×
Wednesday 28th of September 2022

Nuga Best Products Wholesale

கந்த சஷ்டி கவசம்


Kantha Sasti Kavasam Lyrics in Tamil

Kandha Sasti Kavasam

கந்த சஷ்டி கவசம்

Read Kanda Sasti Kavasam in English

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி..

நூல்

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவணபவனார் சடுதியில் வருக
ரகணபவச ரரரர ரரர
ரிகண பவச ரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீராநமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென்

வசர ஹணபவ வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னையாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்
பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க

விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை யழகும் இணைமுழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொக மொக மொகமொக மொக மொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்றும்

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலைவைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரலடியினை அருள் வேல் காக்க
கை களிரண்டும் கருணை வேல் காக்க

முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க

எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்
அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்

கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
ஆனையடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டியுருட்டு கால் கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதி
பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்தரணை பருஅரையாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய்
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக

உன்னைத் துதிக்க உன்திருநாமம்
சரவணபவனே சைலொளிபவனே
திரிபுரபவனே திகழொளிபவனே
பரிபுரபவனே பவமொழிபவனே
அரிதிருமுருகா அமராபதியைக்

காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாள் பாலகுமரா
ஆவினன் குடிவாள் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா
சமரா புரிவாழ் சண்முகத்தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்னா விருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்
கந்தசஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடனாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடனொரு நினைவதுமாகி
கந்தர் சஷ்டி கவச மிதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்

மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
கந்தர் கை வேலாம் கவசத்தடியை

வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வசத்துரு சங்காரத்தடி

அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாக
சூரபத்மாவைத் துணித்தகையதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குற மகள் மன மகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோர் அரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்..!

🛕 கந்த சஷ்டி கவசம் என்பது முருகப்பெருமானை போற்றி பாடும் கவசம் ஆகும். தேவார சுவாமிகள் இதை நமக்கு அருளினார். கந்த சஷ்டி கவசம் முதன் முதலில் திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது என்று கூறப்படுகிறது. கந்த சஷ்டி கவசம் அதை முருகப்பெருமான் படத்தின் முன்பு நின்றோ அல்லது முருக பெருமான் கோவில்களிலோ அல்லது அறுகோண சக்கரத்தின் முன்போ பாடலாம்.

Kantha Sasti Kavasam Benefits in Tamil

கந்த சஷ்டி கவசம் பலன்

🛕 முருக பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய் கிழமைகளிலும் சஷ்டி மற்றும் முருகனுக்கு உகந்த இதர நாட்களிலும் இந்த கவசத்தை பாடினால் அதிக பலன்களை பெறலாம். சஷ்டியில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் அதை பாராயணம் செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

🛕 அறிவியல் ரீதியாக பார்க்கையில் கந்த சஷ்டி கவசம் மனிதர்களின் உடலிற்கு ஒரு மிக சிறந்த கவசமாக விளங்குகிறது. இதற்க்கு நாம் கந்த சஷ்டி கவசம் அதில் வரும் வரிகளை உற்று நோக்கினால் புரியும். உதாரணத்திற்கு மார்பை இரத்தின வடிவேல் காக்க என்ற வரியை எடுத்துக்கொள்வோம். இந்த வரையை நாம் உச்சரிக்கையில் நமது மனமானதும் மூளையும் மார்பை உற்று நோக்கும். இதன் காரணமாக நமது மார்பில் ஏதாவது கோளாறு தென்பட்டால் நமது மூளையானது உடனே அந்த கோளாறை சரி செய்ய முயற்சிக்கும். இப்படி கந்த சஷ்டி கவசம் அதில் நமது உடலில் உள்ள பல பாகங்களின் பெயரை கூறி அதை முருகப்பெருமான் காக்க வேண்டும் என்று கூறுகிறோம். அப்படி கூறுகையில் நமது உடலில் பல பாகங்கள் நம்மை அறியாமலே சரி செய்யப்படுகிறது. ஒருவர் தொடர்ந்து ஒருமண்டலம் தினமும் இரண்டு முறை கந்த சஷ்டி கவசம் அதை கூறி வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கும். மேலே கந்த சஷ்டி கவசம் வரிகள், கந்த சஷ்டி கவசம் பாடல் மற்றும் கந்த சஷ்டி கவசம் வீடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை பயன்படுத்தி கந்த சஷ்டி கவசம் அதை கூறி முருக பெருமானின் அருளை பெறலாம்.

