×
Sunday 13th of October 2024

Nuga Best Products Wholesale

சதாசிவாஷ்டகம்


Sri Sathashiva Ashtakam

பதஞ்சலி முனிவர் அருளிச் செய்த மங்களங்கள் அருளும் சதாசிவாஷ்டகம்

பதஞ்ஜலி உவாச:

ஸுவர்ண பத்மினீ தடாந்த திவ்ய ஹர்ம்ய-வாஸினே
ஸுபர்ண வாஹன ப்ரியாய ஸுர்யகோடி-தேஜஸே।
அபர்ணயா விஹாரிணே பணாதரேந்த்ர-தாரிணே
ஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 1 ॥

பொருள்:
பொற்றாமரைக் குளக்கரையில் உள்ள கோயிலில் வீற்றிருப்பவர், கருடனை வாகனமாகக் கொண்ட மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவர். கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் இலையைக் கூட உண்ணாமல் தவம் புரிந்த உமாதேவியுடன் விளங்குபவர், சர்ப்ப ராஜனை ஆபரணமாகத் தரித்தவரும், என்றைக்கும் மங்களமானவரும் ஆகிய சிவபெருமானுக்கு எப்போதும் நமஸ்காரம்.

ஸதுங்க பங்கஜானுஜா ஸுதான்சு கண்ட மௌளயே
பதங்க பங்கஜாஸு ஹ்ருத் க்ருபீட யோனி சக்ஷுஷே ।
புஜங்கராஜ-மண்டலாய புண்யஸாலி பாந்தவே
ஸதா நமச்சிவாய தே ஸதா சிவாய சம்பவே ॥ 2 ॥

பொருள்:
தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையையும். பிறை சந்திரனையும் தலையில் தரித்துக் கொண்டவரும், சூரியன், சந்திரன் அக்னி நெற்றிக்கண் முதலியவைகளைக் கண்களாக உடையவரும், ஸர்ப்பத்தைக் குண்டலங்களாக சூடியவரும், புண்யம் செய்தவர்களின் பந்துவாக இருப்பவரும், மங்களத்திற்கு இருப்பிடமாக இருப்பவரும் எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவருமான மங்கள மூர்த்திக்கு எங்களது நமஸ்காரம்.

சதுர்முகானனாரவிந்த-வேதகீத பூதயே
சதுர்புஜானுஜசா சரீர சோபமான மூர்த்தயே ।
சதுர்விதார்த்த தான சௌண்ட தாண்டவ ஸ்வரூபிணே
ஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 3 ॥

பொருள்:
நான்முகனாகிய பிரம்ம தேவனின் தாமரை போன்ற முகங்களில் உள்ள நான்கு வேதங்களினால் துதிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவரும், மஹாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியால் அலங்கரிக்கப்பட்ட அர்த்த நாரீஸ்வரரும், நாலாவிதமான தர்ம, காம, மோக்ஷங்களைக் கொடுப்பவரும், மிகத் திறமை வாய்ந்த தாண்டவ மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

சரண்னி சாகர ப்ரகாச மந்தஹாச மஞ்ஜுலா
தர ப்ரவாள பாசமான வக்த்ர மண்டல ஸ்ரியே ।
கரஸ்புரத் கபாலமுக்த ரக்த விஷ்ணு பாலினே
ஸதா நமச்சிவாய தே சதாசிவாய ஸம்பவே. ॥ 4 ॥

பொருள்:
சரத்கால சந்திரனைப் போன்ற வெண்மையான புன்சிரிப்பால் அழகுடையவையும் பவளம்போல் சிவந்த உதடுகளால் பிரகாசிப்பவையுமான ஐந்து முகங்களின் ஒளியைப் பூண்டவரும், பைரவ கோலத்தில் கையில் ஏந்திய கபாலத்தில் விஷ்ணுவின் உதிரத்தை பிக்ஷையாக ஏற்றவரும் என்றும் மங்கள மூர்த்தியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

ஸஹஸ்ர புண்டரீக பூஜனைக ஸூன்ய தர்ஸனாத்
ஸஹஸ்ரநேத்ர கல்பிதார்ச்சனாச்சுதாய பக்திதஃ ।
ஸஹஸ்ரபானுமண்டல ப்ரகாச சக்ரதாயினே
ஸதா நமஸச்சிவாய தே சதாஸசிவாய ஸம்பவே ॥ 5 ॥

பொருள்:
சதாசிவனுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு பூஜை செய்யும்போது ஒரு தாமரை மலர் மறைந்து போனதால் தமது கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்த ஸ்ரீமன் நாராயணணுக்கு ஆயிரம் சூரிய பிரகாசம் வாய்ந்த சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகக் கொடுத்தருளியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

