×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

சந்தியாவந்தனம் மற்றும் அதன் மகிமை


உள்ளடக்கம்

Sandhyavandanam in Tamil

சந்தியாவந்தனம்

 ஆசமனம்  : அச்யுதாய நம : அனந்தாய நம : கோவிந்தாய நம:
கேசவ நாராயண கட்டைவிரல் வலது இடது கன்னம்
மாதவ : கோவிந்த பவித்ர விரல் வலது இடது கண்
விஷ்ணூ மதுஸூதன ஆள்காட்டி விரல் வலது இடது மூக்கு
த்ரிவிக்ரம வாமன சுண்டு விரல் வலது இடது காது
ஸ்ரீதர ஹ்ருஷீகேச நடுவிரல் வலது இடது தோள்
பத்மனாப தாமோதர ஐந்து விரல்களும் நாபி தலை

 ஸங்கல்பம்  : சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே!

 ப்ராணாயாமம்  : ஓம் பூ : ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் – ஸத்யம்-ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தியோ யோ-ந: ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம-பூர்ப்புவஸ் ஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த (ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்யம் என்று தென்கலையாரும், ஸ்ரீபகவதாக்ஞயயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்று வடகலையாரும்) துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸிஷ்யே என்றும் (மத்தியானத்தில்) மாத்யாஹ்னிகம் கரிஷ்யே என்றும் (சாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே, என்றும் சங்கல்பம் செய்த பின் ஓம் என்று பவித்ரவிரலால் ஜலத்தில் எழுதி ஸ்ரீ கேசவாய நம: என்று நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளவும்.

 ப்ரோக்ஷண மந்திரம்  : ஆபோஹிஷ்டா மயோ புவ: தாந ஊர்ஜே ததாதன, மஹேரணாய சக்ஷஸே, யோவ : சிவதமோ ரஸ: தஸ்ய பாஜயத – இஹந உசதீரிவ – மாதர: தஸ்மா அரங்கமாமவ: யஸ்ய க்ஷயாய ஜின்வத

 அபோஜநயதாசன  : (இதுவரை சொல்லி ஜலத்தை சிரசில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஓம் பூர்புவஸ்ஸுவ:) இப்போது ஜலத்தைக் கையில் எடுத்து சிரஸை சுற்றிக் கொள்ளவும். வலது கை உள்ளங்கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி உட்கொள்ளவும்.

 காலையில்  : ஸூர்யஸ்ச்ச மாமன்யுஸ்ச்ச மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம் மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிச்னா, ராத்ரிஸ் ததவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா – ப்ராசனம், ஆசமனம்.

 மத்யான்னத்தில்  : ஆப: புனந்து – ப்ருதிவீம் ப்ருதீவி பூதா புனாதுமாம், புனந்து ப்ரஹ்மணஸ்பதி: ப்ரஹ்மபூதாபுனாதுமாம், யதுச் சிஷ்டம் அபோஜ்யம்-யத்வாதுச்சரிதம் மம, ஸர்வம் புனந்து மாமாப: அஸதாம்ச – ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா – ப்ராசனம், ஆசமனம்.

 சாயங்காலத்தில்  : அக்நிஸ்ச்ச மாமந்யுஸ்ச்ச மன்யுபதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம், யதஹ்னா பாபமகார்ஷம், மனஸா வாசா ஹஸ்தாப்யாம், பத்ப்யாம், உதரேணசிச்னா, அஹஸ்ததவலும்பது, யத்கிஞ்ச துரிதம்மயி, இதமஹம் மாமம்ருத யோளெந ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமிஸ்வாஹா ப்ராசனம், ஆசமனம்.

 ப்ரோக்ஷண மந்திரம்  : ததிக்ராவிண்ணோ, அகாரிஷம், ஜிஷ்ணோ ரச்வஸ்ய வாஜிந: ஸுரபினோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத் ஆபோஹிஷ்டா மயோபுவ: தான ஊர்ஜேததாதன மஹேரணாய சக்ஷஸே யோவச்சிவதமோ ரஸ : தஸ்யபாஜயத – இஹன : உசதீரிவமாதர : தஸ்மா அரங்கமாமவ : யஸ்ய க்ஷயாயஜின்வத ஆபோ ஜனயதாசன : ஓம் பூர்புவஸ்ஸுவ:

 அர்க்ய ப்ரதானம்  : (காலையில் மூன்று தடவையும், மத்யான்னத்தில் இரண்டு தடவையும், ஸாயங்காலத்தில் மூன்று தடவையும், இரண்டு கைகளிலும் ஜலம் எடுத்துக் கொண்டு பூமியில் விடவும்) மந்திரம் :- ஓம் பூர்புவஸ்ஸுவ: + ப்ரசோதயாத் (என்று அர்க்யம் விடவும்) பிறகு ப்ராணாயாமம் செய்து அர்க்யம் விடவும், கையில் ஜலமெடுத்துக்கொண்டு தன்னைத் தானே பிரதக்ஷிணமாக வந்து அஸாவாதித்யோ ப்ரஹ்ம ப்ரஹ்மைவ அஹமஸ்மி என்று சொல்லி சூரியனை பரப்ரஹ்மஸ்வரூபனென்றும், அந்த ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே தானிருப்பதாகவும் தியானித்துக் கொள்ள வேண்டியது. ஆசமனம்.

நவக்ரஹ கேசவாதி தர்ப்பணம் :

ஆதித்யம் தர்ப்பயாமி
ஸோமம் தர்ப்பயாமி
அங்காரகம் தர்ப்பயாமி
புதம் தர்ப்பயாமி
ப்ரஹஸ்பதிம் தர்ப்பயாமி
சுக்ரம் தர்ப்பயாமி
சனைச்சரம் தர்ப்பயாமி
ராஹும் தர்ப்பயாமி
கேதும் தர்ப்பயாமி
கேசவம் தர்ப்பயாமி

நாராயணம் தர்ப்பயாமி
மாதவம் தர்ப்பயாமி
கோவிந்தம் தர்ப்பயாமி
விஷ்ணும் தர்ப்பயாமி
மதுஸூதனம் தர்ப்பயாமி
த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி
வாமனம் தர்ப்பயாமி
ஸ்ரீதரம் தர்ப்பயாமி
ஹ்ருஷீகேசம் தர்ப்பயாமி
பத்மநாபம் தர்ப்பயாமி
தாமோதரம் தர்ப்பயாமி

ஆசமனம் 2 தடவை.

காயத்ரீ – ஆவாஹனம்

ஆயாத்வித்யனுவாகஸ்ய வாமதேவ ருஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா

ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்மிதம்
காயத்ரீம் சந்தஸாம் மாதேதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந:
ஓஜோ ஸஸி ஸஹோ ஸஸி பலமஸி ப்ராஜோஸஸி தேவானாம்
தாம நாமாஸி விஸ்வமஸி விஸ்வாயு: ஸர்வமஸி ஸர்
வாயு-ரபி பூரோம் காயத்ரீ -மாவாஹயாமி, ஸாவித்ரீ-
மாவாஹயாமி, ஸரஸ்வதீ-மாவாஹயாமி

🛕 காயத்ரீம் – முதல் வேற்றுமைக்குப் பதில் காயத்ரீம் என்று இரண்டாம் வேற்றுமை வேதமந்திரத்தில் இங்கே உபயோகிக்கப்பட்டுள்ளது.

🛕 பிரயோகம் – இருதய கமலத்தில் காயத்ரீதேவி பிரஸன்னமாக வேண்டுமென்று பிரார்த்தித்து ஆவாஹனீ முத்திரையை மும்முறை இருதயத்தை நோக்கிக் காட்ட வேண்டும். அவாஹனீ முத்திரையாவது அஞ்ஜலி செய்து கட்டை விரல்களால் பவித்ர விரல்களின் அடிக்கணுவைத் தொட்டிருத்தல்.

🛕 பொழிப்புரை – (காயத்ரீ தேவியை எழுந்தருளப் பிரார்த்தித்தல்)- ஆயாது எனும் அனுவாகத்திற்கு வாமதேவர் ரிஷி, அனுஷ்டுப்சந்தம், காயத்ரீ தேவதை.

🛕 விரும்பிய வரங்களை அளிப்பவளும் அழிவற்றவளும் வேதத்தால் அறியபட்டவளும் வேதமாதாவும் ஆகிய காயத்ரீ தேவி எழுந்தருளி இந்த வேத மந்திர ஸ்துதியை அங்கீகரிக்க வேண்டும்.

🛕 காயத்ரியே! நீயே பிராணசக்தியாகவும் இந்திரிய சக்தியாகவும் இருக்கிறாய்; சத்துருக்களை வெல்லும் திறமையாக இருக்கிறாய்; அங்கங்களின் வலிமையாக இருக்கிறாய்; ஞான ஒளியாக இருக்கிறாய்; தேவர்களுடைய பிரசித்தமான பிரகாச வடிவாயிருக்கிறாய்; உலக வடிவாயிருக்கிறாய்; கால ரூபியாக உலகின் ஆயுளாகவும் இருக்கிறாய்; எல்லோருடைய ஆயுளாகவும் இருக்கிறாய்; அனைத்தையும் வென்றவளாயும் இருக்கிறாய்; பிரணவப் பொருளான காயத்ரீயே! உன்னை எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன். ஸாவித்ரியே! உன்னை எழுந்தருளப் பிரார்த்திக்கின்றேன், ஸரஸ்வதியே! உன்னை எழுந்தருளப் பிரார்த்திக்கின்றேன்.

 காயத்ரீ ந்யாஸ :- ஸாவித்ர்யா ருஷிர் – விஸ்வா மித்ர: நிச்ருத் காயத்ரீச் சந்த: ஸவிதா தேவதா

🛕 பொழிப்புரை- (காயத்ரீ நியாஸம்) – காயத்ரீ மந்திரத்திற்கு விசுவாமித்திரர் ரிஷி, நிச்ருத்-காயத்ரீ எனும் சந்தம், ஸவிதா தேவதை.

🛕 ஸாங்கோபாங்கமாக ஜபம் செய்வதற்கு ரிஷி -சந்தஸ்- தேவதையுடன் கரந்யாஸம் அங்கந்யாஸம், ஸ்வரூபத்யானம், பஞ்ச பூஜை முதலியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:-

தத் ஸவிதுர் வரேண்யம் இதி பீஜம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி இதி சக்தி: தியோ யோ ந: ப்ரசோதயாத் இதி கீல கம் மம ஸ்ரீ காயத்ரீ-ப்ரஸாத-ஸித்த்யர்த்தே ஜபே விநியோக:

 கரந்யாஸம்  – தத்ஸவிதுர் -ப்ரஹ்மாத்மனே அங்குஷ்டாப் யாம் நம: வரேண்யம் விஷ்ண்வாத்மனே தர்ஜனீப்யாம் நம: பர்க்கோ தேவஸ்ய ருத்ராத்மனே மத்த்யமாப்யாம் நம: தீமஹி ஈச்வராத்மனே அநாமிகாப்யாம் நம: தியோ யோ ந: ஸதாசிவாத்மனே கனிஷ்ஷகாப்யாம் நம: ப்ரசோதயாத் பரமாத்மனே கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:

 அங்க ந்யாஸம் :- தத்ஸவிதுர் -ப்ரஹ்மாத்மனே ஹ்ருத யாய நம: வரேண்யம் விஷ்ண்வாத்மனே சிரேஸ ஸ்வாஹா பர்க்கோ தேவஸ்ய ருத்ராத்மனே சிகாயை வஷட் தீமஹி ஈச் வராத்மனே கவசாய ஹும் தியோ யோ ந: ஸதாசிவாத் மனே நேத்ரத்ரயாய வௌஷட் ப்ரசோதயாத் பரமாத்மனே அஸ்த்ராய பட்

பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம் முக்தா வித்ரும-ஹேமநீல- தவளச்சாயைர்- முகைஸ்- த்ரீக்ஷணைர் – யுக தாமிந்து-நிபத்த -ரத்ன மகுடாம் தத்வார்த்த – வர்ணாத்மிகாம் காயத்ரீம் வரதாபயாங்குச-கசா: -சுப்ரம் கபாலம் குணம்- ஸங்கம்- சக்ர-மதாரவிந்த- யுகளம் ஹஸ்தைர்- வஹந்தீம் பஜே

அக்ஷஸ்ரக்-குண்டிகா ஹஸ்தாம் சுத்தஸ்படிக- நிர்மலாம் ஸர்வ -வித்யாமயீம் வந்தே காயத்ரீம் வேதமாதரம்

யோ தேவ: ஸவிதாஸ்மாகம் தியோ தர்மாதிகோசரா: ப்ரேரயத் தஸ்ய யத் பர்க்கஸ்-தத்வரேண்ய-முபாஸ்மஹே

பஞ்ச பூஜா: -லம்- ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்ப யாமி ஹம் ஆகாசாத்மனே புஷ்பை பூஜயாமி யம் -வாய் வாத்மனே தூபமாக்ராபயாமி ரம்-அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி வம் – அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி ஸம் – ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

🛕 இதற்குபின் காயத்ரீ ஜபம், ஜபம் முடிந்தவுடன் ஒரு பிராணாயாமமும் அதன்பின் அங்கந்யாஸம் மட்டும் செய்து, பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக: என்று சொல்லி தியான மந்திரத்தால் துதித்துப் பஞ்ச பூஜை செய்யவும். இதன் பின் உபஸ்தானம்.

காயத்ரீ -ஜப:

ஓம் பூர்ப்புவன்ஸுவ: தத்ஸவிதுரீவரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்

🛕 பொழிப்புரை- (காயத்ரீ ஜபம்)- ஓங்காரப் பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதிஸ்வரூபத்தைத் தியானிப்போம்.

🛕 பிரயோகம் – காலையிலும் பகலிலும் கிழக்கு முகமாக நின்று கொண்டும் மாலையில் மேற்கு முகமாக உட்கார்ந்தும் ஜபம் செய்ய வேண்டும். கைகளை ஒட்டி வைத்துக்கொண்டு உள்ளங்கைகள் தன்னை நோக்கியிருக்கும்படி செய்து மேல் வஸ்திரத்தை உபவீதமாகப் போட்டு கைகளை மூடிக் கொண்டு காலையில் முகத்திற்கு நேராகவும், பகலில் மார்புக்கு நேராகவும் மாலையில் நாபிக்கு நேராகவும் ஜபிக்க வேண்டும். உதடு கூட அசையாமல் மனதிலேயே ஐந்து இடங்களில் நிறுத்தி ஓம்- பூர்ப்புவஸ் ஸுவ: – தத் ஸவிதுர் வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி -தியோ யோ ந: ப்ர-சோதயாத் என்று 108 தடவை ஜபிக்க வேண்டும். அவகாசமில்லா விட்டால் 54 தடவையாவது 28 தடவையாவது செய்யவும்.

காயத்ரீ-உபஸ்தானம்

ப்ராணாயாம: – ப்ராத: ஸந்த்யா, (ஆதித்ய)
(ஸாயம் ஸந்த்யா), உபஸ்தானம் கரிஷ்யே

உத்தமே ஸிகரே தேவீ பூம்யாம் பர்வதமூர்த்தனி
ப்ராஹ்மணேப்யோ ஹ்யனுஜ்ஞானம் கச்ச தேவி யதா ஸுகம்

🛕 பொழிப்புரை:- (ஜபம் முடிந்ததும் காயத்ரியைத் துதித்து ஸ்வஸ்தானம் எழுந்தருளப் பிரார்த்தித்தல்) பிராணாயாமம் செய்து -காலை ஸந்தியோபஸ்தானத்தைச் செய்கிறேன். (நடுப்பகலில் ஆதித்ய உபஸ்தானம், மாலையில் ஸாயம் ஸந்த்யா உபஸ்தானம்). பிரகாசிக்கின்ற காயத்ரீ தேவியே, பூமியில் பிரம்மோபாஸனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தைச் செய்து மேருமலையினுச்சியில் உத்தமமான சிகரத்திலுள்ள உனது கோயிலில் ஆனந்தமாய் எழுந்தருள்வாய்.