🛕 உலகில் தோன்றி இன்று வரை தங்களின் பண்பாடு மற்றும் வாழ்வியலில் பெரிய அளவில் பிற கலாச்சாரங்களின் தாக்கமில்லாமல் இன்று வரை உயிர்ப்புடன் இருப்பது தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடு ஆகும். அப்படிப்பட்ட தமிழர்களின் இறைத்தன்மை கொண்ட மொழியான “தமிழ்” மொழியில் இறைவனைப் போற்றி வணங்கும் சிறந்த பாடல்கள் பல உள்ளன. அதிலும் தமிழர்களின் “காக்கும் கடவுளான” “கந்தனாகிய” “முருகப்பெருமானுக்கு” பல பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அப்படி முருகப்பெருமானின் மீது இயற்றப்பட்டு அனைவராலும் பரவலாக அறியப்பட்ட பாடல் தான் “கந்த சஷ்டி கவசம்“.

Kantha Sasti Kavasam History in Tamil

கந்த சஷ்டி கவசம் வரலாறு

🛕 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “தேவார சுவாமிகளால்” எல்லாம் வல்ல அந்த முருகப் பெருமான் மீது இயற்றப்பட்டது தான் இந்த “கந்த சஷ்டி கவசம்”. இந்த கந்த சஷ்டி கவசப் பாடல் உண்மையிலே ஒரு மிகச் சிறந்த படைப்பாகும். ஏனெனில் சிறந்த முருகப் பெருமான் பக்தராகிய அருணகிரிநாதர் அந்த முருகனின் புகழைக் கூறும் தெய்வீகமான “திருப்புகழ்” என்ற பாடல்கள் கொண்ட தொகுப்பை இயற்றிய பிறகு அவரைப்போலவே ஒரு தெய்வீகத்தன்மை கொண்ட இந்த கந்த சஷ்டி கவசத்தை இயற்றியுள்ளார் தேவார சுவாமிகள். இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் முதன் முதலில் “திருச்செந்தூரின்” கடற்கரையில் அரக்கர்களை வதம், புரிந்து அங்கே “செந்திலாண்டவராக” ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் முருகப்பெருமானின் சந்நிதியில் முதன் முதலாக பாடப்பட்டு, அரங்கேற்ற பட்டதாக கூறப்படுகிறது.

🛕 இந்த கந்த சஷ்டி கவசம் தெய்வாம்சம் கொண்ட தமிழ் மொழியை கற்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் இந்த சஷ்டி கவசம் பாடல் முழுவதும் நாம் அன்றாடம் பேசுவதற்கு பயன்படும் பெரும்பாலான தமிழ் மொழியின் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் சில “செந்தமிழ்” எனப்படும் தூய தமிழ் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. கந்த சஷ்டி கவசம் அதை நாம் தொடர்ந்து சத்தமாக படித்து வரும் போது, நாம் பேசும்போது நமக்கு எளிதில் உச்சரிக்க வராத தமிழ் வார்த்தைகளை நாம் நன்கு உச்சரிக்க கற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழ் மொழியின் “இலக்கணம், எதுகை- மோனை, நடை, சந்தம்” போன்றவற்றை கற்றுக்கொள்வதற்கு ஒரு சிறந்த வழி இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் அதை படிப்பதாகும்.

Kandha Sasti Kavasam Manthiram

கந்த சஷ்டி கவசம் மந்திரம்

🛕 கந்த சஷ்டி கவசம் சிறந்த ஒரு மந்திர அதிர்வுகளைக் கொண்ட பாடலாக இருக்கிறது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கடவுளாகிய முருகப் பெருமானை முதன்மைக் கடவுளாகக் கொண்டு, சில சித்தர்கள் அம்முருகப்பெருமானுக்கு கோவில்களையும் அம்முருகனைப் போற்றி சில பாடல்களையும் அப்பாடல்களில் வடமொழியான சமஸ்கிருதத்திற்கு நிகரான “தெய்வீக மற்றும் நேர்மறையான” அதிர்வுகளைக் கொண்ட பல தமிழ் எழுத்துக்களை அவர்களின் பாடல் வரிகளில் பயன்படுத்தியிருப்பர். அந்த சித்தர்களின் மரபை பின்பற்றிய இந்த புலவரும் மந்திர அதிர்வுகளைக் கொண்ட பல தமிழ் எழுத்துக்களை இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார். கந்த சஷ்டி கவசம் பாடலை தொடர்ந்து காலை மாலை வேளைகளில் பாடி வர நமக்கு நமது உடலில் அனைத்து பகுதிகளிலும் இப்பாடலின் மந்திர அதிர்வுகள் ஊடுருவி சென்று நமது உடலிலும் மனத்திலும் ஒரு நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும்.மேலும் நவ கோள்களின் தீய பலன்கள் நமக்கு ஏற்படாமல் காக்கும். கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்திகள், பிறரின் பொறாமை, வஞ்ஜக எண்ணங்கள், பிறர் நமக்கு செய்த பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளிலிருந்து நம்மை காக்கும்.

