- September 13, 2024
உள்ளடக்கம்
ஓங்கார நக³ரஸ்த²ம் தம் நிக³மாந்த வநேஶ்வரம் ।
நித்யமேகம் ஶிவம் ஶாந்தம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 1॥
ஓம்கார நகரத்தில் வசிப்பவனும், வேதாந்த வனத்திற்கு ஈசுவரனும், என்றும் உள்ளவனும், ஒன்றேயானவனும், மங்களகரனும், சாந்த வடிவினனும், உமாதேவியின் புத்திரனமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.
வாசாமகோ³சரம் ஸ்கந்த³ம் சிது³த்³யாந-விஹாரிணம் ।
கு³ருமூர்திம் மஹேஶாநம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 2॥
வாக்கிற்கு எட்டாதவனும், சிவனிடமிருந்து துள்ளி வெளிப்பட்டவனும் சித்தாகிற தோட்டத்தில் ரமிக்கிறவனும், குருமூர்த்தியும் மகேசுவரனும், உமாதேவியின் புத்திரனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.
ஸச்சித³நந்த³ரூபேஶம் ஸம்ஸார-த்⁴வாந்த-தீ³பகம் ।
(ௐ ஶ்ரீ) ஸுப்³ரஹ்மண்யம் அநாத்³யந்தம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 3॥
சச்சிதானந்த வடிவினனும், சம்சார இருளுக்குத் தீபமானவனும், ஶ்ரீ சுப்ரமண்யனும், ஆதி அந்தம் இல்லாதவனுமான உமாதேவியின் புத்திரனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.
ஸ்வாமிநாத²ம் த³யாஸிந்து⁴ம் ப⁴வாப்³தே:⁴ தாரகம் ப்ரபு⁴ம் ।
நிஷ்கலங்கம் கு³ணாதீதம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 4॥
சுவாமிநாதனும், கருணைக் கடலுமானவனும், சம்சார சாகரத்தைத் தாண்டவைப்பவனும், பிரபுவும், களங்கமற்றவனும் (ஸத்வ, ரஜஸ், தமஸ்) குணங்களுக்கு அப்பால் உள்ளவனும், உமாதேவியின் புத்திரனுமான குகனை நமஸ்கரிக்கிறேன்.
நிராகாரம் நிராதா⁴ரம் நிர்விகாரம் நிராமயம் ।
நிர்த்³வந்த்³வம் ச நிராலம்ப³ம் வந்தே³ கு³ஹம் உமாஸுதம் ॥ 5॥
உருவமில்லாதவனும், எதனாலும் தாக்கப்படாதவனும், ஆனால் அனைத்திற்கும் ஆதாரமானவனும், மாற்றமில்லாதவனும், அழிவற்றவனும், இரண்டாவதாக எதுவும் இல்லாதவனும், (ஏகனும்), பற்றற்றவனும், உமாதேவியின் மைந்தனுமான குகனை நமஸ்கரிக்கிறேன்.
॥ இதி கு³ஹபஞ்சரத்னம் சம்பூர்ணம் ॥
Also, Read