🛕 பிரயோகம் – நின்று கொண்டு ஜபம் செய்தாலும் உட்கார்ந்து கொண்டு பிராணாயாமம் செய்துவிட்டுப் பின் எழுந்து ஜபம் செய்த திசையையே நோக்கிக் கைகூப்பி நின்று கொண்டு உபஸ்தான மந்திரத்தைச் சொல்லி வந்தனம் செய்து தேவியை ஸ்வஸ்தானம் எழுந்தருளும்படி பிரார்த்திக்கவும்.

ஸூர்ய-உபஸ்தானம்

ப்ராத:- மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத: ஸ்ரவோ
தேவஸ்ய ஸாநஸிம் ஸத்யம் சித்ர ஸ்ரவஸ்தமம்

மித்ரோ ஜனான் யாதயதி ப்ரஜானன் மித்ரோ தாதார
ப்ருதீவீ- முத த்யாம் மித்ர: க்ருஷ்டீ-ரனிமிஷாபிசஷ்டே
ஸத்யாய ஹவ்யம் க்ருதவத் -விதேம

ப்ர ஸ மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வான் யஸ்த
ஆதித்ய ஸிக்ஷதி வ்ரதேன ந ஹன்யதே ந ஜீயதே
த்வோதோ நைந-மஹோ அஸ்னோத-யந்திதோ ந
தூராத்

🛕 பொழிப்புரை:- காலையில் -பிரஜைகளை இரக்ஷிக்கும் சூரிய தேவனுடைய பஜிக்கத்தகுந்ததும் அழிவற்றதும் கேட்பவர் மனத்தைக் கவர்வதில் சிறந்ததுமான கீர்த்தியையும் பெருமையையும் தியானிக்கிறேன்.

🛕 சூரியன் அனைத்தையும் அறிந்து கொண்டு ஜனங்களை நடத்தி வைக்கிறார். சூரியன் பூமியையும் மேலும் வானுலகையும் தாங்குகிறார். சூரியன் ஜீவராசிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அழியாத பலனைப் பெறுவதற்காக நெய் நிறைந்த ஹவிஸ்ஸை அளிக்கின்றோம்.

🛕 மித்திரரான சூரியபகவானே! எவன் நியமத்துடன் உம்மை ஆராதிக்க விரும்புகிறானோ அந்த மனிதன் பரி பூர்ணமான தர்மபலனுடன் கூடினவனாக ஆகட்டும். உம்மால் இரக்ஷிக்கப்பட்டவன் நோய் வாய்ப்பட்டு அழிவுறான்: இவனைப் பாவம் ஸமீபத்திலோ தூரத்திலோ துன்புறுத்தாது.

🛕 பிரயோகம் – ஜபம் செய்த திசை நோக்கிக் கைகூப்பி நின்று கொண்டு உதிக்கும் சூரியமண்டல மத்தியில் விளங்கும் பரமாத்மாவை இந்த மந்திரத்தால் துதித்து வணங்க வேண்டும்.

 ரிக்வேதிகளுக்கு: காலையில் உபஸ்தான மந்திரம்: 

மித்ரஸ்ய சர்ஷணீத்ருதோஸவோ தேவஸ்ய ஸாநஸி த்யும்னம் சித்ர – ஸ்ரவஸ்-தமம் மித்ரோ ஜனான் யாதயதி ப்ருவாணோ மித்ரோ தாதார ப்ருதிவீ- முத த்யாம் மித்ர- க்ருஷ்டீ- ரநிமிஷா-ஸபிசஷ்டே மித்ராய ஹவ்யம் க்ருதவஜ்ஜு- ஹோத ப்ரஸமித்ர மாத்தோ அஸ்து ப்ரயஸ்வான் யஸ்த ஆதித்ய ஸிக்ஷதி வ்ரதேந ந ஹன்யதே ந ஜீயதே த்வோதோ நைநம் – ஹோ அஸ்னோத் -யந்திதோ ந தூராத்

ஜாதவேதஸே ஸுநவாம ஸோம -மராதீ யதோ நித ஹாதி வேத: ஸ ந: பர்ஷததி துர்க்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி: பிஸங்க ப்ருஷ்டி – மம்ப்ருணம் பிஸாதி- மிந்த்ரஸம் -ம்ருண ஸர்வம் ரக்ஷோ நிபர்ஹய (முகத்தைச் சுற்றி) பத்ரங் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம் பஸ்யேமாக்ஷபிர்-யஜத்ரா: ஸ்திரை-ரங்கைஸ் – துஷ்டு- வா -ஸஸ்தனூபி: வ்யஸேம தேவஹிதம் யதாயு: (காது) கேஸ்யக்னிம் கேஸீவ்ருஷம் கேஸீ பிபர்த்தி ரோதஸீ கேஸீ விச்வம் ஸ்வர்த்ருஸே கேஸீதம் ஜ்யோதிருச்யதே (சிரஸ்)

 ஸாமவேதிகளுக்கு காலையில் உபஸ்தான மந்திரம்:- 

யஸோஸஹம் பவாமி ப்ராஹ்மணானாம் யஸோ ராஜ்ஞாம் யஸோ விஸாம் யஸ: ஸத்யஸ்ய பவாமி பவாமி யஸஸாம் யஸ:

ஆதித்ய நாவ -மாரோக்ஷம் பூர்ணா- மபரிபாதினீம் அச் சித்ராம் பாரயிஷ்ண்வீம் ஸதாரித்ராம் ஸ்வஸ்தயே ஓம் நம ஆதித்யாய, நம ஆதித்யாய உத்யந்தம் த்வாஸஸதித்யானூதீயாஸம்

மத்யாஹ்னே- ஆஸத்யேன ரஜஸா வர்த்தமாநோ
நிவேஸயன் – னம்ருதம் மர்த்யஞ்ச ஹிரண்யயேன
ஸவிதா ரதேனாஸஸதேவோ யாதி புவனா விபஸ்யன்

உத்வயம் தமஸஸ்பரி பஸ்யந்தோ ஜ்யோதி – ருத்த ரம்
தேவம் தேவத்ரா ஸூர்ய-மகன்ம ஜ்யோதி – ருத்த
மம் உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ:
த்ருஸே விஸ்வாய ஸூர்யம்.

சித்ரந் தேவானா – முதகா -தனீகம் சக்ஷுர் – மித்ரஸ்ய
வருணஸ்யாக்னே: ஆ ப்ரா த்யாவா ப்ருதிவீ அந்த
ரீக்ஷ ஸூர்ய ஆத்மா ஜகதஸ் – தஸ்துஷஸ்ச
தச்சக்ஷுர் – தேவஹிதம் புரஸ்தாச் சுக்ரமுச்சரத்
பஸ்யேம ஸரத: ஸதம், ஜீவேம ஸரத: ஸதம், நந்
தாம ஸரத: ஸதம், மோதாம ஸரத, ஸதம், பவாம
ஸரத: ஸத: ஸ்ருணவாம ஸரத: ஸதம், ப்ரப்ரவாம
ஸரத: ஸத- மஜீதாஸ்யாம ஸரத: ஸதம், ஜ்யோக்ச ஸூர்யம் த்ருஸே
ய உதகான் – மஹதோர்ணவாத் -விப்ராஜமான: ஸரிரஸ்ய
மத்யாத் ஸமா வ்ருஷபோ லோஹிதாக்ஷ: ஸூர்யோ
விபச்சின்-மனஸா புநாது

🛕 பொழிப்புரை- நடுப்பகலில் – ஆன்ம ஜோதியாலும் கண்காணும் பிரகாசத்தாலும் தேவ உலகினரையும் மனித உலகினரையும் அவரவர் கருமங்களில் புகுத்திக் கொண்டு சுற்றிவருபவரான சூரியதேவன் பொன்மயமான தேரில் உலகங்களை நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறார்.

🛕 இருளை விழுங்கிக்கொண்டு உதிக்கின்ற உயர்ந்த ஜோதி வடிவினராயும் தேவர்களையும் இரக்ஷிக்கின்றவராயும் உள்ள சூரியதேவனைப் பார்ப்பவர்களான நாம் உத்தமமான ஆன்ம ஜோதியையே அடைந்தவர்களாவோம். அந்தப் பிரசித்தமான அனைத்தையும் அறிகின்ற தேவனான சூரியனைக் கிரணங்களாகிற குதிரைகள் உலகோரின் தரிசனத்திற்காக உயரத் தாங்கிச் செல்கின்றன.

🛕 மித்தரனுக்கும் வருணனுக்கும் அக்கினிக்கும் கண் போன்றவரும் விசித்திரமான ஸர்வ தேவஸ்வரூபியும் ஆகிய சூரியன் உயரச் செல்லுகிறார். அசையும் பொருள்களுக்கும் அசையாப் பொருள்களுக்கும் ஆத்மாவாகிய சூரியன் தேவலோகம் பூலோகம் அந்தரிக்ஷம் அனைத்தையும் வியாபிக்கிறார். கிழக்கில் பரிசுத்தமாய் உதித்து தேவர்களுக்கு நன்மை செய்வதும் கண்போன்றதுமான அந்த சூரியமண்டலத்தை நூறாண்டு கண்டு வணங்குவோம்: அங்ஙனம் நூறாண்டு வாழ்வோம்; நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம், நூறாண்டு மகிழ்வோம்; நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம்:

🛕 நூறாண்டு இனியதையே கேட்போம்; நூறாண்டு இனியதையே பேசுவோம்: நூறாண்டும் தீமைகளால் ஜயிக்கப்படாதவர்களாகவே வாழ்வோம். இங்ஙனம் நீண்ட காலம் சூரிய தேவனைப் பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகின்றோம்.

🛕 விரும்பிய பலனை யளிப்பவரும் சிவந்த கண்களையுடையவரும் எல்லா மறிந்தவருமான எவர் எத்திக்கிலும் பிரகாசிப்பவராய்ப் பெரிய ஸமூத்திரத்தின் ஜல மத்தியிலிருந்து காலையில் உதித்தாரோ அந்த சூரிய தேவன் என்னை முழு மனதுடன் புனிதனாக்கி யருள் வாராக.

🛕 பிரயோகம்- பஸ்யேம ஸரத: ஸதம் என்ற மந்திரம் சொல்லும்போது வருணபாசம் எனும் முத்திரையில் விரல்களின் நடுவிலுள்ள துவாரத்தின் மூலம் சூரியனைப் பார்க்க வேண்டும்.

 ரிக்வேதிகளுக்கு: நடுப்பகலில் உபஸ்தான மந்திரம்- 

ஆக்ருஷ்ணேந ரஜஸா வர்த்தமானோ நிவேஸயன் -னம்ரு தம் மர்த்யஞ்ச ஹிரண்யயேன ஸவிதா ரதேநாதேவோ யாதி புவனானி பஸ்யன் தச்சக்ஷுர்-தேவஹிதம் புரஸ்தாச் சுக்ர- முச்சரத் பஸியேம் ஸரத: ஸதம் ஜீவேம ஸரத: ஸதம் ஹ ஸ: ஸுசிஷத் வஸுரந்தரிக்ஷஸத் ஹோதா வேநிஷ-ததிதிர் துரோணஸத ந்ருஷ்த்வரஸத்-ருதஸத் -வ்யோமஸ-தபஜா கோஜா- ருதஜா அத்ரிஜா ருதம் ப்ருஹத் உதுத்யம் ஜாத வேதஸம் தேவம் வஹந்தி கேதவ: த்ருஸே விஸ்வாய ஸூர்யம் அப த்யே தாயவோ யதா நக்ஷத்ராயந்த்யக்துபி: ஸூராய விஸ்வ சக்ஷஸே

சித்ரந் தேவானா-முதகாதனீகம் சக்ஷுர்-மித்ரஸ்ய வருணஸ்யாக்னே: ஆப்ரா த்யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷஸூர்ய ஆத்மா ஜகதஸ்-தஸ்துஷஸ்ச தத் ஸூர்யஸ்ய தேவத்வம் தன் மஹித்வம் மத்யா காத்தோர் விததம் ஸஞ்ஜபார யதேதயுக்தஹரிதஸ் ஸதஸ்தாத் ஆத்ராத்ரீ வாஸஸ்தனுதே ஸிமஸ்மை தன் மித்ரஸ்ய வருணஸ்யா-பிசக்ஷே ஸூர்யோ ரூபம் க்ருணுதே த்யோருபஸ்தே

 ஸாமவேதிகளுக்கு நடுப்பகலில் உபஸ்தான மந்திரம்- 

ஆதித்ய நாவமாரோக்ஷம் பூர்ணா -மபரிபாதினீம் அச்சித்-ராம் பாரயிஷ்ணவீம் ஸதாரித்ராம் ஸவஸ்தயே ஓம் நம ஆதித்யாய, நம ஆதித்யாய, நம ஆதித்யாய

உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: த்ருஸேவிஸ்வாய ஸூர்யம் சித்ரம் தேவானாமுதகா-தனீகம் சக்ஷுர்மித்ரஸ்ய வருணஸ் -யாக்னே ஆ ப்ரா த்யாவா ப்ரு திவீ அந்தரிக்ஷ ஸூர்ய ஆத்மா ஜகதஸ்தஸ்துஷஸ்ச தச்ச க்ஷுர் தேவஹிதம்: பரஸ்தாச் சுக்ரமுச்சரத்

ஓம் பூர்ப்புவஸ்ஸுவரோம் ஸூர்ய இவ த்ருஸே பூயா- ஸம் அக்னிரிவ தேஜஸா, வாயுரிவ ப்ராணேன, ஸோம இவ கந்தேன, ப்ருஹஸ்பதிரிவ புத்த்யா, அஸ்விநாவிவ ரூபணே இந்த்ராக்னீ இவ பலேன, ப்ரஹ்மபாக ஏவாஹம் பூயாஸம், பாப்ம-பாகா மே த்விஷந்த:

ஸாயங்காலே – இமம் மே வருண ஸ்ருதீ ஹவ –
மத்யா ச ம்ருடய த்வாமவஸ்யு -ராசகே

தத்- த்வா யாமி ப்ரஹ்மணா வந்தமானஸ் – ததா
ஸாஸ்தே யஜமானோ ஹவிர்ப்பி, அஹேடமானோ வரு
ணேஹ போத்யுருரஸஸ மா ந ஆயு: ப்ரமோஷீ:

யச்சித்திதே விஸோ யதா ப்ரதேவ வருண வ்ரதம்
மினீ மஸி த்யவி த்யவி யத்கிஞ்சேதம் வருண தைவ்யே

ஜநேஸபி-த்ரோஹம் மனுஷ்யாஸ்-சராமஸி அசித்தீ-
யத்-தவ தர்மா யுயோபிம மா நஸ் தஸ்மா -தேனஸோ
தேவ ரீரிஷ:

கிதவாஸோ யத்-ரிரிபுர்-ந தீவி யத்வாகா ஸத்ய-
முதயந் ந வித்ம ஸர்வா தா விஷ்ய சிதிரேவ தேவாதா
தே ஸ்யாம வருண ப்ரியாஸ:

🛕 பொழிப்புரை: மாலையில் – வருணதேவரே, என்னுடைய இந்த வேண்டுதலைக் கேட்டருள்வீர். இப்பொழுதே இன்புறச் செய்வீர். ரக்ஷையை விரும்பி உம்மைப் பிரார்த்திக்கின்றேன்.

🛕 வேத மந்திரத்தால் ஸ்தோத்திரம் செய்து கொண்டு அதற்காகவே உம்மைச் சரண் அடைகின்றேன். யாகம் செய்பவன் ஹவிஸ் திரவியங்களைக் கொண்டு அதையே கோருகிறான். புகழ்மிக்க வருணதேவரே, அநாதரவு செய்யாமல் இப்பொழுது என் பிரார்த்தனையை அங்கீர்க்க வேண்டும். எமது ஆயுளைக் குறைத்து விடாதீர்.

🛕 வருணதேவரே, விவேகமற்ற மனிதர்களைப் போல் உம்முடைய ஆராதனயை தினந்தோறும் அனுஷ்டிக்காமல் அஜாக்கிரதையால் எதை விடுத்தோமோ; வருண தேவரே, தேவதைகளின் சமூகத்திற்கு மனிதர்களாகிய நாங்கள் அறியாமையில் இவ்விதமான வஞ்சனை எடுத்து செய்துள்ளோமோ; உம்முடைய தருமத்தை எதைக் கெடுத்தோமோ, வருணதேவரே, அந்தப் பாவத்திற்காக எங்களை இம்சியாது காத்தருளல் வேண்டும்.

🛕 சூதாடிகளைப் போன்றவர்கள் நல்லோர் நாடாத இடத்தில் எந்தப் பழியை அநியாயமாக என்மீது சுமத்தினார்களோ அல்லது எந்தப்பாவம் உண்மையில் அறிந்து செய்யப்பட்டதோ மேலும் எதைச் செய்தும் அறியவில்லையோ அவையனைத்தும் வலியின்றிச் சிதறிப்போமாறு நாசம் செய்யும். வருண தேவரே பின்னர் உமக்குப் பிரியமானவர்களாக நாங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

 ரிக்வேதிகளுக்கு: மாலையில் உபஸ்தான மந்திரம்- 

இமம் மே வருண ஸ்ருதீ ஹவ-மத்யா ச ம்ருளய த்வா-மவஸ்யு -ராசகே தத்-த்வா யாமி ப்ரஹ்மணா வந்தமானஸ்- ததாஸஸ்தே யஜமானே ஹவிர்ப்பி: அஹேளமானோ வருணேஹ போத்யுருஸ: ஸமா ந ஆயு: ப்ரமோஷீ: யச்சித்தி தே விஸோ யதா ப்ரதேவ வருண வ்ரதம் மிநீமஸி த்யவி த்யவி யத்கிஞ்சேதம் வருணதைவ்யே ஜநேபித்ரோஹம் மனுஷ்யாஸ் சராமஸி அசித்தீ யத் தவ தர்மா யுயோபிம மா நஸ்-தஸ்மா-தேனஸோ தேவ ரீரிஷ: கிதவாஸோ யத்ரிரிபுர்-நதீவியத்வாகா ஸத்ய – முதயந் ந வித்ம ஸர்வாதா விஷ்ய ஸிதி ரேவ தேவாதா தே ஸ்யாம வருண ப்ரியாஸ:

ஜாதவேதஸே ஸுநவாம ஸோம மராதீயதோ நிதஹாதி வேத: ஸ ந: பர்ஷததி துர்க்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி: பிஸங்க ப்ருஷ்டி – மம்ப்ருணம் பிஸாசி -மிந்த்ரஸம் – ம்ருண ஸர்வம் ரக்ஷோ நிபர்ஹய (முகத்தைச்சுற்றி) பத்ரங் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம் பஸ்யேமாக்ஷ பிர் யஜத்ரா: ஸ்திரை -ரங்கைஸ்- துஷ்டுவா ஸஸ்தனூபி: வ்யஸேம தேவஹிதம் யதாயு: (காது) கேஸ்யக்னிம் கேஸீ வ்ருஷம் கேஸீ பிபர்த்தி ரோதஸீ கேஸீ விச்வம் ஸ்வர்த் ருஸே கேஸீதம் ஜ்யோதி-ருச்யதே (சிரஸ்).

 ஸாமவேதிகளுக்கு: மாலையில் உபஸ்தான மந்திரம்:- 

யஸோஸஹம் பாவமி ப்ராஹ்மணானாம் யஸோ ராஜ்ஞாம்
யஸோ விஸாம் யஸ: ஸத்யஸ்ய பவாமி பவாமி யஸஸாம்
யஸ:

ஆதித்ய நாவ – மாரோக்ஷம் பூர்ணா-மபரிபாதினீம் அச் சித்ராம் பாரயிஷ்ண்வீம் ஸதாரித்ராம் ஸ்வஸ்தயே ஓம் நம ஆதித்யாய, நம ஆதித்யாய, நம ஆதித்யாய ப்ரதிதிஷ்டந்தம் த்வாஸ்ஸதித்யானு ப்ரதிதிஷ்டாஸம்

ஸமஷ்ட்யபிவாதனம்

ஸந்த்யாயை நம: ஸாவித்ர்யை நம: காய:
த்ர்யை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவ
தாப்யோ நமோ நம: காமோஸகார்ஷீன் -மன்யு-ரகார்
ஷீந் நமோ நம:

🛕 பொழிப்புரை: ஸந்தியா தேவிக்கு நமஸ்காரம். ஸாவித்ரீதேவிக்கு நமஸ்காரம். காயத்ரீ தேவிக்கு நமஸ்காரம். ஸரஸ்வதீ தேவிக்கு நமஸ்காரம். எல்லா தேவதைகளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம். காமம் செய்தது, கோபமே செய்தது- நான் செய்த பாவமெதுவும் வேண்டுமென்று மனமொப்பிச் செய்ததன்று: காமக்குரோத வசத்தால் அறியாமையால் நிகழ்ந்துவிட்டதால் பொருத்தருள வேண்டும் – தேவர்களே, உங்களைப் பன்முறை வணங்குகிறேன்.

🛕 பிரயோகம் – ஜபம் செய்த திசையிலிருந்து ஆரம்பித்து வரிசையாக நாலு திசைகளிலும் அஞ்ஜலி செய்து முடிவில் ஜபம் செய்த திசையில் ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: என்றும் காமோகார்ஷீன் மன்யுரகார்ஷீந் நமோ நம: என்றும் வணங்கவேண்டும்.

அபிவாதயே (வைச்வாமித்ர, ஆகமர்ஷண, கௌசிக)
த்ரய- ஆர்ஷேய ப்ரவரான்வித (கௌசீக) கோத்ர:
(ஆபஸ்தம்ப) ஸூத்ர: (யஜு:) ஸாகாத்யாயீ,
ஸ்ரீ(க்ருஷ்ண) ஸர்மா நாமாஹம் அஸ்மி போ:

🛕 பொழிப்புரை – ஸர்வ தேவதேவீஸ்விரூபியான பகவதி உனது பாதமலங்களில் வணங்குகிறேன் (விசுவாமித்திரர், ஆகமர்ஷணர், கௌசிகர் என்ற மூன்று) ரிஷிகளை கோத்திரப்பிரவர்த்தகர்களாயுடைய (கௌசிக) கோத்திரத்திற் பிறந்தவனும் (ஆபஸ்தம்ப) ஸூத்திரத்தின்படி கருமங்களை யனுஷ்டிப்பவனும் (யஜு வேதத்தை) அத்தியயனம் செய்பவனும் ஸ்ரீ (கிருஷ்ண) சரீமா என்ற பெயரை உடையவனும் அடியேன்.

🛕 பிரயோகம்: இரு காதுகளையும் உள்ளங்கைகளால் தொட்டுக்கொண்டு இம்மந்திரத்தைக் கூறி முடிவில் தன் கால் கட்டைவிரல்களையும் பூமியையும் இருகைகளாலு தொட்டு விட்டு ஸந்தியா தேவியை நினைத்து வணங்க வேண்டும்.

🛕 அபிவாதயே சொல்லும் பொழுது அவரவர் கோத்திரத்திற்கு உரியபடி ரிஷிகளின் பெயர்களை மேலே கூறிய உதாரணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

 முக்கியமான சில அபிவாதனப் பிரவரங்கள் 

கோத்ரம் ப்ரவரம்

1. ஆத்ரேய= ஆத்ரேய – ஆர்ச்சநாநஸ – ஸ்யாவாஸ்வ
2. உதுத்ய= ஆங்கீரஸ – ஔதுத்ய – கௌதம
3. நைத்ருவகாச்யப – ஆவத்ஸார – நைத்ருவ காச்யப
4. ரேப= காச்யபகாச்யப – ஆவத்ஸார – ரைப
5. சாண்டில்ய= காச்யபகாச்யப – ஆவத்ஸார – சாண்டில்ய
6. காச்யப (காத்யாயன ஸூத்ர:)= காச்யப – வத்ஸர- நைத்ருவ -ரேப -ரைப -சாண்டில- சாண்டில்ய
7. கப்யாங்கிரஸ= ஆங்கீரஸ – ஆமஹாய்ப – ஔருஷ்ய
8. கார்க்கேய= ஆங்கீரஸ – கார்க்ய – சைன்ய
9. கார்க்கேய= ஆங்கீரஸ – பரர்ஹஸ்பத்ய – பாரத் – வாஜ – சைன்ய – கார்க்ய
10. கௌண்டின்ய= வாஸிஷ்ட – மைத்ராவருண – கௌண்டின்ய
11. கௌசிக= வைச்வாமித்ர – ஆகமர்ஷண – கௌசிக
12. கௌதம= ஆங்கீரஸ – ஆயாஸ்ய – கௌதம
13. பராசர= வாஸிஷ்ட – சாகத்ய – பாராசர்ய
14. பௌருகுத்ஸ= ஆங்கீரஸ -பௌருகுத்ஸ -த்ராஸதஸ்ய
15. பாதராயண= ஆங்கீரஸ – பௌருகுத்ஸ – த்ராஸ தஸ்ய
16. பாரத் வாஜ= ஆங்கீரஸ – பார்ஹஸ்பத்ய – பாரத்வாஜ
17. மௌத்கல்ய= ஆங்கீரஸ – ஆம்பரீஷ – மௌத்-கல்ய
18. மௌத்கல்ய= ஆங்கீரஸ – பார்ம்யச்வ – மௌத் கல்ய
19. மௌத்கல்ய= ஆத்ரேய – ஆர்ச்சனானஸ – பௌர்வாதித
20. மௌனபார்க்கவ= பார்க்கவ – வைதஹவ்ய – ஸாவேதஸ
21. ராதீத்ர= ஆங்கீரஸ – ஸவரூப – ராதீத்ர
22. லோஹித= வைச்வாமித்ர – அஷ்டக – லோஹித
23 வாதூல= பார்க்கவ – வைதஹவ்ய – ஸாவேதஸ
24. வார்த்தஸ= வார்த்தஸ (ஏகார்ஷேய)
25. வாஸிஷ்ட= வாஸிஷ்ட – மைத்ராவருண- கௌண்டின்ய
26. விச்வாமித்ர= வைச்வாமித்ர – தைவராத – ஔதல
27. விஷ்ணுவ்ருத்த= ஆங்கீரஸ – பௌருகுத்ஸ – த்ரா ஸதஸ்ய
28. சாண்டில்ய= காச்யப – தைவல – அஸித
29. சாண்டில்ய= காச்யப – ஆவத்ஸார -நைத்ருவ – ரேப -ரைப -சௌண்டிலய – சாண்டில்ய
30. சாலாவத= வைச்வாமித்ர – தைவராத – ஔதல
31. சௌனக= கார்த்ஸமத (ஏகார்ஷேய)
32. ஸ்ரீவத்ஸ= பார்க்கவ – ச்யாவன – ஆப்ன வான – ஔர்வ – ஜாமதக்ன்ய
33. ஷடமர்ஷண ஆங்கீரஸ = த்ராஸதஸ்ய – பௌருகுத்ன
34. ஸங்க்ருதி= சாத்ய – ஸாங்க்ருத்ய – கௌரிவீத
35. ஸங்க்ருதி= ஆங்கீரஸ – ஸாங்க்ருத்ய – கௌரீவீத
36. ஹரித= ஆங்கீரஸ – அம்பரீஷ – யௌவனாச்வ

திக்தேவதா – வந்தனம்

ப்ராத்யை திஸே நம: தக்ஷிணயை திஸே நம: ப்ரதீச்யை திஸே நம உதீச்யை திஸே நம: ஊர்த் வாய நம: அதராய நம அந்தரிக்ஷாய நம: பூம்யை நம: ப்ரஹ்மணே நம: விஷ்ணவே நம: ம்ருத்யவே நம:

🛕 பொழிப்புரை – (திக் தேவதைகளின் வந்தனம்) கிழக்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம். தெற்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம். மேற்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம். வடக்கு திக்கின் தேவதைக்கு நமஸ்காரம். மேல் உள்ள தேவதைகட்கு நமஸ்காரம் இடையிலுள்ள தேவதைகட்கு நமஸ்காரம். பூதேவிக்கு நமஸ்காரம். பிரம்மாவுக்கு நமஸ்காரம். விஷ்ணுவுக்கு நமஸ்காரம். ருத்திரனுக்கு நமஸ்காரம்.

🛕 பிரயோகம் – ஜபம் செய்த திசையிலிருந்து ஆரம்பித்து வரிசையாக நான்கு திசைகளிலும் மேல் கீழ் திசைகளிலும் இடைவெளியிலும் அஞ்ஜலி செய்து திக்தேவதைகளையும் பின் பூமியையும் மும்மூர்த்திகளையும் வணங்கவேண்டும்.

யம வந்தனம்

யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவேசாந்த காய ச வைவஸ்வதாய காலாய ஸர்வ பூதக்ஷயாய ச ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: சித்ரகுப்தாய வை நம ஓம நம இதி

🛕 பொழிப்புரை -யமனுக்கு நமஸ்காரம், அனைத்தையும் அடக்கி ஆள்பவனாயும், தருமதேவதையாயும் அழிப்பவனாயும் முடிப்பவனாயும் விவஸ்வானுடைய புத்திரனாயும்

🛕 கால ஸ்வரூபியாயும் எல்லாப் பிராணிகளையும் ஒழிப்பவனாயும் மிக்க பலசாலியாயும் தத்னன் என்ற பெயருடையவனாயும் கரியமேனி உடையவனாயும் எல்லோராலும் பூஜிக்கப்பட்டவனாயும் பெருவயிறு, படைத்தவனாயும் விசித்திரமானவனாயும் விசித்திரமாய்த் தன் ரகசியத்தைக் காப்பாவனாயும் உள்ள யமதர்மராஜனுக்கு நமஸ்காரம், மீண்டும் சித்ரகுப்தனுக்கு நமஸ்காரம் ஓம் நம என்று.

🛕 பிரயோகம் – தெற்கு நோக்கி நின்று அஞ்ஜலி செய்து இம்மந்திரத்தால் யமதர்மராஜனை வணங்கவேண்டும்.

ஹரிஹர – வந்தனம்

ருத ஸத்யம் பரம்ப்ரஹ்ம புருஷம் ச்ருஷ்ணபிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஸ்வரூபாய வை நம: விஸ்வரூபாய வை நம ஓம் நம இதி

🛕 பொழிப்புரை – காணும் பொருள்களின் அழகாயும் காட்சிக்கு ஆதாரமாயும் உள்ள பரப்பிரம்மத்தை, உடல்தோறும் உறைபவனைக் கருமேனித் திருமாலும் செமமேனிச் சிவனும் ஒன்றாயியைந்த வடிவை, வீரியத்தின் மேல் நோக்குடையவனை, முக்கண்ணனை, எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவனை, நமஸ்கரிக்கின்றேன். எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவனுக்குப் பன்முறை நமஸ்காரம் ஓம் நம: என்று

🛕 பிரயோகம் – மேற்கு நோக்கி நின்று அஞ்ஜலி செய்து இம்மந்திரத்தால் ஹரிஹர வந்தனம் செய்யவேண்டும்.