Kandha Sasti Kavasam Science in Tamil

கந்த சஷ்டி கவசம் அறிவியல்

🛕 கந்த சஷ்டி கவசம் அறிவியல் பூர்வமாக இயற்றப்பட்ட ஒரு பாடலாக கூடக் கூறலாம். ஏனெனில் இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது. எனவே இந்த கந்த சஷ்டி கவசப் பாடலை 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பாடச் செய்வதின் மூலம் அவர்களின் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். அக்குழந்தைகளிடம் புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் திக்கு வாய் மற்றும் பேச்சாற்றலில் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை இந்த கந்த சஷ்டி கவசம் பாடலை அவ்வப்போது வாய்விட்டு படிக்க ஊக்குவிப்பதின் மூலம், அவர்களின் அத்தகைய குறைபாடுகள் நீங்குவதை நாம் காண முடியும்.

🛕 கந்த சஷ்டி கவசம் பாடலை மாதந்தோறும் வரும் வளர்பிறை சஷ்டி தினத்தன்று பாடுவதால் அந்த முருகப்பெருமானின் அருளால் நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து துன்பங்களும். நீங்கும். மேலும் முருகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில், காலையில் வீட்டிலோ அல்லது முருகனின் சந்நிதியிலோ பாராயணம் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும். மேலும் “கார்த்திகை” மாதத்தில் வரும் “கந்த சஷ்டி விரத” காலத்தில் காலையில் குளித்து, முடித்து விட்டு வீட்டின் பூஜையறையில் அமர்ந்து முருகனின் படத்திற்கு பூக்கள் சூட்டி, தீபமேற்றி முருகனை மனதார தியானித்து, கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி வர, அவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் அந்த கந்தனாகிய முருகப் பெருமான்.

Also, read18 thoughts on "கந்த சஷ்டி கவசம்"

 1. N Balasubramani says:

  காந்தி சஷ்டி கவசம்–spelling mistake

  1. ஆன்மிகம் says:

   Thank you so much sir, we updated.

 2. Pls correct these lines –

  முந்து முந்து முருகவேள் முந்து
  வெட்சி புனையும் வேலே போற்றி

  1. ஆன்மிகம் says:

   Thanks Mathan!

 3. ராஜேஸ்வரி says:

  இடும்பனை அழித்த இனியவேல் முருகா என திருத்தவும்

  1. ஆன்மீகம் says:

   மிக்க நன்றி!

 4. Dr.Anandavalli. says:

  After எப்பொழுதும் எனை எதிர் வேல் காக்க __தாமதம் நீங்கி சதுர் வேல் காக்க வராது.
  Another line உன்னைத் துதிக்க என்று வரும்.
  Another line எந்தை முருகனைப் பாடினேன் என்று வரும்.

 5. Dr.Anandavalli. says:

  Few mistakes are there in the lyrics.Kindly correct it.After கனக வேல் காக்க, வரும் பகல் தன்னில் வஜ்ர வேல் காக்க என்று வரும்..After அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய், திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர் என்று வரும். குற மகள் மன மகிழ் கோவே என்று வரும்.

  1. ஆன்மீகம் says:

   மிக்க நன்றி @ Dr.Anandavalli 🙏 🙏 🙏

 6. Overall spelling mistakes…Please change it

  1. ஆன்மீகம் says:

   Please send us where you can see the spelling mistakes..

 7. Hi ,in this many lines missed ,,, pls include it ,,, u guys removed few lines ,,

  1. ஆன்மீகம் says:

   Thank you @Priya for your feedback.. We updated as requested. Please check and let us know if any mistakes.

   1. Thank u ,,, daily I ll ready this lines in ur page ,, one line r printed two times ,,, pls check it ,, otherwise ok ,, good job ,,

    1. ஆன்மீகம் says:

     Thank you so much Priya! We removed that line..

 8. அ.ஆறுமுகம் says:

  வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

Leave a Reply

Your email address will not be published.

you may also like

 • September 18, 2022
மகாவிஷ்ணு 10 அவதார காயத்திரி மந்திரங்கள்
 • September 7, 2022
சிவ சஹஸ்ர நாமாவளி
 • September 3, 2022
துர்கா சப்தசதி - ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி