- May 16, 2022
உள்ளடக்கம்
🛕 தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம் துதியை பாராயணம் செய்தால் தீராத நோயெல்லாம் வைத்தீஸ்வரன் திருவருளால் தீரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பாராயணம் செய்தவுடன் வைத்தீஸ்வரனை நினைத்து ஒரு நமஸ்காரம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது சான்றோர்கள் கருத்து.
1. ஸ்ரீ ராம ஸெளமித்ரி, ஜடாயுவேத
ஷடாந நாதித்ய, குஜார்ச்சி தாய
ஸ்ரீ நீலகண்டாய, தாயமயாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய
2. கங்கா ப்ரவாஹேந்து, ஜடாதராய
த்ரிலோச நாய ஸ்மரகால ஹந்த்ரே,
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய:
3. பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிதே, துஷ்ட ஹராய நித்யம்,
ப்ரத்க்ஷலீலாய, மனுஷ்ய லோகே
ஸ்ரீ வைத்ய நாதாய நம: சிவாய.
4. ப்ரபூதவரதாதி, ஸமஸ்த ரோக
ப்ரணாசகர்த்ரே, முநிவந்திதாய,
ப்ரபாகரேந்த்வக்நி, விலோசனாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.
5. வாக். ச்ரோத்ர, நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ:
வாக் ச்ரோத்ர, நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி, ஸர்வோன்னத ரோக ஹந்த்ரே,
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.
6. வேதாந்த வேத்யாய ஜகன்மயாய
யோகீச்வரத்யேய பதாம்பு ஜாய,
த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்நே
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.
7. ஸ்வதீர்த்த, ம்ருத், பஸ்மப்ருதங்க பாஜாம்
பிசாச துக்கார்த்தி பயாபஹாய,
ஆத்ம ஸ்வரூபாய சரீர பாஜாம்
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.
8. ஸ்ரீ நீலகண்டாய, வ்ருஷத்வஜாய,
ஸ்ரக், கந்த, பஸ்மாத்யபி சோபிதாய,
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய,
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.
9. ஸ்வாமின், ஸர்வ ஜகந்நாத்,
ஸர்வரோக சிகித்ஸக
க்ஷúத்ரரோஜ பயார்த்தான்.
நஸ்த்ராஹி மஹாப்ரபோ.
10. அசிகித்ஸா சிகித்ஸாய
சாத்யந்த ரஹிதாயச,
ஸர்வலோகைக வந்த்யாய
வைத்ய நாதாய தே நம:
11. அப்ரமேயாய மஹதே
ஸுப்ரஸன்ன முகாய ச,
அபீஷ்ட தாயிநே நித்யம்
வைத்ய நாதாய தே நம:
12. ம்ருத்யஞ் ஜாயாய சர்வாய
ம்ருடாநீ வாமபாகி நே,
வேதவேத்யாய, ருத்ராய
வைத்யநாதாய தே நம:
13. ஸ்ரீ ராமபத்ர வந்த்யாய
ஜகதாம் ஹிதகாரிணே
ஸோமார்த்த தாரிணே துப்யம்,
வைத்யநாதாய தே நம:
14. நீலகண்டாய ஸெளமித்ரி
பூஜிதாய ம்ருடாய ச
சந்த்ர வஹ்ந்யர்க்க நேத்ராய
வைத்யநாதாய தே நம:
15. சிசிவாஹந வந்த்யாய
ஸ்ருஷ்டி, ஸநித்யந்தகாரிணே
மணிமந்த்ரௌஷ தேசாய,
வைத்யநாதாய தே நம:
16. க்ருத்ர ராஜாபி வந்ந்யாய
திவ்ய கங்காதராய ச,
ஜகந்மயாய ஸர்வாய
வைத்யநாதாய தே நம:
17. குஜ, வேத, விதீந்த்ராத்யை
பூஜிதாய, சிதாத்மநே,
ஆதித்ய, சந்த்ர வந்த்யாய.
வைத்யநாதாய தே நம:
18. வேதவேத்ய, க்ருபாதார
ஜகந்மூர்த்தே சுபப்ரத,
அநாதி வைத்ய, ஸர்வஜ்ஞ,
வைத்யநாதா நமோஸ்து தே.
19. கங்காதர, மஹாதேவ
சந்த்ர வஹ்ந்யர்க்க, லோசன
பிநாகபாணே, விச்வேச,
வைத்யநாத நமோஸ்து தே.
20. வ்ருஷவாஹந, தேவேச,
அசிகித்சா சிகித்ஸக
கருணாகர கௌரீச
வைத்யநாத நமோஸ்து தே.
21. விதி விஷ்ணு முகைர் தேவை:
அர்ச்யமான பதாம் புஜ.
அப்ரமேய ஹரேசாந
வைத்யநாத நமோஸ்து தே.
22. ராம லக்ஷ்மண ஸூர்யேந்து
ஜடாயு ச்ருதி பூஜித
மத நாந்தக ஸர்வேச,
வைத்ய நாத நமோஸ்து தே.
23. ப்ரபஞ்ச பிஷகீசாந
நீகண்ட மஹாச்வர
விச்வநாத மஹா தேவ
வைத்யநாத நமோஸ்து தே.
24. உமாபதே லோகநாத
மணி மந்த்ரௌஷ தேச்வர,
தீ நபந்தோ, தயாசிந்தோ
வைத்யநாத நமோஸ்து தே.
25. த்ரிகுணா தீத சித்ரூப
தபாத்ரய விமோசந,
விரூபாக்ஷ, ஜகந்நதா
வைத்யநாத நமோஸ்து தே.
26. பூதப்ரேத பிசாசாதே;
உச்சாடந விசக்ஷண
குஷ்டாதி ஸர்வ ரோகாணாம்
ஸ்ம்ஹர்த்ரே தே நமோ நம:
27. பாதயந்த பங்கு குப்ஜா தேர்
திவ்யரூப ப்ரதாயிநே,
அநேக மூக ஜந்தூநாம்
திவ்யவாக் தாயிநே நம:
🛕 ஸ்ரீராமன், லட்சுமணன், ஜடாயு, நான்கு வேதங்கள், ஆறுமுகன், சூரியன் மற்றும் தனது ரோகத்தைப் போக்கிக்கொள்ள விரும்பிய அங்காரகன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டவரும், விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், கருணையே வடிவானவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
🛕 கங்கையின் பிரவாகத்தை சிரசில் தாங்கியவரும், சந்திர மண்டலத்தையும் சிரசில் தரித்தவரும், மூன்று கண்களை உடையவரும், மன்மதனையும் காலனையும் வதம் செய்தவரும், எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
🛕 பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பினாகம் என்ற வில்லை தரித்தவரும், தினமும் துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்கிறவரும், மனிதர் வாழும் உலகத்தில் எல்லோருக்கும் புலப்படும்படியாகப் பலவித லீலைகளைச் செய்தவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
🛕 பாதம் முதல் தலை வரையிலும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நோயையும் நாசமாக்குகிறவரும், மகரிஷிகளால் ஆராதிக்கப்பட்டவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகக் கொண்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
🛕 பேச்சுப் புலன், காது, கண், கால் முதலிய அங்கங்களை இழந்தவருக்கு அவற்றை மீண்டும் கொடுத்து சுகத்தை அளிப்பவரும், குஷ்டம் முதலிய மிகப் பெரியதான ரோகங்களைப் போக்குகின்றவருமான ஸ்ரீவைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.
🛕 வேதாந்தங்களால் அறியத் தகுந்தவரும், உலகில் உள்ள எல்லா பொருட்களுமாக இருப்பவரும், யோகீஸ்வரர்களால் தியானம் செய்யத்தக்க சரணங்களை உடையவரும், பிரம்ம-விஷ்ணு வடிவாய் விளங்குபவரும், ஆயிரம் நாமங்களை உடையவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.
🛕 தனது தீர்த்தமாகிய சித்தாம்ருத தீர்த்தத்தில் நீராடுவதாலும், தனது வைத்தீஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படும் மருந்து உருண்டைகளாலும், தனது விபூதியினாலும், தன் கோவிலில் உள்ள வேப்பமரத்தின் அடியிலுள்ள மண்ணினாலும், தனது குளத்து மண்ணினாலும், பிசாசு, ரோகம் போன்ற துக்கங்களையும் மனக் கவலையையும், பயத்தையும் போக்குகின்றவரும் சரீரத்தை அடைந்தவர்களுக்கு அந்தராத்மாவாய் இருப்பவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.
🛕 விஷம் அருந்தியதால் நீலமான கண்டத்தை உடையவரும், ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், மாலை, சந்தனம், விபூதி ஆகியவற்றால் பிரகாசிக்கின்றவரும், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் என்ற நல்ல பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.
Also, read