ஹரிஹர வந்தனத்திற்குப் பின் வடக்கு நோக்கி ஸர்ப்பரக்ஷாமந்திரம் ஜபிப்பது சில ஸம்பிரதாயங்களில் உண்டு. அது பின்வருமாறு:-

நர்மதாயை நம ப்ராதர் – நர்மதாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம் க்ராஹி மாம் விஷஸர்ப்பத: அப
ஸர்ப்ப ஸர்ப்ப பத்ரம் தே தூரம் கச்ச மஹா யசா: ஜனமே
ஜயஸ்ய யஜ்ஞாந்தே ஆஸ்தீத வசனம் ஸ்மரன் ஜரத்கா
ரோர் ஜாத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயசா: ஆஸ்தீகஸ்-
ஸத்யஸந்தோ மாம் பன்னகேப்யோஸபிரக்ஷது

ஸூர்யநாராயண வந்தனம்

நம: ஸவித்ரே ஜகதேக- சக்ஷுஷே ஜகத்ப்ரஸூதி-
ஸ்திதி – நாஸ – ஹேதவே த்ரயீமயாய த்ரிகுணாத்ம-
தாரிணே விரிஞ்சி – நாராயண – ஸங்கராத்மனே

த்யேய: ஸதா – ஸவித்ருமண்டல -மத்யவர்த்தீ நாராயண:
ஸரஸிஜாஸந- ஸந்நிவிஷ்ட கேயூர – வான் மகர
குண்டலவான் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுர் – த்ருத-
ஸங்க – சக்ர: ஸங்க -சக்ர- கதா- பாணே த்வாரகாநிலயாச்யுத
கோவிந்த புண்டரீதாக்ஷ ரக்ஷ மாம் ஸரணாகதம்
அநாஸத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்
ஸர்வதேவ நமஸ்காய கேராவம் ப்ரதி கச்சதி
கேஸவம் ப்ரதி கச்சதி ஓம் நம இதி
அபிவாதயே அஸ்மி போ: (நமஸ்கார:)

🛕 பொழிப்புரை – உலகிற்கெல்லாம் ஒரு கண்ணாக விளங்குபவரும், உலகில் சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரணரும், வேதஸ்வரூபியும் முக்குணத்தால் மூன்று வடிவம் தாங்கி, பிரம்மா, விஷ்ணு, சங்கரன் என்ற மூர்த்திகளில் விளங்குபவரும் ஆகிய சூரிய தேவனுக்கு நமஸ்காரம்.

🛕 சூரியமண்டல மத்தியில் உறைபவரும் பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவரும் தோள்வளையும் காதில் மகர குண்டலமும், சிரசில் கிரீடமும் , மார்பில் முத்து மாலையும் அணிந்தவரும் சங்கரம் சக்கரமும் ஏந்தியவரும் பொன்போலொளிரும் திருமேனியுடையவருமான நாராயணர் எப்போதும் தியானித்தற்குரியவர்.

🛕 சங்கு சக்கரம் கதை இவைகளைக் கையில் ஏந்தியவரே! துவாரகையில் நித்தியவாஸம் செய்பவரே அடியோரை நழுவவிடாதவரே! உலகரக்ஷகரே தாமரை போன்ற கண்களையுடையவரே சரணடைந்த என்னைக் காத்தருளும்.

🛕 ஆகாயத்திலிருந்து விழுந்த நீர் ஸமுத்ரத்தை நோக்கி எவ்வாறு சென்றடைகின்றதோ அவ்வாறே எல்லா தேவர்களுக்கும் செய்யும் நமஸ்காரம் கேசவனையே நாடி அடைகின்றது. ஸ்ரீகேசவனையே நாடி அடைகின்றது. ஓம் நம; என்போம்.

🛕 அபிவாதயே… அஸ்மி போ, என்று நமஸ்காரம்.

🛕 பிரயோகம் – ஜபம் செய்த திசை நோக்கி நின்று அஞ்ஜலி செய்து சூரியமண்டலத்தில் மும்மூர்த்தி வடிவாய் விளங்கும் பரமாத்மாவைப் போற்றி அபிவாதனத்துடன் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டும்.

🛕 வைஷ்ணவர்கள் திக்தேவதா வந்தனம் செய்த பிறகு யம வந்தனம் ஹரிஹரவந்தனம் செய்யாமல் த்யேய: ஸதா என்று தொடங்கி சங்கசக்ர கதாபாணே சரணாகதம் வரை சொல்லி நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோபராஹ்மண ஹிதாய ச ஜகத்திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம: என்றும் சொல்லி அபிவாதனம் செய்வது ஸம்பிரதாயம்.

ஸமர்ப்பணம்

காயேன வாசா மனஸேந்த்ரியைர் -வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி (ஆசமனம்)

🛕 பொழிப்புரை- சரீரத்தாலோ வாக்காவோ மனத்தாலோ கருமேந்திரியங்களாலோ ஞானேந்திரியங்களாலோ இயற்கையின் இயக்கத்தாலோ எது எதைச் செய்கிறேனோ அது எல்லாவற்றையும் பரம புருஷனாகிய நாராயணனுக்கே என்று ஸமர்ப்பிக்கின்றேன். (ஆசமனம்).

🛕 பிரயோகம் – வலது உள்ளங்கையில் சிறிது தீர்த்தத்தை ஏந்திக்கொண்டு ஸந்தியோபாஸனையின் பலனைப் பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனுக்கு ஸமர்ப்பனம் செய்வதாய்ச் சிந்தித்துப் பின்னர் நுனி விரல்களின் வழியாகத் தீர்த்தத்தை பூமியில் விட்டு விட்டு ஆசமனம் செய்யவேண்டும்.

ரக்ஷா

அத்யா நோ தேவ ஸவித: பரஜாவத் ஸாவி:
ஸௌபகம் பரா துஷ்வப்னிய ஸுவ விஸ்வானி
தேவ ஸவிதர்- துரிதானி பரா ஸுவ யத் பத்ரம் தன்ம
ஆஸுவ

இதி ஸந்த்யாவந்தன உத்தரபாக:

🛕 பொழிப்புரை – இரக்ஷை அல்லது காப்பு – ஸவித்ரு தேவனே! இப்போது எங்களுக்கு ஸந்ததிகளுடன் கூடிய ஸௌபாக்யத்தை அருவ வேண்டும். கெட்ட கனவின் நிமித்தத்தையும் பலனையும் விலக்கியருள்வீர். ஸவித்ரு தேவனே! எல்லா பாவங்களையும் விலக்கியருள்வீர். எது உயர்ந்த நன்மையோ அதை எனக்குக் கூட்டி வைத்து அருளுதல் வேண்டும்.

🛕 பிரயோகம் – ஜபம் செய்த இடத்தில் தீர்த்தத்தைப் புரோக்ஷித்துப் பின் குனிந்து வலது பவித்திர விரலால் பூமியைத் தொட்டு இம்மந்திரத்தை ஜபித்துப் புருவமத்தியில் இரக்ஷை இட்டுக் கொள்ள வேண்டும்.

🛕 இங்ஙனம் ஸந்தியாவந்தன உத்தரபாகத்திற்குப் பொழிப்புரை முற்றிற்று.

அனுபந்தம் 1

ஸமிதாதானம்

ஸுக்லாம்பரதாம் + ப்ரீத்யர்க்தம் ப்ராதஸ்-ஸமிதா தானம் (ஸாயம் ஸமிதாதானம்) கரிஷ்யே

(ஸௌகிகாக்னிம் ப்ரதிஷ்டாப்ய அக்னி -மித்வா ப்ரஜ்வால்ய)

பரித்வாக்னே பரிம்ருஜாம் யாயுஷா ச தனேன ச
ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரைஸ்
ஸுவர்ச்சா வர்ச்சஸா, ஸுபோஷ: போஷைஸ் – ஸுக்
ருஹோ க்ருஹைஸ் -ஸுபதி; பத்யா ஸுமேதா மேதயா
ஸுப்ரஹ்மா ப்ரஹ்மசாரிபி:

🛕 பொழிப்புரை – காலை ஸமிதாதானம் (மாலை ஸமிதா தானம்) செய்கின்றேன்.

🛕 அக்னியை நன்கு ஜ்வலிக்கச்செய்து, சுற்றிலும் மார்ஜனம் செய்து ஸமித்துக்களைக் காலையிலும் மாலையிலும் உபதேசப்படி பின்வருமாறு ஹோமம் செய்ய வேண்டும்.

🛕 (வீட்டிலிருந்து அக்கினியெடுத்துப் பிரதிஷ்டை செய்து விறகிட்டு, மூட்டி எரியச் செய்து பின்வருமாறு பிரார்த்தனை செய்க).

🛕 அக்கினியே! உன்னைச் சுற்றிலும் இடத்தைச் சுத்தமாக்கிப் பூஜிக்கின்றேன். (நாளடைவில்) உன் ஆராதனையால் ஆயுளும் செல்வமும் கூடியவனாய் நன்மக்களால் மக்களால் மக்கட்பேறு பெற்றவனாகவும், வீரர்களால் நல்ல வீரனாகவும், ஞான ஒளியால் ஒளி பொருந்தியவனாகவும் போஷணத்தால் புஷ்டியுள்ளவனாகவும், வீடுகளால் நல்ல வீடுடையவனாகவும், யஜமானனால் நல்ல யஜமானனை யடைந்தவனாகவும், புத்தியால் நல்ல புத்தியுள்ளவனாகவும், பிரம்மச்சாரிகளால் வேதத்துடன் கூடியவனாகவும் நான் ஆகவேண்டும்.

பரிஷேசனம்

மவுனமாகப் பரிஷேசனம் செய்க.

ஸாமவேதிகளுக்கு – பரிஷேசன மந்த்ரம்: தேவ ஸவித:
ப்ரஸுவ யஜ்ஞம் ப்ரஸுவ யஜ்ஞபதிம் பகாய திவ்யோ
கந்தர்வ: கேத பூ: கே தந்ந: புனாது வாசஸ்பதி: வாசந் ந: ஸ்வதது
ரிக்வேதிகளுக்கு – பூர்ப்புவஸ்ஸுவ: இதி த்ரி: பரிஷிச்ய

ஹோமம்

அக்னயே ஸமித – மாஹாருஷம் ப்ருஹதே ஜாத-
வேதஸே யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸ ஏவம்
மாமாயுஷா வர்ச்சஸா ஸன்யா மேதயா ப்ரஜயா பசுபிர்-
ப்ரஹ்ம – வர்ச்சஸேனான்னாத்யேன ஸமேதயஸ்வாஹா

ஏதோஸ்யேதிஷீமஹி ஸ்வாஹா
ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
தேஜோஸஸி தேஜோ மயி தேஹி ஸவாஹா
அபோ அத்யான்வசாரிஷ ரஸேண ஸமஸ்ருக்ஷ்மஹி
பயஸ்வா அக்னஆகமம் தம் மா ஸ ஸ்ருஜ வர்ச்சஸா ஸ்வாஹா
ஸம்மாக்னே வர்ச்சஸா ஸ்ருஜ ப்ரஜயா ச தனேன ருஹிபி ஸ்வாஹா
வித்யுன்மே அஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத் ஸஹ ருஷிபி ஸ்வாஹா
அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
த்யாவாப்ருதிவீப்யா ஸ்வாஹா
ஏஷா தே அக்னே ஸமித்தயா வர்த்தஸ்வ சாப்யா
யஸ்வ ச தயாஹம் வர்த்தமானோ பூயாஸ மாப்யாயமா
னஸ்ச ஸ்வாஹா
யோ மாக்னே பாசின ஸந்த – மதாபாகம் சிகீருஷதி
அபாகமக்னே தம் குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா
ஸமிதமாதாயாக்னே ஸர்வவ்ரதோ பூயாஸ ஸ்வாஹா

(அத தூஷ்ணீம் ஸமந்தம் பரிஷிச்ய) ஸ்வாஹா

 ஸாமவேதிகளுக்கு  – அக்னயே ஸமிதமாஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸ ஏவம் மாமாயுஷா வர்ச்சஸா ஸன்யா மேதயா ப்ரஜயா பஸுபிர்- ப்ரஹ்மவர்ச்சஸேன தனேன அன்னாதயோ ஸமேதிஷீய ஸ்வாஹா பூ: ஸ்வாஹா 2. புவ: ஸ்வாஹா 3. ஸுவ: ஸ்வாஹா ஓம் பூர்ப்புவஸ்ஸுவே: ஸ்வாஹா 5.

 ரிக்வேதிகளுக்கு  – அக்னியே ஸமிதமாஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே தயா த்வமக்னே வர்த்தஸவ ஸமிதா ப்ரஹ்மணா வயம் ஸ்வாஹா அக்னயே ஜாதவேதஸ இதம் ந மம அதாக்னௌ
ஹஸ்தம் ப்ரதாப்ய முகம் நிமார்ஷ்டி தேஜஸா மா ஸமனஜ்மி ஏவம் த்ரி:

அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே

🛕 பொழிப்புரை – 3.1 ஜாதவேதஸ் எனப் பெயர் பெற்ற பெரிய அக்கினி தேவனுக்கு ஸமித்தைக் கொண்டு வந்துள்ளேன். அக்கினியே நீ எப்படி ஸமித்தால் ஓங்கி வளர்ந்து பிரகாசிக்கின்றாயோ அவ்வாறே என்னையும் ஆயுளாலும், சக்தியாலும், லாபத்தாலும் புத்தியாலும், மக்களாலும், பசுக்களாலும், பிரம்ம தேஜஸாலும், உணவு முதலியவறறால் ஓங்கி வளர்ந்து பிரகாசிக்கச் செய்வாயாக, இந்த ஆஹுதி உனக்குத் திருப்தியளிப்பதாகட்டும்.

🛕 நீ வளர்கின்றாய்; நாங்களும் வளர்ச்சியுற வேண்டும்.

🛕 நீ நன்கு பிரகாசிக்கின்றாய்; நாங்களும் நன்கு பிரகாசிக்க வேண்டும்.

🛕 நீ விரியவடிவினனாகின்றாய்; எனக்கும் வீரியத்தை யளிப்பாய்.

🛕 இக்கர்மாவால் இன்று உன்னை வந்தனம் செய்தேன்; என்னை (பக்தி) ரஸத்துடன் கூட்டி வைப்பாய். (ஞானப்) பாலை உடையவனாய் நான் உன்னை வந்தடைகின்றேன். அக்னியே, அந்த என்னை பிரம்ம வர்ச்சஸ்ஸுடன் கூட்டி வைப்பாயாக.

🛕 அக்கினியே! என்னை ஞான ஒளியுடனும் மக்களுடனும் செல்வத்துடனும் கூட்டி வைத்தருள் வாயாக.

🛕 இவ்வாறாக ஹோமம் செய்யும் என்னைத் தேவர்கள், அறிந்து கடாக்ஷிக்க வேண்டும்.

🛕 வானுலகில் வரும் பெருமை மிக்க அக்கினிக்கு ஹோமம் செய்கின்றேன்.

🛕 வானுலகுக்கும் பூவுலகுக்கும் ஹோமம் செய்கின்றேன்.

🛕 அக்கினியே! உனக்கு இந்த ஸமித்தை அளிக்கின்றேன். அதனால் நீ வளர்ந்து பரிபூர்ணனாக வேண்டும். அதனால் நானும் வளர்ந்து பரிபூர்ணனாகக் கடவேன்.

🛕 பாக்கியவனான என்னை எவன் (பொறாமையால்) அபாக்கியவானாகச் செய்யக் கருதுகிறானே அவனை அபாக்கியவானாக்கி என்னை பாக்கியவானாய் இருக்கச் செய்தருள்வாயாக.

🛕 அக்கினியே! இந்த ஸமிதாதானத்தால் எல்லா விரதங்களையும் நன்கு அனுஷ்டித்தவனாக நான் ஆகும்படி அருள்வாயாக.

🛕 (மவுனமாக அக்னியை நாற்புறமும் சுற்றிப் பரிஷேசனம் செய்க) ஸ்வாஹா (என்று அக்னிக்கு உபஸ்தானம் செய்கின்றேன்.

 ஸாமவேதிகளுக்கு  – உத்தரபரிஷேசனம், – தேவ ஸவித: ப்ராஸாவீ: யஜ்ஞம் ப்ராஸாவீ: (யஜ்ஞபதிம் பகாய) திவ்யோ கந்தர்வ: கேத் பூ: கேதந்நோ பாவீத் வாசஸ்பதி; வாசந் நோ ஸ்வதீத்

 ரிக்வேதிகளுக்கு  – பூர்ப்புவஸ்ஸுவ: இதி தரி, பரிஷிச்ய

உபஸ்தானம்

யத்தே அக்னே தேஜஸ்தேனாஹம் தேஜஸ்வீ பூயாஸம்
யத்தே அக்னே வர்ச்சஸ்தேனாஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம்
யத்தே அக்னே ஹரஸ்தேனாஹம் ஹாஸ்வீ பூயாஸம்
மயி மேதாம் மயி ப்ரஜாம் மய்ய்க்னிஸ்-தேஜோ
மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர இந்த்ரியம்
மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ராஜோ ததாது
அக்னயே நம: மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்தி ஹீனம் ஹுதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம்
ததஸ்துதே ப்ரயாஸ்சித்தான் – யஸேஷாணி தப: காமாத்மாகனிவை யானி தேஷா – மஸேஷாணாம் க்ருஷ்ணானு-ஸ்மரணம் பரம் (அபிவாத்ய)

🛕 பொழிப்புரை – 4.1. அக்கினியே! உனது ஒளி எதுவோ அதனால் நான் ஒளி பொருந்தியவனாகவேண்டும் அக்கினியே! உனது அகத்தழகு எதுவோ அதனால் நான் அகத்தழகுடையவனாக வேண்டும். அக்கினியே! உனது வீசிகரம் எதுவோ அதனால் நான் வசீகரமுடையவனாக வேண்டும்.

🛕 எனக்குப் புத்தியையும் மக்களையும் ஞான ஒளியையும் அக்கினி கொடுத்தருள வேண்டும். எனக்கு புத்தியையும் மக்களையும் இந்திரிய சக்தியையும் இந்திரன் கொடுத்தருள வேண்டும். எனக்குப் புத்தியையும் மக்களையும் காந்தியையும் சூரியன் கொடுத்தருள வேண்டும்.

🛕 அக்கினிக்கு நமஸ்காரம், அக்கினி தேவனே! மந்திரக் குறைபாட்டுடனும் கிரியையில் குறைபாட்டுடனும் பக்தியில் குறைபாட்டுடனும் எந்த ஹோமம் என்னால் செய்யப்பட்டதோ. அது பரிபூர்ணமாக வேண்டும். பிராயச்சித்தங்களோ தவமோ கருமங்களோ எவை எவை உண்டோ அவையனைத்தினும் தலை சிறந்தது கிருஷ்ணனை நினைத்தலாம்.

🛕 நமஸ்காரம் செய்து அபிவாதனம் செய்க

 ரிக்வேதிகளுக்கு  – உபஸ்தான மந்திரத்தில் சேர்த்துக் கொள்வது – ஓஞ்ச மே ஸ்வரஸ்ச மே யஜ்ஞோபசதே நமஸ்ச யத்தே ந்யூனம் தஸ்மை த உபயத்தே திரிக்தம் தஸ்மை தே நம:

பஸ்மதாரணம்

ஹோம பஸ்ம ஸங்க்ருஹ்ய வாமகரதலே நிதாய அத்பிஸ்-ஸேசயித்வா அநாமிகயா பேஷயித்வா) மாநஸ்தோகே தனயே மா ந ஆயுஷி மா நோ கோஷு மா நோ அஸ்வேஷு ரீரிஷ: வீரான்மா நோ ருத்ர பாமிதோ வதீர் – ஹவிஷ்மந்தோ நமஸா விதேமதே

மேதாவீ பூயாஸம் (லலாடே) தேஜஸ்வீ பூயாஸம் (தக்ஷிணபாஹௌ) வர்ச்சஸ்வீ பூயாஸம் (ஸவ்யே பாஹௌ) ப்ரஹ்மவர்ச்சஸீ பூயாஸம் (ஹ்ருதயே) ஆயுஷ்மான் பூயாஸம் (கண்டே) அன்னாதோ பூயாஸம் (நாபௌ) ஸ்வஸ்தி பூயாஸம் (சிரஸி)

 ரிக்வேதிகளுக்கு  – பஸ்மதாரணம் மேற்கூறியுள்ளபடியே.

 ஸாம வேதிகளுக்கு – த்ர்யாயஷம் ஜமதக்னே; கச்யபஸ்ய தர்யாயுஷம் அதஸத்யஸ்ய த்ர்யாயுஷம் யத்தேவானாம் த்ரீயாயுஷம் தன்மே அஸ்து த்ர்யாயுஷம் தன்மே அஸ்து த்ர்யாயுஷம் (என்று குழைத்து) ப்ரதம பிந்துரஸி (நெற்றியில்); அம்ருத பிந்துரஸி (கழுத்தில்); ஆயுர்பிந்துரஸி (மார்பில்) ஆரோக்ய பிந்துரஸி (இடதுதோளில்) ஸர்வான் காமான் பிந்துரஸி (பின் இடுப்பு) ஸௌபாக்ய பிந்துரஸி (பிடரியில்) ஸ்வஸ்தி பிந்துரஸி (சிரசில்).

ஸ்ரத்தாம் மேதாம் யஸ: ப்ரஜ்ஞாம் வித்யாம் புத்திம் ஸ்ரியம் பவம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே மே ஹவ்யவாஹன ஓம் நம இதி.

இதி ஸமிதாதானம்

🛕 பொழிப்புரை:- (ஹோம பஸ்மத்தை எடுத்து இடது கைத்தலத்தில் வைத்து ஜலம் சேர்த்துப் பின்வரும் மந்திரத்தால் மோதிர விரலால் குழைக்க.

🛕 எங்களுடைய, சிசுக்களுக்கும் பிள்ளைகளுக்கும் எங்களுடைய ஆயுளுக்கும் எங்களுடைய பசுக்களுக்கும் எங்களுடைய குதிரைகளுக்கும் கஷ்டம் ஏற்படாமல் காக்க வேண்டும். எங்கள் வீரர்களைக் கோபத்தால் கொன்று விடலாகாது. ஹவிஸ்ஸுடன் கூட நமஸ்காரத்தால் உம்மை வழிபடுகின்றோம். நான் புத்தி சக்தியுடையவனாக வேண்டும். (நெற்றியில்). நான் தேஜஸ் உடையவனாக வேண்டும் (வலது தோளில்) ஞானஒளி பொருந்தியவனாக வேண்டும். (வலது தோளில்), ஞானஒளி பொருந்தியவனாக வேண்டும் (மார்பில்) ஆயுளுடையவனாக வேண்டும் (கழுத்தில்), (கஷ்டமின்றி) அன்னத்தைப் புசிப்பவனாக வேண்டும். (நாபியில்), எல்லா நன்மைகளுடனும் கூடியவனாக வேண்டும். (சிரசில்).

🛕 அக்னியே! சிரத்தையும், மேதையும், கீர்த்தியும், ஞானமும், வித்தையும் புத்தியும் செல்வமும், பலமும் ஆயுளும் தேஜஸும் ஆரோக்கியமும் எனக்கருளுதல் வேண்டும். அக்கினியே! உயர் நலத்தை எனக்கருள்வாய் ஓம் நம:

🛕 இங்ஙனம் ஸமிதாதானம் முற்றும்.

அனுபந்தம் 2

ப்ரஹ்மயஜ்ஞ

ஆசம்ய

ஸுக்லாம்பரதரம்……ஸாந்தயே

ப்ராணானாயம்ய ஓம் பூ……பூர்ப்புவஸ்ஸுஸரோம்

மமோபாத்த – ஸமஸ்த – துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேஸ்வர – ப்ரீத்யர்த்தம் ப்ரஹ்ம யஜ்ஞம் கரிஷ்யே
ப்ரஹ்ம – யஜ்ஞேன யக்ஷ்யே

வித்யுதஸி வித்ய மே பாப்மானம் ருதாத் ஸத்ய-
முபைமி (ஹஸ்தாவலநிஜ்ய) த்ரிராசாமேத் த்வி:
பரிம்ருஜ்ய ஸக்ருதுபஸ்ப்ருஸ்ய சிரஸ்சக்ஷுஷீ நாஸிகே
ஸ்ரோத்ர ஹ்ருதய – மாலப்ய

ஓம் பூ: தத்ஸவிதுர் – வரேண்யம் ஓம் புவ:
பர்க்கோ தேவஸ்ய தீமஹி ஓ ஸுவ: தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓம் பூ: தத் – ஸவிதுர்வரேண்யம்,
பர்க்கோ தேவஸ்ய தீமஹி ஓம் புவ: தியோ யோ ந
ப்ரசோதயாத் ஒ ஸுவ: தத் – ஹவிதுர் – வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்
ஹரி: ஓம் அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய
தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம் ஹரி ஓம்
ஹரி: ஓம் இஷே: த்வோர்ஜே த்வா வாயவ ஸ்தோ
பாயவஸ்த தேவோ வ: ஸவிதா ப்ரார்ப் பயது ஸ்ரேஷ்ட-
தமாய கர்மணே ஹரி: ஓம்
ஹரி: ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ
ஹவ்ய – தாதயே நீ ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி
ஹரி ஓம்
ஹரி: ஓம் ஸந்நோ தேவீ – ரபிஷ்டய ஆபோ
பவந்து பீதயே ஸம் யோ – ரபிஸ்ரவந்து
ந ஹரி: ஓம்
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸத்யம் தப: ஸ்ரத்தா
யாம் ஜுஹோமி
ஓம் நமோ ப்ரஹ்மணே, நமோ அஸ்த்வக்னயே, நம:
ப்ருதிவ்யை, நம ஓஷதீப்ய: நமோ வாசே நமோ
வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி (ஏவம் த்ரி:)
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்ச மே பாப்மானம் ருதாத்
ஸத்யமுபாகாம் (ஹஸ்தாவவநிஜ்ய)
தேவ – ருஷி – பித்ரு – தர்ப்பணம் கரிஷ்யே

ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்-தான் தேவா
ஸ்தர்ப்பயாமி ஸர்வான் தேவா ஸ்தர்ப்பயாமி
ஸர்வ- தேவகணா ஸ்தர்ப்பயாமி ஸர்வ -தேவ -பத்னீஸ்-
தர்ப்பயாமி ஸர்வ -தேவகணபத்னீஸ் தர்ப்பயாமி

(நிவீதி) க்ருஷ்ண – த்வைபாயநாதயோ யே ருஷயஸ-
தான் ருஷீ, ஸ்தர்ப்பயாமி ஸர்வான் ருஷீ ஸ்தர்ப்ப-
யாமி ஸர்வ – ருஷிகணா ஸ்தர்ப்பயாமி ஸர்வ-
ருஷிபத்னீஸ்- தர்ப்பயாமி ஸர்வருஷிகணபத்னீஸ்-தர்ப்பயாமி.

ப்ரஜாபதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி ஸோமம்
காண்டருஷிம் தர்ப்பயாமி அக்னிம் காண்டருஷிம்
தர்ப்பயாமி விஸ்வான் தேவான் காண்டருஷீ ஸ்தர்ப்ப யாமி.

ஸா – ஹிதீர் – தேவதா உபநிஷதஸ்தர்ப்பயாமி
யாஜ்ஞிகீர்தேவதா உபநிஷதஸ்தர்ப்பயாமி வாருணீர்-
தேவதா உபநிஷதஸ்தர்ப்பயாமி

ஹவ்யவாஹம் தர்ப்பயாமி விஸ்வான் தேவான் காண்டருஷீ ஸ்தர்ப்பயாமி

ப்ரஹ்மாண ஸ்வயம்புவம் தர்ப்பயாமி

விஸ்வான் தேவான் காண்டருஷீ ஸ்தர்ப்பயாமி
அருணான்காண்டருஷீ ஸ்தர்ப்பயாமி ஸதஸஸ் பதிம்
தர்ப்பயாமி ருக்வேதம் தர்ப்பயாமி யஜுர்வேதம்
தர்ப்பயாமி ஸாம வேதம் தர்ப்பயாமி அதர்வ – வேதம்
தர்ப்பயாமி இதிஹாஸ-புராணம் தர்ப்பயாமி கல்பம் தர்ப்பயாமி

(ப்ராசீனாவீதீ) ஸோம பித்ருமான் யமோ அங்கிர ஸ்வான் அக்னி – கவ்யவாஹநாதயோ யே பிதரஸ் – தான் பித்ரு ஸ்தர்ப்பயாமி ஸர்வான் பித்ரூ ஸ்தர்ப்பயாமி ஸர்வ – பித்ருகணா ஸ்தர்ப்பயாமி ஸர்வ-பித்ருபத்னீஸ்- தர்ப்பயாமி ஸர்வபித்ரு -கணபத்னீஸ் – தர்ப்பயாமி.

ஊர்ஜம் லஹந்தீ -ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருத ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

உபவீதி ஆசாமேத்

🛕 கருத்துரை- முன் நின்று அழைத்துக் செல்பவரும் (எல்லா) யஜ்ஞத்திலும் முதல் தேவதையும், ரிக்வேத வடிவிலும் ஹோதா வடிவிலும் விளங்குபவரும் தலைசிறந்த செல்வத்தையளிப்பவருமாகிய அக்னியைப் போற்றுகின்றோம்.

🛕 (புரசன் கொம்பே, இந்த நற்காமத்தின் மூலம்) அன்னைத்தையுடைய உன்னை (நாடுகின்றேன்) வீர்யத்தையுடைய உன்னை (நாடுகின்றேன்) (பசுக்களே! பசுவின் கன்றுகளே!) எங்களைத் தலைசிறந்த கர்மாவாகிய பசுவதாரா தனத்தில் கூட்டிவைக்கும் பொருட்டு நீங்கள் மேய்ப் போய்த் திரும்பி வாருங்கள். ஸவித்ருதேவன் உங்களுக்கு நல்ல மேய்ச்சலை அளித்து அருள் புரியட்டும்.

🛕 அக்கினியே! நீர் வரவேண்டும். உம்மைத் துதிக்கும் எங்களுடைய பூஜையை ஏற்றுக்கொள்ளவும், நாங்கள் ஹோமம் செய்வதை தேவர்களுக்குச் சேர்ப்பிக்கவும் அழைக்கப்பெற்ற நீர் யாக சாலையில் எழுந்தருள வேண்டும்.

🛕 ஜலாபிமானி தேவதைகளே! தாகசாந்தியையளிப்பவர்களாக மட்டுமல்லாமல் எங்களுக்கு எல்லா அபீஷ்டங்களையும் நன்மைகளையும் அளிப்பவர்களாக நீங்கள் விளங்க வேண்டும். உங்களருளால் எங்களுக்குத் துன்பம் நீங்கி இன்பம் பெருகட்டும்.

🛕 பரம்பொருளே நீ மழையாயிருக்கின்றாய், என்னுடைய பாவத்தைச் சேதிப்பாய். வீலாவிபூதியின்றி நித்ய விபூதியை நாடியவனாகின்றேன்.

 பிரம்மயக்ஞம் 

🛕 அன்னரஸமாகவும், அமிருதமாகவும், நெய்யாகவும், பாலாகவும், மதுவாகவும், பானகமாகவும், பரிணமித்து (எது வேண்டுமோ அதுவாய் நின்று நீங்கள்) எனது பிதிருக்களைத் திருப்தி செய்வீர்களாக)

🛕 பிரம்மயக்ஞம் முற்றும்.

