- September 13, 2024
உள்ளடக்கம்
🙏 ஒவ்வொரு மனிதரும் விரும்புவது வெற்றியைத்தான். எங்கும் எதிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே அனைவரின் கனவு. ஆனால், பொறாமையும் போட்டியும் நிறைந்திருக்கும் இன்றைய உலகத்தில் வெற்றி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.
🙏 வெற்றிக் கனி, அதுவாகவே நம் மடியில் விழுவதற்கு ஓர் அற்புத உபாயத்தை ஒரு மந்திரத்தின் மூலமாக நமக்கு அருளியுள்ளார் கங்கோள மகரிஷி. எங்கும் எதிலும் நம்மை வெற்றி அடையச் செய்யும் அந்த மந்திரம் ‘உச்சிஷ்ட கணபதி மந்திரம்’.
🙏 எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகரை வழிபட்டே தொடங்கவேண்டும். இது, விநாயகருக்கு சிவபெருமான் கொடுத்த வரம்.
🙏 இந்த மந்திரத்தை தகுந்த குருநாதர் மூலமாக உபதேசம் பெற்ற பிறகே ஜபிக்கவேண்டும். உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள், மந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு வேத விற்பன்னரை குருவாகக் கொண்டு, அவர் மூலமாக உபதேசம் பெறலாம். அல்லது, தங்கள் வீட்டில் வைதிக காரியங்கள் நடத்தித் தரும் சாஸ்திரிகளுக்கு உச்சிஷ்ட கணபதி மந்திரம் தெரிந்திருந்தால், அவர் மூலமாகவும் மந்திர உபதேசம் பெறலாம்.
🙏 ஜபத்தைத் தொடங்குமுன் முறைப்படி அங்க நியாஸம், கரந் நியாஸம் (பூர்வாங்க பூஜை) செய்து கொண்டு,
மூன்று கண்களும்,
நான்கு திருக் கரங்களும்,
சிவந்த தேக காந்தி உள்ளவரும்,
வலது மேற்கரத்தில் அங்குசம்,
வலது கீழ்க்கரத்தில் தந்தம்,
இடது மேற்கரத்தில் பாசம்,
இடது கீழ்க் கரத்தில் மோதக பாத்திரம் ஆகியவற்றை ஏந்திய வரும்,
மதோன்மத்தனாக தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவருமான வசிய கணபதியை துதிக்கிறேன்,
🙏 என்று தியான சுலோகம் சொல்லி தியானித்துக் கொண்ட பிறகே, உச்சிஷ்ட கணபதியின் மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.
🙏 இந்த ஜபத்தை தேய்பிறை சதுர்த்தசியன்று தொடங்கி வளர்பிறை சதுர்த்தசி முடிய செய்ய வேண்டும். தினமும் ஜபம் முடித்த பிறகு, விநாயக ருக்கு பாயசம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
🙏 வெள்ளெருக்கினால் கட்டை விரல் அளவு விநாயகர் திருவுருவம் செய்து, (கணபதி யந்திரம் மற்றும் வெள்ளெருக்கு விநாயகர் ஆகியவை பூஜைப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்) யந்திரத்துக்கும் விநாயகர் திருவுருவத்துக்கும் தேன் அபிஷேகம் செய்து, மந்திரம் ஜபிக்கவேண்டும். இதனால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
🙏 வேப்ப மரத்தின் கட்டையில் விநாயகர் திருவுருவம் செய்து வழிபட்டால், சத்ருக்களை வெற்றி கொள்ளலாம்.
🙏 வெல்லத்தில் விநாயகர் உருவம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் அபிவிருத்தி உண்டாகும்.
கிடைக்கும் பலன்கள்: 🙏 தேர்தல், தேர்வுகள், போட்டிகள் போன்றவற்றில் வெற்றி பெற விரும்புகிறவர்கள், உச்சிஷ்ட கணபதி யந்திரத்தில் முறைப்படி கணபதியை பிரதிஷ்டை செய்யவேண்டும். அப்படிச் செய்தால், எந்தக் காரியத்திலும் வெற்றியே கிடைக்கும்.
🙏 குரு உபதேசம் பெற்று மந்திரம் ஜபிக்க முடியாதவர்கள், கீழ்க் கண்ட விநாயகர் துதிப்பாடலை தினமும் 1000 முறை பக்திபூர்வமாக பாடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிட்டும் என்பது திண்ணம்!
உச்சிஷ்ட கணபதி விநாயக
என் விக்னமெல்லாம் நீ தீர்ப்பாய்
தும்பிக்கையால் என்னை நீ அணைக்க
என் அஞ்ஞானம் தீர்ந்து நான் எனை மறக்க
எப்போதும் அருள் செய்வாய் விநாயகா
எல்லோரும் போற்றும் விநாயகா!
ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
ஓம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
கம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
ஓம் நம: உச்சிஷ்ட கணேசாய
ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா
Also, Read: