- July 30, 2023
உள்ளடக்கம்
1. ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீனிவாஸாய மங்களம்.
ஸ்ரீ மகாலட்சுமியின் நாயகனும், சகல ஐஸ்வரியங்களும் பக்தர்களுக்கு எம்பெருமான் வாரிவழங்கும் திருவேங்கட மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீநிவாசப்பெருமானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.
2. லக்ஷ்மிஸவிப்ரமாலோக ஸுப்ரூவிப்ரம சக்ஷுஷே
சக்ஷுஷே ஸர்வலோகானாம் வேங்கடேசாய மங்களம்
ஸ்ரீலட்சுமி தேவி பார்த்து மயங்கும் அழகிய புருவங்களுடன் விளங்கும் கண்களையுடையவனும், உலகங்களுக்கெல்லாம் கண் போன்றவனுமான திருவேங்கடநாதனுக்கு மங்களம் உண்டாகட்டும்.
3. ஸ்ரீவேங்கடாத்ரி ச்ருங்காக்ர மங்களாபரணாங்க்ரயே
மங்களானாம் நிவாஸாய வேங்கடேசாய மங்களம்.
தனது திருவடிகளால் திருமலை சிகரத்திற்கு அணிகலனாய் விளங்குபவனும், சகல மங்களமும் உடையவனுமான திருவேங்கடமுடையானுக்கு மங்களம் உண்டாகட்டும்.
4. ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா ஸர்வசேதஸாம்
ஸதா ஸம்மோஹனாயாஸ்து வேங்கடேசாய மங்களம்
எல்லோரும் எப்போதும் கண்டு மயங்கும் அழகிய திருமேனியுடைய ஸ்ரீவேங்கடேசனுக்கு மங்களம் உண்டாகட்டும்.
5. நித்யாய நிரவத்யாய ஸத்யானந்த சிதாத்மனே
ஸர்வாந்தராத்மனே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்
நித்யசொரூபமான, பரப்பிரம்ம திருவேங்கடமுடையான். அவனே எல்லா ஜீவன்களிடத்திலும் நிறைந்து விளங்குகிறான். அப்பெருமான் திருவேங்கட நாதனுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.
6. ஸ்வத: ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வ சேஷிணே
ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்
எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும், அடியார்க்கு எளியவனுமான, எல்லோருக்கும் இறைவனாக விளங்கும் ஸ்ரீவேங்கடேசனுக்கு மங்களம் உண்டாகட்டும்.
7. பரஸ்மை ப்ரம்மனே பூர்ணகாமாய பரமாத்மனே
ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்
உலகெங்கும் வியாபித்து இருக்கும் பரம்பொருளும், அடியார்கள் விரும்புவதை உடனே வழங்குபவனும், சகல உலக இயக்கங்களுக்கெல்லாம் ஆதாரமானவனும், தத்துவங்களுக்கெல்லாம் நாயகனுமான திருவேங்கடமுடையானுக்கு மங்களம் உண்டாகட்டும்.
8. ஆகாலதத்வமஸ்ராந்தமாத்மனா மனுபச்யதாம்
அத்ருப்த்யம்ருதரூபாய வேங்கடேசாய மங்களம்
அல்லும் பகலும், அனவரதமும் துதிக்கும் அடியார்களுக்கு அமுதமென நிறைவு தரும் ஸ்ரீவேங்கடேசனுக்கு மங்களம் உண்டாகட்டும்.
9. ப்ராயா : ஸ்வசரணௌ பும்ஸாம் சரண்யத்வேன பாணினா
க்ருபயாதிசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்
அடியவர்கள் அனைவருக்கும் தனது திருவடிகளே கதி என்று தனது வலது திருக்கையால் காட்டி உணர்த்தும் திருவேங்கடநாதனுக்கு மங்களம் உண்டாகட்டும்.
10. தயாம்ருத தரங்கிண்யா ஸ்தரங்கைரிவ சீதலை
அபாங்கை : ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்
தன்னுடைய குளிர்ந்த கடைக்கண் பார்வையால் உலகத்தை கருணை என்னும் அமுதக்கடலில் அமிழ்ந்து எழுந்ததுபோல் குளிரச்செய்யும் ஸ்ரீவேங்கடேசனுக்கு மங்களம் உண்டாகட்டும்.
11. ஸ்ரக்பூஷாம்பர ஹேதீனாம் ஸுஷமாவஹ மூர்த்தயே
ஸர்வார்த்திசமனாயாஸ்து வேங்கடேசாய மங்களம்
எழில் மிகுந்த தன்னுடைய திருமேனி அழகால் தன்மீது அணிவிக்கும் பூமாலைகளுக்கும், ஆபரணங்களுக்கும் புதிய சோபையும், அழகும் கொடுப்பவனும், அனைத்து ஜீவன்களுக்கும் துன்பத்தைப்போக்கி இன்பத்தை அருள்பனுவனுமான திருவேங்கடநாதனுக்கு மங்களம் உண்டாகட்டும்.
12. ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீதடே
ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்
பரம்பொருளாகிய வாசுதேவன் ஸ்ரீவைகுந்தத்தில் விரக்தியடைந்து சுவாமி புஷ்கரணியின் கரையில் திருவேங்கடமுடையானாக எழுந்தருளி ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடிமகிழும் ஸ்ரீவேங்கடேசனுக்கு மங்களம் உண்டாகட்டும்.
13. ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முனிமானஸ வாஸினே
ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்.
முனிவர்களுடைய மனங்களில் விரும்பி வசிப்பவனும், எல்லா உலகங்களிலும், எல்லாப் பொருள்களிடத்தும், நீக்கமற நிறைந்து விளங்குபவனுமான ஸ்ரீநிவாசப் பெருமானுக்கு மங்களம் உண்டாகட்டும்.
14. மங்களாசாஸன பரைர்: மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்.
ஆச்சாரியர்களாலும், ஆச்சாரியர்களின் ஆச்சாரியர்களாலும், பிற மத ஆச்சாரியர்களாலும் எப்பொழுதும் புகழ்ந்து ஆராதிக்கப்படுகின்ற ஸ்ரீ வேங்கடேசனுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.
ஶ்ரீ பத்மாவதீ ஸமேத ஶ்ரீ ஶ்ரீனிவாஸ பரப்ரஹ்மணே நமஃ
Also, read