அனுபந்தம் 3

யஜ்ஞோபவீத -தாரண மந்த்ர:

ஆசம்ய

சுக்லாம்பரதரம்…ஸாந்தயே

ப்ராணானாயம்ய ஓம் பூ … …. பூர்ப்புவஸ் ஸுவரோம்

மமோபாத்த – ஸமஸ்த – துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர – ப்ரீத்யர்த்தம், ஸ்ரௌத – ஸ்மார்த்த – விஹித – நித்யகர்மானுஷ்ட்டான -யோக்யதா – ஸித்த்யர்த்தம், ப்ரஹ்ம – தேஜோ ஸபிவ்ருத்தயர்த்த்ம் யஜ்ஞோப வீததாரணம் கரிஷ்யே

யஜ்ஞோபவீதம் இதி மஹாமந்த்ரஸ்ய பர- ப்ரஹ்ம ருஷி; த்ரிஷ்டுப் சந்த: பரமாத்மா தேவதா யஜ்ஞோபவீத -தாரணே விநியோக;

யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜா – பதேர்யத் ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்ய -மக்ர்யம் ப்ரதிமுஞ்ச ஸுப்ரம் யஞ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ;

ஆசம்ய

உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கஸ்மலதூஷிதம் விஸ்ருஜாமி புனர்-ப்ரஹ்மன் வர்ச்சோ தீர்க்காயு- ரஸ்துமே

🛕 கருத்துரை- ஸங்கல்பம் – பரமேச்வரப்ரீத்யர்த்தம் என்றதால் பக்தி யோகமும்; நித்யகர்மானுஷ்டான யோக்யதா – ஸித்த்யர்த்தம் என்றதால் கர்மயோகமும், ப்ரஹம தேஜோஸபி- வ்ருத்த்யர்த்தம் என்றதால் ஞானயோகமும் யஜ்ஞோபவீத தாரணத்தால் சித்திக்க வேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது.

🛕 யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் – பரிசுத்தியளிக்க கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும், ஆயுளையும் முதன்மையையும் அளிக்கவல்லதுமாகிய வெண்மையான பூணூலைத் தரிக்கின்றேன். ஞான ஒளியும் பலமும் அதனால் நிலைபெற வேண்டும்.

🛕 உபவீதம் பின்னதந்தும் – இழைகள் பின்னமானதும் பலம் குறைந்ததும், அழுக்கடைந்ததுமாகிய பூணூலை விலக்குகின்றேன் பரம்பொருளே! மீண்டும் தொடர்ந்து எனக்கு ஞான ஒளியும் நீண்ட ஆயுளும் இருக்கும்படி அருளவேண்டும்.

அனுபந்தம் 4

ப்ராணாக்னி ஹோத்ரம்

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர் – வரேண்யம் பார்க்க்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்

தேவ ஸவித: ப்ரஸுவே

ஸத்யம் த்வர்த்தேனே பரிஷிஞ்சாமி (ருதம் த்வாஸத்-யேன பரிஷிஞ்சாமி)

அம்ருதோபஸ்தரண – மஸி

ப்ராணாய ஸ்வாஹா அபானாய ஸ்வாஹா வ்யானாய ஸ்வாஹா உதானாய ஸ்வாஹா ஸமானாய ஸ்வாஹா ப்ரஹ்மணே ஸ்வாஹா

ப்ரஹ்மணீ ம ஆத்ரமாஸம்ருதத்வாய

அம்ருதாபிதான மஸி

🛕 கருத்துரை- (ஸத்யம் த்வா) பரமாத்மாவின் பிரத்யக்ஷ வடிவான உன்னை (ருதேன) ஜீவாத்மாவின் அன்பெனும் நீரால் (பரிஷிஞ்சாமி) சுற்றி ஈராமக்குகின்றேன். (ருதம் த்வா) ஜீவாதாரமாகிய உன்னை (ஸத்யேன) பரமாத்மாவின் கிருபையெனும் நீரால் (பரிஷிஞ்சாமி) சுற்றி ஈரமாக்குகின்றேன்.

🛕 அமுதமாகிய அன்னத்திற்கு நீ கீழ்விரிப்பு ஆவாய்.

🛕 பிரம்மத்திடம் எனது ஆத்மா பேரின்பத்தைப் பெறுவதற்காக இது பொருந்தட்டும்.

🛕 அமுதத்துக்கு நீ (அபிதானம்) மேல் மூடி ஆவாய்.

அனுபந்தம் 5

உபாகர்மம்

1. காமோகார்ஷீத் ஜபம்

சுச்லாம்பரதரம் + சாந்தயே ஓம் பூ: + பூர்ப்பு வஸ்ஸுவரோம் மமோபாத்த – ஸமளததுரிதக்ஷய – த்வாரா…… சுபதிதௌ தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்த்யாயோத்ஸர்ஜன அசரண ப்ராயச்சித் தார்த்தம் அஷ்டோத்தர சதஸங்க்யயா காமோசார்ஷீத் மன்யுரகார்ஷீத் இதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே காமோகார்ஷித் மன்யுரகார்ஷீத் என்று 108 தடவை ஜபித்து விட்டு மாத்யாஹ்னிகமும் பிரம்மயத்ஞமும் செய்க.

🛕 சிராவண பவுர்ணமியில் வேதாரம்பம் செய்து, தை மாஸம் பவுர்ணமியில் அத்தியயன உத்ஸாஜனம் அல்லது முடிவு செய்ய வேண்டும். சிராவண பவுர்ணமி வரை ஏற்கெனவே கிரகித்ததைப் பின்பு ஆவிருத்தி செய்வதுடன் வேதங்களைப் படிக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதற்காக காமோகார்ஷீத் ஜபம்.

2. மஹாஸங்கல்பம்

சுக்லாம்பரதரம் + சாந்தயே

ஓம் பூ: + பூர்ப்புவஸ்ஸுவரோம்

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோஸபி வா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்ப்யநதர:- சுசி: மானஸம் வாசிகம் பாபம் – கர்மணா ஸமுபார் – ஜிதம் ஸ்ரீ ராம-ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:

ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணுஸ் -ததா வாரோ நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகச்ச கரணஞ் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்

ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த ஆதி விஷ்ணோ: ஆதி நாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமித்யா சக்த்யா ப்ரியமாணஸ்ய மஹாஜலௌகஸ்ய மத்யே, பரிப்ரமதா- மநேககோடி -ப்ரஹ்மாண்டானா – மேகதமே ப்ருதிவ்யப்- தேஜோ- வாய்வாகாசா- ஹங்கார – மஹ தவ்யக்தை – ராவ ரணை – ராவ்ருதே ஸஸ்மின் மஹதி ப்ரஹ்மாண்ட கரண்ட-மதயே பூமண்டலே, ஜம்பூ-ப்லக்ஷ- சாக சால்மலி – குச; க்ரௌஞ்ச – புஷ்கர -த்வீபானாம் மத்ய-ப்ரதேசே, ஜம்பூத்-பீபே பாரதவர்ஷே, பரத கண்டே -ப்ரஜாபதி-க்ஷேத்ரே- தண்டகார்ணய -சம்பகாரண்ய – விந்த்யாரண்ய-வேதா ரண்யாதயநேக- புண்யாரண்யானாம் மத்ய – ப்ரதேசே கர்மபூமௌ ராமஸேது – கேதாரயோர் – மத்யப்ரதேசே, பாகீரதீ-கௌதமீ -க்ருஷ்ணவேணீ -யமுனா நர்மதா – துங்க பத்ரா – த்ரிவேணீ – மலாபஹாரிணீ காவேர்யாதயநேக- புண்யநதீ – விராஜிதே, இந்த்ர ப்ரஸ்த -யமப்ரஸ்த- அவந்தி காபுரீ – ஹஸ்தினாபுரீ- அயோத்யாபுரீ- மதுராபுரீ – மாயாபுரீ – காசீபுரீ – காஞ்சீபுரீ – த்வாரசாத் – யநேக புண்யபுரீ -விராஜிதே, ஸகலஜகத்ஸ்ரஷ்டு: பரார்த்தத்வய-ஜீவினோ ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே பஞ்சாசதப்தாதௌ, ப்ரத மே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே ப்க்ஷே ப்ரதமே திவஸே, அஹ்னி, த்விதீயே யாமே த்ருதீயே முஹூர்த்தே, ஸவாயம்புவ-ஸ்வாரோசிஷ- உத்தம -தாமஸ – ரைவத – சாக்ஷுஷாக்யேஷு ஷட்ஸு மனுஷ்வதிகேஷு ஸப்தமே வைவஸ்வத- மன்வந்தரே அஷ்டா- விம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே – நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ ஸிம்ஹாமஸே சுக்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ, – வாஸரயுக்தாயாம் – நக்ஷத்ரயுக்தாயாம் சுபயோக – சுபகரண – ஸகல விசேஷண – விசிஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ- அனாத் யவித்யா – வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார – சக்ரே விசித்ராபி: கர்மகதிபிர் – விசித்ராஸு யோநிஷு புன: புனரனேகதா ஜனித்வா கேனாபி புண்ய கர்மவிசேஷேண இதானீம் தனமானுஷ்யே த்விஜஜன்மவி சேஷம் பராப்தவதோ மம ஜன்மாப்ப்யாஸாத் ஜன்ம – ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி கௌமாரே யௌவனே வார்த்தகே ச ஜாக்ரத் – ஸ்வப்ன -ஸுஷுப்த்ய வஸ்த்தாஸு மனோ – வாக் – காய – காமேந்த்ரிய – ஜ்ஞானேந்த்ரிய – வ்யாபாரை; ஸம்பாவிதானாம் இஹ ஜன்மனி ஜன்மாந்தரே ச ஜ்ஞானாஜ்ஞான-க்ருதானாம் மஹாபாத கானாம் மஹாபாதக – அனுமந்த்ரத்வாதீனாம். ஸமபாத கானாம். உபபாதகானாம், நித்தித – தனாதான்.- உபஜீவனா தீனாம், அபாத்ரீகாணானாம், ஜாதிப்ரம்சகராணாம், விஹித கர்ம – த்யாகாதீனாம் ஜ்ஞானத; ஸக்ருத்க்ருதானாம் அஜ் ஞானத: அஸகருத் க்ருதானாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதனர்த்தம் பாஸ்கர – க்ஷேத்ரே விநாய காதி – ஸமஸ்த – ஹரிஹர -தேவதா – ஸந்நிதௌச்ராவண்யாம் பௌர்ணமாஸயாம அத்யயோபக்ரம – கர்ம கரிஷ்யே (ததங்கம் சரீர சுத்தயர்த்தம் சுத்தோக – ஸ்நான – மஹம் கரிஷ்யே)

3. யஜ்ஞோபவீத-தாரணம்

இதற்கு மந்திரம் அனுபந்தம் 3 பார்க்க

ப்ரஹ்மசாரிகள் மௌஞ்ஜீ, மான்தோல், தண்டம் ஆகியவற்றை தரிக்க வேண்டும்.

4. காண்டரிஷி தர்ப்பணம்

அத பவித்ரபாணி; ப்ராணானாயம்ய ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்த்யாயோபக்ரம் – கர்மாங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே பூணூலே மாலையாகப் போட்டுக் கொண்டு எள்ளும் அக்ஷதையும் கலந்த தீர்த்தத்தால் கையில் வலது பக்கமாகத் தர்ப்பணம் செய்க.

ப்ரஜ்õபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி ( 3 தடவை) ஸோமம் – அக்னிம் – விச்வான் தேவான் காண்டரீஷீன் – (ஸாஹிதீர் – தேவதா உபநிஷத:- யாக்ஞிகீர் தேவதா உபநிஷத: – வாருணீர்-தேவதா உபநிஷத: – ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் – ஸதஸஸ் பதிம் – (உபவீதி ஆசம்ய)

உபாகர்மம்

5. ஹோம:

ஹோம – யோக்யஸ்தலம் சென்று விக்னேச்வர பூஜை செய்து அத்யாயோபக்ரம-ஹோம கர்மகரிஷ்யே என்று ஸங்கல்பம் விக்னேச்வர- உத்வாஸனம் செய்து புண்யாஹவாசனம் செய்க.

ஸ்தண்டில- முல்லிக்ய, லௌகிகாக்னிம் ப்ரதிஷ்ட்டாப்ய, அக்னி – மித்வா ஷட்பாத்ரப்ரயோக: ப்ரஹ்ம வரணம்

அக்னே – ரீசான திக்பாகே கும்பம் ப்ரதிஷ்ட்டாப்ய தஸ்மின் வருணம் வேதவ்யாஸஞ் ச ஆவாஹ்ய, ஆஸனாதி ஷோடசோபசாரான் க்ருத்வா ஆஜ்யம் விலாப்ய இத்பாதி, அக்னி – முகாந்தம் க்ருத்வா அன்வாரப்தேஷு நவாஜ்யாஹுதீர் ஜுஹோதி

ப்ரஜாபதயே காண்டருஷ்யே ஸ்வாஹா ப்ரஜா பதயே காண்டருஷய இதம் ந மம ஸோமாய……. அக்னயே…… விச்வேப்யோ தேவேப்ய: காண்ட ருஷிப்ய: ஸ்வாஹா விச்வேப்யோ தேவேப்ய: கா – இதம்

ஸா ஹிதீப்யோ தேவதாப்ய உபநிஷத்ப்ய: ஸ்வாஹா ஸா: ஹிதீப்யோ +இதம் யாஜ்ஞிகீப்யோ தேவ தாப்ய உபநிஷத்ப்ய: ஸ்வாஹா யாஜ்ஞிகீப்யோ +இதம் வாருணீப்யோ தேவதாப்ய உபநிஷத்ப்ய: ஸ்வாஹா வாருணீப்யோ +இதம்

ப்ரஹ்மணே ஸ்வயம்புவே ஸ்வாஹா ப்ரஹ்மணே ஸ்வயம்புவ இதம் ஸதஸஸ்பதி – மத்புதம் – ப்ரியமித்த் ரஸ்ய காம்யம் ஸநிம் மேதா – மயாஸிஷ ஸ்வாஹா ஸதஸஸ்பதய இதம் இதி நவாஜ்யாஹுதீர் ஹுத்வா

6. வேதாரம்ப:

ஆசாரியனை நோக்கி தர்ப்பை மேலமர்ந்து தர்ப்பையைத் தரித்துப் பிராணாயாமம் செய்துப் பின்வரும் ஸங்கல்பத்தைச் செய்து கொண்டு வேதாரம்பம். மமோ பாத்த ….. பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ச்ராவண்யாப் பௌர்ணமாஸ்யாம் அத்த்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே.

