×
Thursday 8th of June 2023

Nuga Best Products Wholesale

கார்த்திகேய ஸ்தோத்ரம்


Pragya Vivardhana Kartikeya Stotram

ஶ்ரீ கார்த்திகேய ப்ரஜ்ஞயா விவர்தன ஸ்தோத்ரம் (முருகனே உபதேசித்தது)
அறிவுத் திறன் பெருக, செவ்வாய் கிரஹ பாதிப்புகள் நீங்க கீழ்க்காணும் சுலோகத்தை தொடர்ந்து கூறிவர நல்ல பலன் கிடைக்கும்.

ஶ்ரீ கணேசாய நம;
ஶ்ரீ கந்த உவாச.

||ப்ரஹ்ம மேதயா||
||மது மேதயா||
||ப்ரஹ்ம மேவ மது மேதயா||

அஸ்ய ஶ்ரீ ப்ரஞா விவர்தன ஸ்தோத்ர மந்த்ரஸ்ய|
ஸனத் குமார ரிஷி: கார்த்திகயோ தேவதா|
அனுஷ்டுப் சந்த: மம சகல வித்யா ஸித்யர்த்தே ஜபே விநியோக||

யோகீச்வரோ, மஹாஸேன: கார்த்திகேயோ(அ)க்னி நந்தன:
ஸ்கந்த: குமார: ஸேனானீ: ஸ்வாமீ சங்கர ஸம்பவ:
காங்கேயஸ்தாம்ர சூடச்ச ப்ரஹ்மசாரீ சிகித்வஜ:
தாரகாரி ருமாபுத்ர: க்ரௌஞ்சாரிச்ச ஷடானன:

சப்தப்ரஹ்ரம ஸமுத்ராச்ச, ஸித்த: ஸாரஸ்வதோ குஹ:

ஸனத் குமாரோ பகவான் போக மோக்ஷ பலப்ரத:
சரஜன்மா கணாதீஸ: பூர்வஜோ, முக்திமார்க க்ருத்,
ஸர்வாகம ப்ரணேதாச வாஞ்சிதார்த ப்ரதர்சன:
அஷ்டாவிம்சதி நாமானி, மதீயானீ யஹ் படேத்,
ப்ரத்யூஷம் ச்ரத்தயா யுக்தோ மூகோ வாசஸ் பதிர்ப்பவேத்,

மஹா மந்த்ரமயா நீதி மம நாமானு கீர்தனம்,
மஹா ப்ரஞா மவாப்னோதி நாத்ர கார்யா விசாரணா.

இதி ஸ்ரீ ருத்ரயாமலே ப்ரஞா விவர்த்தனாக்யம்
ஸ்ரீமத் கார்த்தகேய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

பொருள்: யோகீஸ்வரனாகவும், மகாஸசேனைகளுக்குத் தலைவராகவும் விளங்குபவரே, கார்த்திகேயன் என்றும், அக்னியில் இருந்து உதித்தவர் என்றும் போற்றப்படுபவரே, கந்தன், குமாரன், தேவ சேனாபதி, சங்கர புத்திரன், காங்கேயன், மயில் வாகனன், தாரகாசுரனை அழித்தவன், உமா புத்திரன், கிரௌஞ்ச மலையை அடக்கியவன், ஆறுமுகன், ஏழு கடலும் தொழுபவன், சரஸ்வதிக்குப் பிரியமான குகன், சனத் குமாரன், இம்மையும், மறுமையும் அருள்பவரே என்றெல்லாம் பக்தர்களால் துதிக்கப்டும் கார்த்திகேயனே உம்மை வணங்குகறேன்.

 

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • June 3, 2023
அருள்மலை முருகன் கோவில், தோரணவாவி
  • May 29, 2023
பாம்பாட்டி சித்தர் பாடல்கள்
  • May 26, 2023
சேவல் விருத்தம் – அருணகிரிநாதர் அருளியது