- September 24, 2024
உள்ளடக்கம்
ஓம் ஹர ஹர சிவ சிவ ருத்ரேஸ்வராய
சிவ ஹர ஸ்வர ப்ரிய லிங்கேஸ்வராய
பூத நாத சிவ நர்தன ப்ரியாய
சர்வ லோக சர்வ சாக்க்ஷி ஸ்ரூபா
திங்கள் சூடிய நாதனே
கங்கை நாடிய வேதனே
மங்கை கூடிய பாகனே – ஈசா!
ஆக்கும் போதில் அவன் பிரம்மனே..
காக்கும் போதில் அவன் விஷ்ணுவே..
நீக்கும் போதில் அவன் ருத்ரனே – ஈசா!
அகிலமே ஆடும் வண்ணம்
சபைகளில் ஆடும் பாதம்
சுடலையில் ஆடல் செய்தது – ஏனோ?
அமுதமே வேண்டும் என்று
கடலையே கடைந்த போதில்
அதில் வரும் நஞ்சை ஏற்றாய் – ஏனோ?
சதுர்வேதம் பாடவே கவியாவும் போற்றவே
எமை காக்க வந்த நீ ….
பூவியாவும் காப்பாய் நீ …
ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..
ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..
ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா..
ஓம்..!
வேத கீதங்கள் யாவும் ஈசனை போற்றுதே
கோலங்கள் காட்டி யாடும் நாதனை பாடுதே!
ஆரூரன் தந்த பாடல் அடியாரை போற்றுதே – அதில்
காணும் நாயன்மாரின் பக்தியை பாடுதே!
சம்பந்தர் தேவாரம் கேட்டு சாம்பல் பெண் ஆனதே
அப்பர் தம் தாண்டகம் கேட்டு நாகம் உயிர் தந்ததே
அட நாடென்ன காடென்ன குலமென்ன பிரிவென்ன – எல்லோரும் அடியார்களே!
திங்கள் சூடிய நாதனே
கங்கை நாடிய வேதனே
மங்கை கூடிய பாகனே – ஈசா!
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
தகிட தா …
தீம் திகிட ….
தாதகிட தா …
ஓம்…
காலனை மிதித்த பாதம் வீதியில் சென்றதே
காலமும் கடந்த தெய்வம் தூதனாய் நின்றதே!
அடியவர் உணவுக்காக பொதி சோறு சுமந்ததே
அனைவரும் போற்றும் வண்ணம் அற்புதம் புரிந்ததே!
வேடன் தன் கண் தந்ததாலே புகழ் மேவினார்
நந்தன் தன் வேகத்தை தந்தே சிவமாகினார்
அறுபத்து மூவர்கள் அருள் பெற்ற நாயன்மார்
புகழ்பாடி போற்றிடுவோம்…
திங்கள் சூடிய நாதனே
கங்கை நாடிய வேதனே
மங்கை கூடிய பாகனே – ஈசா!
ஆக்கும் போதில் அவன் பிரம்மனே..
காக்கும் போதில் அவன் விஷ்ணுவே..
நீக்கும் போதில் அவன் ருத்ரனே – ஈசா!
ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..
ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..
ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா.. ஓம்..!
Special Thanks: Latha Kani