ஹரி: ஓம் இஷே த்வோர்ஜே த்வா வாய வஸ்த
தோபாயவஸ்த்த தேவோ வ: ஸவிதா ப்ரார்ப்பயது
ச்ரேஷ்ட்டதமாய கர்மணே ஆப்யா யத்த்வ மக்க்னியா
தேவபாகம் ஊர்ஜஸ்வதீ: பயஸ்வதீ: ப்ரஜாவதீ: அநமீவா-
அயக்ஷ்மா- மாவஸ்தேன ஈசத – மா அகசஸ: ருத்ரஸ்ய
ஹேதி: பரிவோ வ்ருணக்து -த்ருவா அஸ்மின் கோப்தௌ
ஸ்யாதபஹ்வீ: யஜமானஸ்ய பசூன் பாஹி

தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் – யோஸஸ்மான்
தூர்வதி தம் தூர்வ – யம் வயம் தூர்வாம: – த்வம்
தேவானாமஸி – ஸஸ்நிதமம் பப்ரிதமம் -ஜுஷ்டதமம் வஹ்-
னிதமம் தேவஹூதம – மஹ்ருதமஸி- ஹவிர்த்தானம்
த்ரு ஹஸ்வமாஹ்வார் – மித்ரஸ்ய த்வா சக்ஷுஷா ப்ரே
க்ஷே மா பேர் – மா ஸம்விக்தா மா த்வா ஹி விஷம்
ஹரி: ஓம்

ஹரி: ஓம் ப்ரஹ்மஸந்தத்தம் தன்மே ஜின்வதம்
க்ஷத்ர ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் இஷ ஸந்தத்தம்
தாம் மே ஜின்வதம் ஊர்ஜ ஸந்தத்தம் தாம் மே ஜின்
வதம் ரயி ஸந்தத்தம் -தாம் மே ஜின்வதம் புஷ்டி
ஸந்தத்தம்- தாம் மே ஜின்வதம் பசூன் ஸந்தத்தம்-
தான் மே ஜின் வதம் ஹரி: ஓம்

ஹரி: ஓம் பத்ரம் கர்ணேபி; ச்ருணுயாம தேவா:
பத்ரம் பச்யேம – அக்ஷபிர்-யஜத்ரா: ஸ்த்திரை-ரங்கை:
துஷ்டுவா ஸஸ்தனூபி: வ்யசேம தேவஹிதம் யதாயு:
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா
விச்வவேதா: ஸ்வஸ்திநஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் – ததாது ஹரி: ஓம்

ஹரி: ஓம் ஸம்ஜ்ஞானம் விஜ்ஞானம் ப்ரஜ்ஞானம்-
ஜான தபி ஜானத் ஸங்கல்பமானம் ப்ரகல்பமானம் உப
கல்பமானம் உபக்லுப்தம் க்லுப்தம் ச்ரேயோ வஸீய
ஆயத் ஸம்பூதம் பூதம் சித்ர: சேது: ப்ரபாநாபான்
ஸம்பான் ஜ்யோநிஷ்மான் தேஜஸ்வான் ஆதபன் தபன்
அபிதபன் ரோசனோ ரோசமான: சோபன: சோபமான:
கல்யாண:

தர்சா த்ருஷ்டா – தர்சதா வீச் – வரூபா ஸுதர்சனா
ஆப்யாயமானா- ப்யாயமானா – ப்யாயா – ஸூந்ருதேரா
அபூர்யமாணா – பூர்யமாணா – பூரயந்தீ பூர்ணா- பௌர்ண
மாஸீ ஹரி: ஓம்

ஹரி: ஓம் ப்ரஸுக்மந்தா திபஸாநஸ்ய ஸக்ஷணி
வரேபி, வரான் அபிஸுப்ரஸீதத அஸ்மாகம் – இந்த்ர:
உபயம் ஜுஜோஷதி -யத் – ஸௌம்யஸ்ய அந்தஸ: புபோ
ததி அந்ருக்ஷரா: ருஜவ: ஸந்துபந்த்தா: -யேபி: ஸகாய
யந்தி நோ வரேயம் ஸமர்யமா ஸம்பகோ ந: – நிநீயாத்
ஸஞ்ஜாஸ்பத்யம் ஸுயமமஸ்து தேவா: ஹரி: ஓம்

ஹரி: ஓம் அதாதோ தர்சபூர்ணமாஸௌ வ்யாக்
க்யாஸ்யாம: ப்ராதரக்னி – ஹோத்ரம் ஹுத்வா
அன்ய – மாஹவனீயம் ப்ரணீய அக்னீனன்வாததாதி
நகதச்ரியோ ஸன்யமக்னிம் ப்ரணயதி ஹரி: ஓம்

ஹரி: ஓம் அத கர்மாணி ஆசாராத்யானி க்ருஹ்யந்தே
உதகயன பூர்வபக்ஷாஹ புண்யாஹேஷு கார்யாணி,
யஜ்ஞோபவீதினா ப்ரதக்ஷிணம் ஹரி ஓம்

ஹரி, ஓம் அதாத: ஸாமயாசாரிகான், தர்மான்
வ்யாக்க்யாஸ்யாம: தர்மஜ்ஞஸமய, ப்ரமாணம்
வேதாச்ச, சத்வாரோ வர்ணா: ஹரி, ஓம்

ஹரி: ஓம் அஇஉண் ருலுக் ஏஓங் ஜ ஔச்
ஹயவரட் லண் ஞமஙணநம் ஜபஞ் கடதஷ் ஜப
கடதஸ் கபகசடத சடதவ் கபய் ஸஷஸர் ஹல்
இதி மாஹேஸ்வராணி ஸூத்ராணி ஹரி: ஓம்

ஹரி: ஓம் அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸய
தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம் ஹரி ஓம்.

ஹரி: ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ
ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி: ஓம்
ஹரி: ஓம் ஸந்தோ தேவீ – ரபிஷ்டய ஆபோ பவந்து
பீதயே ஸம் யோ – ரபி ஸ்ரவந்து ந: ஹரி: ஓம்

ஹரி: ஓம் அதாதோ ப்ரஹ்ம-ஜிஜ்ஜிஞாஸா ஹரி: ஓம்
ஹரி: ஓம் ஓம் நமோ ப்ரஹ்மணே நமோ அஸ்த்
வக்னயே நம: ப்ருதிவ்யை நம ஒஷதீப்ய: நமோ வாசே
நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே
கரோமி (3தடவை) ஹரி: ஓம் தத்ஸத்

7. ஜயாதி ஹோம:

ஏதத் -கர்ம- ஸம்ருத்தயர்த்தம் ஜயாதி ஹோமம்
கரிஷ்யே பரிஷேசனாதி – ப்ரஹ்மோத்வாஸனாந்தம்
க்ருத்வா

8. உபஸ்த்தானம்

யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவா: தானி தர்மாணி
ப்ரதமான்யாஸன் தே ஹ நாகம் மஹிமான், ஸசந்தே
யத்ர பூர்வே ஸாத்தயா: ஜந்தி தேவா: அஸ்மாத் கும்
பாத் வருணம் வேதவ்யாஸஞ் ச யதாஸ்த்தானம்
ப்ரதிஷ்ட்டாபயாமி (கும்ப தீர்த்தத்தால் எல்லோரையும் ப்ரோக்ஷித்து அதை உட்கொள்ளவும் செய்க).

உபாகர்ம விதி முற்றும்

9. காயத்ரீ ஜபவிதி:

சுக்லாம்பரதரம் + சாந்தயே ப்ராணானாயம்ய
ஸங்கல்ப: சுபே சோபனே முஹூர்த்தே + மபோ
பாத்த + ப்ரீத்யாத்தம் மித்யாதீத – ப்ராயச்சித்தார்த்தம்
தோஷவத்ஸு அபதனீய – தோஷ – ப்ராயச்சித்தார்த்தம்
ஸஹஸ்ர – ஸங்க்யயா காயத்ரீ – மஹாமந்த்ர – ஜபம் கரிஷ்யே

ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்மா + பரமாத்மா தேவதா பூராதி – ஸப்த – வ்யாஹ்ருதீனாம் + விச்வே தேவா தேவதா:

ஓம் பூ; + பூர்ப்புவஸ்ஸுவரோம் ஆயாத் – வித்யனு வாகஸ்ய வாமதேவ ருஷி: அனுஷ்டுப்சந்த: காயத்ரீ தேவதாஆயாது வரதா தேவீ + ஸரஸ்வதீ மாவாஹயாமி ஸாவித்ர்யா ருஷிர் – விச்வாமித்ர: நிச்ருத காயத்ரீச் சந்த: ஸவிதா தேவதா

(கரந்யாஸ: அங்கந்யாஸ த்யானம் பஞ்ச பூஜா

ஜப: 1000

 ப்ராணாயாம: 

அங்கந்யாஸ: த்யானம் பஞ்சபூஜா

உபஸ்தானம் உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத – மூர்த்தனி ப்ராஹ்மணேப்யோஹ்யனுஜ்ஞானம் கச்ச தேவி யதா ஸுகம்

 ஸமர்ப்பணம் 

குஹ்யாதி – குஹ்ய – கோப்த்ரீ த்வம் க்ருஹாணாஸ் மத் கருதம் ஜபம் ஸித்திர் – பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் – மயி ஸ்த்திரா

🛕 வசதியிருந்தால் பிரதம சிராவணத்தில் செல்வதுபோல் அக்னியை ஸ்தாபித்து அதில் காயத்ரியை ஆவாஹனம் செய்து காயத்ரீ மந்திரத்தால் ஸ்வாஹா – காரமில்லாமல் ஜபம் செய்வது போலவே ஆயிரம் ஸமித்துக்களாலோ நெய்யாலோ ஹோமம் செய்தல் சிறப்பாகும்.

அனுபந்தம் 6

பித்ரு தர்ப்பண விதி:

🛕 அமாவாசை, உத்தராயணம், தக்ஷிணாயனம், மஹாளயம், வருஷப்பிறப்பு, கிரஹணம், முதலிய காலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது ஸம்பிரதாயம். இங்கு முக்கியமாக அமாவாசையன்று செய்யும் முறை ஆபஸிதம்ப ஸூத்திரத்தைத் தழுவிக் காட்டப்பட்டுள்ளது.

🛕 அமாவாசை தவிர மற்ற கால்களுக்கு ஸங்கல்பம் உத்தராயண புண்யாகவோ மேஷ ஸங்க்ரமண புண்யகாலே; (கிரகணம்) ஸூர்யோபராக (ஸோமோபராக) புண்யகாலே என்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.

🛕 மஹாளயத்திற்கு – மஹாலய புண்யகாலே ஸகாருணிக – வர்க்கத்வய பித்ரூன் உத்திசய திலதர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் கிழக்கு புக்னத்தில் பித்ருவர்க்கம், மேற்கில் மாத்ருவர்க்கம், அதற்கடுத்து காருணிக பித்ருக்கள் ஆவாஹனம் காருணிக பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி என்று இதில் மூன்று தடவை தர்ப்பணம். காலமானவர்களில் தகப்பனுடன் பிறந்தோர், சகோதர சகோதரிகள், பிள்ளைகள் பெண்கள்; அத்தை, மாமன், தாயுடன் பிறந்த விவாகமான ஸ்திரீகள்; நாட்டுப் பெண்கள் மனைவி, மாமனார், மைத்துனர், தோழர், குரு ஆகிய அனைவரும் காருண்க பித்ருக்கள். அவர்களை நினைத்துத் தர்ப்பணம் செய்ய வேண்டும். மஹா லயதர்ப்பணம் பக்ஷம் முழுதும் செய்வது உத்தமம், ஒரு நாள் மட்டும் செய்தால் சதுர்த்திக்குப் பின் ஷஷ்டி, ஏகாதசி, சதுர்த்தசி வெள்ளிக்கிழமை, ரோகிணி, ரேவதி, மகம், ஜன்ம தக்ஷத்திரம் இல்லாத தினத்தில் செய்ய வேண்டும்.

🛕 சிலர் நெற்றிக்குப் புண்ட்ரமணிந்து தர்ப்பணம் செய்வர். சிலர் அவ்வாறணியாமல் செய்வர்; சிலர் தர்ப்பைகளைப் பரப்பி அதில் பிதிருக்களை ஆவாஹனம் செய்து தர்ப்பணம் செய்வர். சிலர் கூர்ச்சமாகச் செய்து அதில் தர்ப்பணம் செய்வர்; சிலர் பிதிருவர்க்கத்திற்கும் மாதாமஹர் வர்க்கத்திற்கும் தனித்தனிக் கூர்ச்சங்களை உபயோகிபர், சிலர் ஒரே கூர்ச்சத்தில் இரண்டுவார்க்கங்களையும் ஆவாஹனம் செய்வர். இவை அவரவர் குலாசாரத்தை பொருத்தவை;

🛕 தந்தை இறந்த ஆண்டில் தர்ப்பணம் செய்ய வேண்டாம். ஆனால் அந்த ஆண்டு பூர்த்தியாவதற்குள் கிரஹணம் வந்தால் கிரஹண புண்யகாலத்தில் தர்ப்பணம் செய்துவிட்டுப் பின்பு அமாவாசைகளிலும் செய்ய வேண்டும்.

🛕 நடுப்பகலுக்குமேல் தர்ப்பணத்திற்காக ஒரு ஸ்நானம் செய்துவிட்டு மத்தியான்ஹிகத்திற்குபின் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவரை பட்டினியாயிருக்க வேண்டும். சரவஸ்திரத்தைக்கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது.

🛕 ஆசமனம் செய்யும்போது கையில் பவித்திரமிருக்கக்கூடாது. ஆசமனம் முடிந்தபின் பவித்திரத்தை மோதிர விரலில் அணிந்து கொண்டு அத்துடன் மூன்று தனி தர்ப்பைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சுக்லாம்பரதரம் பிராணாயாமம் ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். ஸங்கல்பம் முடிந்ததும் தனி தர்ப்பைக்களைத் தெற்கு திக்கில் போட்டுவிட வேண்டும்.

🛕 திதி -வார – நஷத்திரங்கள் – திதிகள் பதினைந்து: – பிரதமை, த்விதீயை, த்ருதீயை, சதுர்த்தீ, பஞ்சமீ, ஷஷ்டீ, ஸப்தமீ, அஷ்டமீ, நவமீ, தசமீ, ஏகாதசீ, த்வாதசீ, த்ரயோதசீ, சதுர்த்தசீ, அமாவாஸ்யா அல்லது பவுர்ணமீ.

🛕 வாரம் அல்லது நாள்:- பானு வாஸரம் (ஞாயிறு, இந்து (திங்கள்) பௌம (செவ்வாய், ஸௌம்ய (புதன்), குரு (வியாழன்); ப்ருகு (வெள்ளி), ஸ்திர (சனி).

🛕 நக்ஷத்ரங்கள்:- அச்வினீ, பரணீ, க்ருத்திகா, ரோஹிணீ, ம்ருகசிரா, ஆர்த்ரா, புனர்வஸூ, புஷ்ய, ஆச்லேஷா, மகா, பூர்வபல்குனீ, உத்திரபல்குனீ, ஹஸ்தா, சித்ரா, ஸ்வாதீ, விசாகா, அனுராதா, ஜயேஷ்டா, மூலா, பூர்வா ஷாடா, உத்தராஷாடா, ச்ரவணா, ச்ரவிஷ்டா, சதபிஷக், பூர்வ ப்ரோஷ்டபதா, உத்தரப்ரோஷ்டபதா, ரேவதீ.

🛕 மாதங்கள் – சித்திரை (மேஷம்), வைகாசி (ருஷபம்), ஆனி (மிதுனம்), ஆடி (கடகம்) ஆவணி (ஸிம்ஹம்), புரட்டாசி (கன்னி), ஐப்பசி (துலாம்) கார்த்திகை (வ்ருச்சிகம்)- மார்கழி (தனுஸ்), தை (மகரம்), மாசி (கும்பம்) பங்குனி (மீனம்)

🛕 ருதுக்கள் – சித்திரை -வைகாசி (வஸந்தருது) ஆனி – ஆடி (க்ரீஷமருது) ஆவணி – புரட்டாசி (வர்ஷருது) ஐப்பசி – கார்த்திகை ( சரத்ருது) மார்கழி – தை (ஹேமந்தருது), மாசி – பங்குனி (சிசிரருது).

🛕 அயனம் – தை முதல் ஆடி வரை உத்தரரயணம், ஆடி முதல் தை வரை தக்ஷிணாயனம்.

🛕 ஆவாஹனம்- சுததமான தரையிலோ (வெள்ளி, பித்தளை, அல்லது தாமிர) தாம்பாளத்திலோ கிழக்கு மேற்காகப் பரப்பிய தாப்பைகனின் மேல் தெற்கு நுனியாக கூõச்சத்தை வைத்து ஆயாத பிதர: என்ற மந்திரத்தால் எள்ளைப் போட்டு ஆவாஹனம்.

🛕 ஆஸனம் – ஸக்ருதாச்சின்னம் என்ற மந்திரத்தால் னி தர்ப்பைகளைக் கூர்ச்சத்திற்குக் கீழ் வைக்க வேண்டும். ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் என்று மறுபடி எள்ளைப்போட வேண்டும்.

