-கு³ணாப்³தி⁴ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

? பிருந்தாவன நிலத்தில் தேவர்களின் கூட்டங்களும் பிருந்தா முதலான கோபியரும் வணங்கும் பாதங்களையுடையவன். குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின் அமுதத்தால் மகிழ்விப்பவன். சிறந்த ஆனந்தமானவன். வணங்கத் தகுந்த மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடிகளையுடையவன். போற்றத்தகுந்த எண்ணற்ற நற்குணங்களின் கடலென விளங்குபவன். அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

? கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ கோகுலநாயகா கிருஷ்ணா எனக் கூறி இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர் கோவிந்தனின் பாதகமலத் தியானம்எனும் அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி தன் அகத்துள் இருக்கும் பரமானந்த அமுதமான அந்த கோவிந்தனை அடைவர்.

? எட்டு சுலோகங்களுக்குப் பின் பலசுருதியாக இப்பாடல் அமைந்துள்ளது. தோத்திரங்களின் வழக்கமான பலசுருதிகளைப் போல லௌகீக பலன்களைக் கூறாமல், ஞானமே பலனாகக் கூறப்பட்டது.

Also, readLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • July 30, 2023
ஶ்ரீ கருட தண்டகம் - Garuda Dandakam in Tamil
  • July 6, 2023
மீளா அடிமை உமக்கே ஆள் [திருப்பாட்டு 7 -ஆம் திருமுறை]
  • June 13, 2023
அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்