- September 13, 2024
உள்ளடக்கம்
🛕 தமிழில் தோன்றிய சமயப் பாடல்களை சமயத்தின் அடிப்படையில் சைவம், வைணவம் என்று பிரித்துள்ளனர். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடல்களை பாடியவர்கள் நாயன்மார்களாகவும், திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடல்களை பாடியவர்கள் ஆழ்வார்கள் எனவும் அழைக்கப்பட்டனர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் பெரிதும் பங்காற்றினர் என்றால் அது மிகையாகாது. இந்த வரிசையில் தான் தமிழ்ப் பக்திப் பாடல்களும் உருவாகின.
🛕 சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்கள், ஒவ்வொருவரும் காலையில் கண் விழிக்கும் போதே பக்தி பாடல்களை கேட்டபடியே துயில் எழுந்தவர்களாக இருந்தனர். கிராமங்களில், சிறுநகரங்களில் அந்த பக்திப் பாடல்கள் அதிகாலையில் சத்தமாக ஒலிக்கவிடப்படும். கோவில்களிலும், தெருமுனைக் கடைகளிலும், வானொலி பெட்டிகளிலும் அந்த பக்திப் பாடல்களின் ஒலி அலை போல புறப்பட்டு வரும். சிலர் அவற்றைக் கேட்பதற்காக அது ஒலிக்கும் இடங்களுக்குப் போய் அமர்ந்து கொள்பவர்களும் உண்டு. அந்தக் குரல் அவர்களுக்குள் பெரும் நிம்மதியையும், உணர்வுப் பெருக்கையும் நிகழ்த்த அந்தக் காலைகள் அவர்களுக்கு மிகவும் அழகானதாக விடிந்தன. அந்த வரிசையில் திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்களால் பாடப்பட்டது தான் அன்னை துர்கா தேவியை போற்றிப் பாடும் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் என்ற பாடல். ஏறத்தாழ இந்த பாடலைக் கேட்காத, அறியாத, பாடாத தமிழர்கள் இல்லை என்றேக் கூறலாம். இன்றளவும் பல திருக்கோவில்களிலும், வீடுகளிலும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்.
🛕 அன்னை துர்கா தேவி துன்பத்தைப் போக்குபவள். துர்க்கையை வேண்டி வழிபட பல வழிமுறைகள் இருந்தாலும் கூட, ஆலயத்திற்கு சென்று துர்கா தேவியின் சன்னதியிலும், வீடுகளில் பூஜையறையில் அன்னையின் திருவுருவ படத்தின் முன்பாகவும் இந்தப் பாடலைப் பாடி துர்கா தேவியின் அருளாசிகளைப் பெற்றுச் செல்கிறார்கள் பக்தர்கள். கூட்டுப் பிரார்த்தனைகளிலும் இந்த பாடல் பாடப்படுவதை நாம் கோவில்களில் காண முடியும். அதிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அன்னை துர்கா தேவியின் சன்னதி முன்பாக இந்தப் பாடலைப் மனமுருக பாடி வழிபடுவதன் வாயிலாக வளமான வாழ்விற்கு தேவையான அனைத்து அனுக்கிரங்களையும் அன்னையிடமிருந்து பெற முடியும் என்பது ஐதீகம். அந்த பாடல் வரிகளைத் தான் பக்தர்களுக்காக இங்கே தந்திருக்கிறோம்.
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்ககண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
Also, read