ரஸாரதாய ரம்ய பத்ர பரூத்ரதாங்க பாணயே
ரஸாதரேந்த்ர சாபசிஞ்சினீக்ருதா நிலாசினே |
ஸ்வஸாரதி க்ருதா ஜநுன்ன வேதரூபவாஜினே
ஸதா நமச்சிவாய தே சதாசிவாய சம்பவே || 6 ||

பொருள்:
திரிபுர சம்ஹார காலத்தில் பூமியை தேராகவும் மஹாவிஷ்ணுவை அழகான அம்பாகவும் மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், ப்ரஹம் தேவனை ஸக்ஷ்ரதியாகவும், நான்கு வேதங்களை தேர் குதிரையாக உடையவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள் மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

அதிப்ரகல்ப வீரபத்ர சிம்ஹநாத கர்ஜித
ச்ருதி ப்ரபீத தக்ஷ யாக போகிநாக சத்மனாம் ।
கதி ப்ரதாய கர்ஜிதாகிலப்ரபஞ்ச ஸாக்க்ஷிணே
ஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே ॥ 7 ॥

பொருள்:
தக்ஷயாகத்திற்கு வந்திருந்த பாதாளவாசிகள், ஸ்வர்கவாசிகள், மிக பெரிய சரீரத்தையுடைய வீரபத்ருடைய சிங்கத்திற்கு ஒப்பான கர்ஜனையைக் கேட்டு பயந்தனர். பயந்தவர்களுக்கு அபயம் / உயிரை அளித்தவரும், அப்பொழுது சப்தித்த ஸர்வப்ரபஞ்சங்களுக்கும் ஸாக்ஷியாய் இருந்தவருமான மங்கள மூர்த்திக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

ம்ருகண்டு சூனு ரக்ஷணாவ தூத தண்டபாணயே
சுகந்த மண்டலாஸ்புரத் ப்ரபா ஜிதாம்ருதம்சவே
அகண்டபோக ஸம்பதர்த்த லோக பவிததாத்மனே
ஸதா நமச்சிவாய தே ஸதாசிவாய ஸம்பவே. ॥ 8 ||

பொருள்:
மார்க்கண்டேயரைக் காப்பதற்காக யமனை வெறுத்தவரும், சந்திரனே தோல்வியுறும்படி, அழகிய காந்தியுக்த, பிரகாசிக்கின்ற கன்னங்களை உடையவரும், வேண்டுபவர்களுக்கு இகபர சௌபாக்கியம் தருகிறவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

மதுரிபு விதி சக்ர முக்ய தேவைரபி
நியமார்ச்சித பாத பங்கஜாய கனககிரி |
சராசனாய துப்யம் ரஜத
சபாபதயே நமச்சிவாய.॥ 9 ॥

பொருள்:
மஹாவிஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் நியமனத்துடன் பூஜிக்கப்பட்ட பாதகமலங்களை உடையவரும், மேரு பர்வதத்தை வில்லாக உடையவரும் வெள்ளியம்பலத்திற்கு அதிபதியாகிய நமச்சிவாயத்திற்கு எப்பொழுதும் நமஸ்காரம்.

ஹாலாஸ்ய நாதாய மஹேஸ்வராய
ஹாலாஹலாலங்க்ருத கந்தராய ।
மீனேக்க்ஷணாய: பதேய சிவாய
நமோ நம சுந்தர தாண்டவாய ||10||

பொருள்:
ஹாலாஸ்ய கேஷத்திரத்திற்கு மதுரை நாதனும், மஹேச்வரம், ஹாலாஹலம் என்று கால கூட விஷத்தினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடைவரும், ஸ்ரீ மீனாக்ஷியின் பதியும் அழகிய தாண்டவத்தை உடைய மங்கள மூர்த்திக்கு எங்களின் நமஸ்காரம்.

த்வாய க்ருதமிதம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்தி சம்யுத தஸ்யாயுர்
தீர்க்க மாரோக்யம் சம்பதச்ச ததாம்யஹம்.

பொருள்:
உன்னருளால் ஸ்ரீ பதஞ்சலியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை எவன் பக்தியுடன் படிக்கிறானோ அவனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஸம்பத்து இவைகளை நான் கொடுக்கிறேன் என்று சிவபெருமான் கூறுகிறார்.

இதி ஶ்ரீ ஹாலாஸ்ய மஹாத்ம்யே பதஞ்சலி க்ருதமிதம் சதாசிவாஷ்டகம் சம்பூர்ணம்.

பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்ட ஹாலாஸ்ய மஹாத்மியத்தில் வரும் இந்த சதாசிவ அஷ்டகம் நிறைவடைந்தது.

 

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை