×
Saturday 1st of October 2022

Nuga Best Products Wholesale

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம்


Venkateswara Suprabhatam Lyrics in Tamil

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம்

🛕 விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்தில் யாகத்திற்கு தடையாக இருக்கும் அரக்கர்களை அழிக்க ராம லட்சுமணரை அரண்மனையிலிருந்து அழைத்துச் சென்றார். நீண்ட தூரம் வனத்தில் நடந்து சென்றதால் கங்கைக்கரையில் கலைப்பில், தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். விஸ்வாமித்திரர் காலையில் எழுந்து பார்க்கும் போது நேரம்போவதைக் கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.

🛕 அவர் காலையில் நீராடி, ஜப தபங்களை செய்து முடித்து வந்த பின்னரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் ராம லட்சுமணரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சித்தார். முடியாததால் “கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா” என பாடினார். ஒரு நாள் ராமனை எழுப்பக்கூடிய பாக்கியத்தை பெற்றேன். அதுவே ராமனின் தாய் கெளசல்யா தினந்தினம் ராம பிரானை எழுப்பும் பேறு பெற்றுள்ளாரே என பாடுகிறார்.

ரசன: ப்ரதிவாதி பயம்கரம் அன்ன வேதம்தாசாரி

கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே |
உத்திஷ்ட னரஶார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம் || 1 ||

உத்திஷ்டோத்திஷ்ட கோவிம்த உத்திஷ்ட கருடத்வஜ |
உத்திஷ்ட கமலாகாம்த த்ரைலோக்யம் மம்களம் குரு || 2 ||

மாதஸ்ஸமஸ்த ஜகதாம் மதுகைடபாரேஃ
வக்ஷோவிஹாரிணி மனோஹர திவ்யமூர்தே |
ஶ்ரீஸ்வாமினி ஶ்ரிதஜனப்ரிய தானஶீலே
ஶ்ரீ வேம்கடேஶ தயிதே தவ ஸுப்ரபாதம் || 3 ||

தவ ஸுப்ரபாதமரவிம்த லோசனே
பவது ப்ரஸன்னமுக சம்த்ரமம்டலே |
விதி ஶம்கரேம்த்ர வனிதாபிரர்சிதே
வ்றுஶ ஶைலனாத தயிதே தயானிதே || 4 ||

அத்ர்யாதி ஸப்த றுஷயஸ்ஸமுபாஸ்ய ஸம்த்யாம்
ஆகாஶ ஸிம்து கமலானி மனோஹராணி |
ஆதாய பாதயுக மர்சயிதும் ப்ரபன்னாஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 5 ||

பம்சானனாப்ஜ பவ ஷண்முக வாஸவாத்யாஃ
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதாஃ ஸ்துவம்தி |
பாஷாபதிஃ படதி வாஸர ஶுத்தி மாராத்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 6 ||

ஈஶத்-ப்ரபுல்ல ஸரஸீருஹ னாரிகேள
பூகத்ருமாதி ஸுமனோஹர பாலிகானாம் |
ஆவாதி மம்தமனிலஃ ஸஹதிவ்ய கம்தைஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 7 ||

உன்மீல்யனேத்ர யுகமுத்தம பம்ஜரஸ்தாஃ
பாத்ராவஸிஷ்ட கதலீ பல பாயஸானி |
புக்த்வாஃ ஸலீல மதகேளி ஶுகாஃ படம்தி
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 8 ||

தம்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வனயா விபம்ச்யா
காயத்யனம்த சரிதம் தவ னாரதோ‌உபி |
பாஷா ஸமக்ர மஸத்-க்றுதசாரு ரம்யம்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 9 ||

ப்றும்காவளீ ச மகரம்த ரஸானு வித்த
ஜும்காரகீத னினதைஃ ஸஹஸேவனாய |
னிர்யாத்யுபாம்த ஸரஸீ கமலோதரேப்யஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 10 ||

யோஷாகணேன வரதத்னி விமத்யமானே
கோஷாலயேஷு ததிமம்தன தீவ்ரகோஷாஃ |
ரோஷாத்கலிம் விதததே ககுபஶ்ச கும்பாஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 11 ||

பத்மேஶமித்ர ஶதபத்ர கதாளிவர்காஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய னிஜாம்கலக்ஷ்ம்யாஃ |
பேரீ னினாதமிவ பிப்ரதி தீவ்ரனாதம்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 12 ||

ஶ்ரீமன்னபீஷ்ட வரதாகில லோக பம்தோ
ஶ்ரீ ஶ்ரீனிவாஸ ஜகதேக தயைக ஸிம்தோ |
ஶ்ரீ தேவதா க்றுஹ புஜாம்தர திவ்யமூர்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 13 ||

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ னிர்மலாம்காஃ
ஶ்ரேயார்தினோ ஹரவிரிம்சி ஸனம்தனாத்யாஃ |
த்வாரே வஸம்தி வரனேத்ர ஹதோத்த மாம்காஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 14 ||

ஶ்ரீ ஶேஷஶைல கருடாசல வேம்கடாத்ரி
னாராயணாத்ரி வ்றுஷபாத்ரி வ்றுஷாத்ரி முக்யாம் |
ஆக்யாம் த்வதீய வஸதே ரனிஶம் வதம்தி
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 15 ||

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்றுஶானுதர்ம
ரக்ஷோம்புனாத பவமான தனாதி னாதாஃ |
பத்தாம்ஜலி ப்ரவிலஸன்னிஜ ஶீர்ஷதேஶாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 16 ||

தாடீஷு தே விஹகராஜ ம்றுகாதிராஜ
னாகாதிராஜ கஜராஜ ஹயாதிராஜாஃ |
ஸ்வஸ்வாதிகார மஹிமாதிக மர்தயம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 17 ||

ஸூர்யேம்து பௌம புதவாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பானுகேது திவிஶத்-பரிஶத்-ப்ரதானாஃ |
த்வத்தாஸதாஸ சரமாவதி தாஸதாஸாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 18 ||

தத்-பாததூளி பரித ஸ்புரிதோத்தமாம்காஃ
ஸ்வர்காபவர்க னிரபேக்ஷ னிஜாம்தரம்காஃ |
கல்பாகமா கலனயா‌ குலதாம் லபம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 19 ||

த்வத்கோபுராக்ர ஶிகராணி னிரீக்ஷமாணாஃ
ஸ்வர்காபவர்க பதவீம் பரமாம் ஶ்ரயம்தஃ |
மர்த்யா மனுஷ்ய புவனே மதிமாஶ்ரயம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 20 ||

ஶ்ரீ பூமினாயக தயாதி குணாம்றுதாப்தே
தேவாதிதேவ ஜகதேக ஶரண்யமூர்தே |
ஶ்ரீமன்னனம்த கருடாதிபி ரர்சிதாம்க்ரே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 21 ||

ஶ்ரீ பத்மனாப புருஷோத்தம வாஸுதேவ
வைகும்ட மாதவ ஜனார்தன சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ன ஶரணாகத பாரிஜாத
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 22 ||

கம்தர்ப தர்ப ஹர ஸும்தர திவ்ய மூர்தே
காம்தா குசாம்புருஹ குட்மல லோலத்றுஷ்டே |
கல்யாண னிர்மல குணாகர திவ்யகீர்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 23 ||

மீனாக்றுதே கமடகோல ன்றுஸிம்ஹ வர்ணின்
ஸ்வாமின் பரஶ்வத தபோதன ராமசம்த்ர |
ஶேஷாம்ஶராம யதுனம்தன கல்கிரூப
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 24 ||

ஏலாலவம்க கனஸார ஸுகம்தி தீர்தம்
திவ்யம் வியத்ஸரிது ஹேமகடேஷு பூர்ணம் |
த்றுத்வாத்ய வைதிக ஶிகாமணயஃ ப்ரஹ்றுஷ்டாஃ
திஷ்டம்தி வேம்கடபதே தவ ஸுப்ரபாதம் || 25 ||

பாஸ்வானுதேதி விகசானி ஸரோருஹாணி
ஸம்பூரயம்தி னினதைஃ ககுபோ விஹம்காஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தித மம்களாஸ்தே
தாமாஶ்ரயம்தி தவ வேம்கட ஸுப்ரபாதம் || 26 ||

ப்ரஹ்மாதயா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸம்தஸ்ஸனம்தன முகாஸ்த்வத யோகிவர்யாஃ |
தாமாம்திகே தவ ஹி மம்கள வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 27 ||

லக்ஶ்மீனிவாஸ னிரவத்ய குணைக ஸிம்தோ
ஸம்ஸாரஸாகர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதாம்த வேத்ய னிஜவைபவ பக்த போக்ய
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 28 ||

இத்தம் வ்றுஷாசலபதேரிஹ ஸுப்ரபாதம்
யே மானவாஃ ப்ரதிதினம் படிதும் ப்ரவ்றுத்தாஃ |
தேஷாம் ப்ரபாத ஸமயே ஸ்ம்றுதிரம்கபாஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த ஸுலபாம் பரமாம் ப்ரஸூதே || 29 ||


Venkatesa Suprabhatam Meaning in Tamil

வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் விளக்கம்

வந்துதித்தாய் ராமநீ கோசலைதன் திருமகனாய்
சிந்துமொழிச் சிறுகாலை திசைஎங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்…

எழுந்தருள்வாய் வெங்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விளைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்…

போர்புரிந்து மதுகைடத் தமயளித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரளகின் அருளுருவே
பாரகத்தார் விளைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்…

திங்கள் மொழித் திருமுகத்தில் பொங்கும் அருள்பொளிபவளே
இங்கு கலைவாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்…

தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்றுதிரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றி சந்தியாவந்தனம் முடித்து
நிலைபெறுமின் புகழ்சொல்லி நின்பாதம் சேபிக்க
மலையடைந்து காத்துள்ளர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்…

ஆங்கந்தப் பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகன்றளந்த உயர்கதைகள் பாடுகின்றார்
இங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஒதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்…

நல்கமுகு தென்னைகளில் பாளைமணம் நெகிழ்ந்தனவால்
பல்வண்ண மொட்டுக்கள்தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவள்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்…

நின்திருப்பேர் பலகேட்டு நின்னடியரர் மெய்மறக்க
நின்கோயிற் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின்திருப்பேர் ஆயிரத்தால் நெடுங்ம்புகளை நிழற்றிடுமால்
நின்செவியால் துய்த்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்…

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்துன் பெருமைகள்தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்வியதன் வீணையில் உன்திருச்சரிதை மீட்டுகின்றார்
அவ்விசசையைக் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்…

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்தமது மிகவருந்தி
கண்மயங்கி மலர்முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவாம் நினைத்தொழவே
தன்னருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்…

கனதனங்கள் நிமிர்ந்தசெயற்க் கைவளைகள் ஒலியெழுப்ப
மனமகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசையொலியும்
சிறந்தனபோல் எதிரொலிக்கும் நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைக்கவைதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்..

பெருமாள்நின் திருநிறத்தைப் பெற்றுளதாய் குவளைசொல்லும்
கருங்குவளைக் காட்டிடையே களிதுலவும் வண்டுகள்தாம்
பெருமாள்நின் திருநிறத்தைப் பெற்றுளம்யாம் பெரிதெனுமேன
வருபெரும்பேர் பகைதவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்…

வேண்டுபவர் வேண்டுவன விளைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுடையோய்
காண்பரிய கருனணயனே வேங்கடவா எழுந்தருள்வாய்…

மின்தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோயிலேறித் திருத்தீர்த்தம் தனில்மூழ்கி
நின்னருளைப் பெறவிளைந்தே நெடுவாயில் நினைநின்றார்
இன்றவர்க்கும் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்…

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திருநாராயணமலையாய் விருடபத்தாய் விருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திருண்டுளரைப் புறந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்…

அருளிடுநின் செயல்முடிப்பன் அட்டத்திக்கு பாலர்களாம்
பெருநெறிய அரண்இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவொடு குபேரனும்நின்
திருவடிக்கீழ் காத்துளரால் வேங்கடவா எழுந்தருள்வாய்…

திருமலைவாள் பெருமானே திருவுலாவுக்கு எழுகையில்நின்
கருடநடை சிம்மநடை நாகநடை முதலாய
திருநடைகள் சிறப்புணர்ந்து திருதமுறக் கற்பதற்கு
கருடசிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்…

சூரியனார் சந்திரனார் செவ்வாயார் புதன் வியாழர்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேதிவர்கள்
ஆர்வமுடன் நின்தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெறநின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்…

நின்முக்தி விளையாமல் நின்னையொன்றே மிகவிளைந்து
நின்பாதத் தூளிகளைத் தம்தலையில் தாம்தரித்தோர்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்துன் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்…

எண்ணரிய தவமியற்றி இன்சுவர்க்கம் முக்திபெறும்
புண்ணியர்கள் செல்வழிநின் புகழ்க்கோவில்க் கலசங்கள்
கண்டனரே நின்கோவில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்…

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணைக் குணக்கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடுஇணையில்லாப் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப்புகளே வேங்கடவா எழுந்தருள்வாய்…

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்த்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர்போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்…

திருமகள்தன் திருவணைப்பில் திருத்துயில்கொள் திருஅழகா
திருவிழியால் பெருவுலகில் அருள்பொழியும் பெருவரதா
திருவுடையாய் திருக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவைரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்..

மச்சநாதா கூர்மநாதா வாராகநாதா நரசிங்கா
நற்சிவந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சுபுகழ் பலராமார் திருக்கண்ணார் கல்க்கியனே
இச்சகத்து வைகுண்டா வேங்கடவா எழுந்தருள்வாய்…

ஏலமொடு நடுலவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருத்தீர்த்தம் தலைசுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவிற்றுமிந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்…

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவாம் தாமரைகள்
பெருவியப்பாற் புல்லினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் மிகமொழிந்தார்
அரிதுயில்ஏன் அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்..

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்கலமாய்
காமர்எழிற் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருவு பொன்விளக்கு புகழ்க்கொடிகள் ஏந்தினரால்
தேமருது மலர்மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்…

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுணர்த்தும் சேதுஅணையே
ஒருவேதத்து உட்பொருளே மயர்புஅறியா மதிநலத்தார்
திருத்திப்பிற்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்…

விழித்துஎழு நற்காலையில் இத்திருப்பள்ளி எழுச்சிதனை
விளைந்துணர்ந்து படிப்பவரைக் கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவர்அவற்கு வரங்களோடு முக்திதர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்…

Also, readLeave a Reply

Your email address will not be published.

you may also like

  • September 24, 2022
உத்தமர் சீலி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் (செங்கனிவாய் பெருமாள்)
  • September 18, 2022
மகாவிஷ்ணு 10 அவதார காயத்திரி மந்திரங்கள்
  • September 7, 2022
சிவ சஹஸ்ர நாமாவளி