🛕 தர்ப்பை – ஆஸனத்திற்குக் குறைந்தது மூன்று, பவித்திரத்துடன் சேர்த்துப்பிடிக்க மூன்று, கூர்ச்சம் செய்ய மூன்று (ஐந்து அல்லது ஏழு)

🛕 எள் – சிறுகச் சிறுக எள்ளைச் சேர்த்துத் தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளை எடுக்கும்போது கட்டை விரலுடன் ஆள்காட்டி விரலைச் சேர்க்கக் கூடாது. (அது ராக்ஷஸமுத்ரை எனப்படும்.) கட்டைவிரலும் பவித்திரவிரலும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும்; மற்ற விரல்களும் சேர்க்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, ஜன்மநக்ஷத்திரம் முதலியன கூடிவந்தால் எள்ளுடன் அக்ஷதை சேர்த்துக் கொள்ளவும்.

🛕 தர்ப்பணம் – பிதரு தர்ப்பணத்தில் கட்டைவிரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்கும் இடையில் வலது புறமாகச் சாய்ந்து கைநிறையத் தீர்த்தம் விடவேண்டும். தர்ப்பணம் செய்யும் போது இடது காலை மூட்டியிட்டு, வலது காலை மடித்துல் குந்திட்டுக்கொண்டு இரண்டு கைகளையும் முழந்தாள்களுக்குள் அடக்கிவைத்துக் கொண்டு கிழக்கு முகமாகவோ அல்லது தெற்கு முகமாகவோ இருக்க வேண்டும். தெற்கு முகமாகத் தர்ப்பணம் செய்பவரும் ஆசமனம், ஸங்கல்பம், ஆவாஹனம், ஆஸனம் முதலியவற்றைச் செய்யும் போது கிழக்கு முகமாகத்தான் செய்ய வேண்டும்.

🛕 வேதத்தில் சொல்லிய யாகாதி கர்மங்களை அனுஷ்டித்துப் பிதிருத்தன்மையடைந்தவர் உத்தமர்; ச்ருதியிலுள்ள கர்மங்களை மட்டும் அனுஷ்டித்தவர் மத்திமர்; சுருதிஸம்ஸ் காரங்களும் ஒழுங்காக இல்லாதவர் அதமர்.

🛕 அக்னீஷ்வாத்தர்கள் – அக்னீஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்யாமல் சுருதிகர்மங்களை மட்டும் செய்தவர்கள்.

🛕 தாயார் இருப்பவர்கள் பிதாமஹி, ப்ரபிதாமஹி, பிது:- ப்ரபிதாமஹி மூவருக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

🛕 மாதாமஹ வர்க்கத் தர்ப்பணத்திலும் உதீரதாம் முதலிய மந்திரங்களைச் சேர்த்துக் கொள்வது விசேஷம். மாதாமஹர் ஜீவித்திருந்தால் அந்த வாக்கத்திற்குத் தர்ப்பணம் இல்லை.

ஆசம்ய சுக்லாம்பரதரம் + சாந்தயே ஓம்பூ+ பூர்ப்புவஸ்ஸுவரோம்

ஸங்கல்ப: மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்த்தாம் கதோ ஸபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப் – யந்தர: சுதி, மானஸம் வாசிகம் பாபம் சர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸ்ம்சய: ஸ்ரீராம ராம ராம

திதிர் விஷ்ணுஸ் – ததா வாரோ நக்ஷத்ரம் விஷ்ணு ரேவச யோகசச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீபகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய – ப்ரஹ்மண: த்விதீய – பரார்த்தே, ச்வேதவராஹ- கல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஷ்டா விம்சதி தமே சலியுகே. ப்ரத்மே பாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோர் – தக்ஷிணபார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ளம்வத்ஸராணாம் மத்யே (அமுத) நாம ஸம்வத்ஸரே – அயனே- ருதௌ – மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ – வாஸர யுக் தாயாம் – நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரண ஏவம் குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ

(ப்ராசீனாவீதி) பூணூல் இடமாக) வஸுருத்ராதித்ய: ஸ்வரூபாணாம் அஸ்மத் – பித்ரு பிதாமஹ-ப்ரபிதாமஹானாம் மாத்ரு – பிதாமஹீ- ப்ரபிதாமஹீனாம் ஸபத்னீக மாதாமஹ- மாது: – பிதாமஹ மாது ப்ரபிதாமஹானாம் உபய – வம்ச- பித்ருணாம் அக்ஷய்ய – த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா – புண்ய காலே திலதர்ப்பணம் கரிஷ்யே உபவீதி அப உபஸ்ப்ருச்ய பிராசீனாவீதி

(தக்ஷிணாக்ரம் கூர்ச்சம் நிதாய)

ஆவாஹனம் ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை:
பதிபி: பூர்வ்யை ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிஞ்ச
தர்க்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே மம
வர்க்கத்வய – பித்ரூன் ஆவாஹயாமி.

ஆஸனம் ஸக்ருதாச்சின்னம் பர்ஹி -ரூர்ணாம்ருது
ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வாபராம்யஹம் அஸ்மின்
ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாம
ஹாச் -சானுகைஸ்ஸஹ வர்க்கத்வய – பித்ரூணா -மிதமா:
ஸனம் ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

தர்ப்பணம்: – பித்ருவர்க்கம், – உதீரதாமவர உத் பராஸ
உன்மத்யமா: பிதரஸ் ஸோம்யாஸ: அஸும் ய
சயுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தே நோஸவந்து பிதரோஹ
வேஷு கோத்ரான் – சர்மண: வஸுருபான் பித்ரூன்
ஸ்வதா நமஸ் – தர்ப்பயாமி

அங்கிரஸோ ந: பிதரோ தவக்வா அதர்வாணோ
ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வய ஸுமதௌ யஜ்
ஞியானாமபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம கோத்ரான்-
சர்மண: வஸு – ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ், தர்ப்பயாமி.

ஆய்ந்து ந: பிதரஸ் ஸோம்யாஸோ ஸக்னிஷ்வாத்தா:
பதிபிர் தேவயானை: அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து
அதிப்ருவந்து தே அவந்த் – வஸ்மான் ÷õத்ரான் – சர்
மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் – தர்ப்பயாமி

ஊர்ஜம்வஹந்தீ – ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம்
பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன் கோத்
ரான் – சர்மண: ருத்ரரூபான் பிதா மஹான் ஸ்வதா
நமஸ் – தர்ப்பயாமி

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: பிதாம
ஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய:
ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: கோத்ரான் – சர்மண; ருத்ர
ருபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

யே சேஹ பிதரோ யே ச நேஹ யா ச்ச வித்மயான்
உச ந ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதி தே ஜாத
வேதஸ்-தயா ப்ரத்த ஸ்வதயா மதந்தி கோத்ரான்
சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் – தர்ப்பயாமி

மது வாதா ருதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர் நஸ்-ஸந்த்வோஷதீ: கோத்ரான் – சர்மண:
ஆதித்ய – ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் – தர்ப்பயாமி

மது -நக்த – முதோஷஸி மதுமத் பார்த்திவ – ரஜ:
மது த்யௌரஸ்து ந: பிதா கோத்ரான் சர்மண:
ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

மது மாந்நோ வனஸ்பதி: மதுமா அஸ்து ஸூர்ய:
மாத்வீர் – காவோ பவந்து ந: கோத்ரான் -சர்மண:
ஆதித்யரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் -தர்ப்ப யாமி.

கோத்ரா: (ஸீதா) தா: வஸு-ரூபா: மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (த்ரி: 3 தடவை)
கோத்ரா:(லக்ஷ்மீ) தா: ருத்ர- ரூபா: பிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (த்ரி:)
கோத்ரா: (ருக்மிணீ) தா: ஆதித்யரூபா: ப்ரபிதா மஹீ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி (த்ரி)

பித்ருதர்ப்பணம்

மாதாமஹவர்க்க:

கோத்ரான் – சர்மண: வஸுரூபான் மாதா – மஹான் ஸ்வதா நமஸ் – தர்ப்பயாமி (த்ரி:)
கோத்ரான் – சர்மண: ருத்ர -ரூபான் மாது: பிதா:- மஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (த்ரி:)
கோத்ரான் – சர்மண: ஆதித்ய ரூபான் மாது: பர பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (த்ரி:)
கோத்ரா: (கௌரீ) தா: வஸுரூபா: மாதாமஹீ: ஸ்வதா நமஸ் – தர்ப்பயாமி (த்ரி:)
கோத்ரா: (பார்வதீ) தா: ருத்ர ரூபா: மாது: பிதா மஹீ: ஸ்வதா நமஸ் – தர்ப்பயாமி (த்ரி:)
கோத்ரா: (மீனாக்ஷீ) தா: ஆதித்ய ரூபா: மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ் -தர்ப்பயாமி (த்ரி:)
ஊர்ஜம் வஹந்தீ – ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த்த தர்ப்பயத மே பித்ரூன் த்ரூப் யத த்ருப்யத த்ருப்யத

(உபவீதீ) தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய ஏவ ச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: (ப்ரதக்ஷிணம் க்ருத்வா) அபிவாதயே நமஸ்கார:

(ப்ராசீனாவீதி – பூணூல் இடம்), ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜா -மஸ்மப் யம் தததோ ரயிஞ்ச தீர்க்காயுத்வஞ்ச சீத-சாரதஞ்ச அஸ்மாத் கூர்ச்சாத் வர்க்க – த்வய பிதரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி

(பவித்ரம் கரிணே நிதாய உபவீதி ஆரம்ப பவித்ரம் த்ருத்வா ப்ராசீனாவீதி யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர -ஜ்ஞாதி -பரந்தவா: தே ஸர்வே த்ருப்தி – பாயாந்து மயோத்ஸ்ருஷ்டை: குசோதகை இதி கூர்ச்சம் விஸ்ரஸ்ய குசோதகம் நிநயேத் பவித்ரம் விஸ்ருஜ்ய உபவீதி ஆசாமேத் ப்ரம்மயஜ்ஞம் சூர்யாத்

இதி பித்ருதர்ப்பண விதி:

 பித்ருதர்ப்பண மந்திரத்தின் பொழிப்புரை: 

🛕 ஸங்கல்பம்: – அசுத்தமாக வாயினும் சுத்தமாக வாயினும் எய்த நிலையிலிருந்தாலும் எவனொருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறம்பும் சுத்தமானமானவனே. மனதாலோ வாக்காலோ செயலாலோ வந்தடைந்த பாலம் ஸ்ரீராம ஸ்மரணையாலேயே சழிந்துபோம், இதில் சந்தேகமில்லை. ஸ்ரீராம ராம ராம, திதியும் விஷ்ணு, வாரமும் விஷ்ணு, நக்ஷத்திரமும், யோகமும் கரணமும் விஷ்ணுவே; உலகனைத்தும் விஷ்ணுவே ஸ்ரீகோவிந்த, கோவிந்த கோவிந்த.

🛕 இப்போது புருஷோத்தமனான பகவான் விஷ்ணுவின் கட்டளையால் தொழில் புரியும் பிரம்மாவின் இரண்டாவது பரார்த்தத்தில் சுவேதவராஹ கல்பத்தில் வைவஸ்வத மன்வந்தரத்தில் இருபத்தெட்டாவது சதுர் யுகத்தில், கலியுகத்தில் முதன் பாதத்தில், ஜம்பூத்வீபத்தில் பாரதவர் ஷத்தில் பரதகண்டத்தில், மேருவின் தெற்குப் பக்கத்தில் இப்போது நடைமுறையிலிருக்கும் சகாப்தத்தில் – பிரபவாதி அறுபது ஆண்டுகளிடை இன்ன ஸம்வத்ஸரத்தில், இன்ன அயனத்தில், இன்ன ருதுவில், இன்ன மாஸத்தில், கிருஷ்ணபக்ஷத்தில் அமாவாசை புண்ணிய திதியில் (பூணூலை இடமாக மாற்றிக் கொள்க.)

🛕 வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபிகளாயிருக்கும் எங்களுடைய பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களுக்கும், மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிகளுக்கும், பத்னிகளுடன் கூடிய மாதாமஹர், மாதாவின் பிதாமஹர், மாதாவின் பிரபிதா மஹர் ஆகியோருக்கும், இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் அழிவில்லாத திருப்தி ஏற்படும் பொருட்டு, அமாவாசை புண்ணிய காலத்தில் திலதர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 (பூணூலை வலமாக மாற்றிக்கொண்டு, ஜலத்தைத் தொட்டு, மறுபடி இடமாக மாற்றிக்கொள்க.

🛕 (தெற்கு நுனியாகக் கூர்ச்சத்தை வைக்க.)

🛕 ஆவாஹனம்: பித்ருக்களே! மிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததியையும், செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசீர்வதித்தளித்துக் கொண்டு, கம்பீரமாகச் சிறந்த ஆகாசமார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள், இந்தக் கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பிதிருக்களையும் ஆவாஹனம் செய்கின்றேன்.

🛕 ஆஸனம்: தர்ப்பையே! நீ ஒரு போது என்னால் சேகரிக்கப்பட்டாய், உன்னைப் பித்ருக்களுக்காகப் பரப்புகிறேன். நீ அவர்களுக்குப் பஞ்சுபோல் மிக மெதுவான ஆஸனமாக இரு, அருள் சுரக்கும் எங்கள் பித்ரு பிதா மஹப் பிரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளட்டும், (இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் இது ஆஸனம், அவர்களை எல்லாவித உபசாரங்களுடனும் பூஜிக்கிறேன்).

🛕 ஸோமயாகம் செய்த சிறந்த பித்ருக்களைப் போலவே நடுத்தரத்தினரும், கடைப்பட்டவருங்கூட உயர்ந்த கதியை அடையட்டும், நம்மிடம் கோபமற்றவர்களாய் அவர்கள் நாம் செய்யும் நற்கர்மாவை உணர்ந்து நமது பிராணனை ரக்ஷித்து, நாம் அழைக்கும்போது வந்து, நம்மைக் காத்தருள வேண்டும். இன்ன கோத்திரத்தினரும் இன்ன பெயருள்ளவரும் வசுரூபியுமாகிய எங்கள் பிதாவை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 அங்கிரஸர், அதர்வணர், பிருகுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள். ஸோமயாகம் செய்தவர்கள். பூஜித்தற்குரிய அவர்களுடைய புத்தி எந்தச் சிறந்த வழியில் சென்றதோ அதையே நாமும் பின்பற்றி, மங்களகரமான நல்லது மனது படைத்தவர்களாவோம் இன்ன கோத்திரத்தினரும்+ தர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 அக்னிஷ்வாத்தர்கள் என்பவர்களும், ஸோமயாகம் செய்தவர்களுமான நமது (பித்ருக்கள் தேவயான மார்க்கமாக இங்கு எழுந்தருளுட்டும். இங்கு நாம் செய்யும் ஆராதனையில் ஸந்தோஷமடையட்டும். நம்மைக் காப்பாற்றட்டும். இன்ன கோத்திரத்தினரும் +தர்ப்பணம் செய்கிறேன்.

🛕 (ஜலங்களே) எல்லவாற்றிலுமுள்ள ஸாரத்தை நீங்கள் உங்களிடம் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் அமிருதமாகவும், நெய்யாகவும், பாலாகவும், மதுவாகவும், பானகமாகவும் பரிணமித்து (எது வேண்டுமோ அதுவாய் நின்று நீங்கள்) எங்கள் பித்ருக்களைத் திருப்தி செய்வீர்களாக. இன்ன கோத்திரத்தினரும் இன்ன பெயருள்ள வரும் ருத்ர ரூபியுமாகிய எங்கள் பிதாமஹரை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 ஸ்வதா எனும் சொல்லால் திருப்தியடையும் பித்ருக்களுக்கு ஸ்வதா எனக் கூறி நமஸ்கரிக்கின்றேன். ஸ்வதா எனும் சொல்லால் திருப்தியடையும் பிதா மஹர்களுக்கும் ப்ரபிதாமஹர்களுக்கும் ஸ்வதா எனக் கூறி நமஸ்கரிக்கின்றேன். இன்ன கோத்திரத்தினரும் + தர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 எந்த பித்ருக்கள் இவ்வுலகில் இருக்கின்றனரோ, எவர்கள் இங்கு இல்லையோ, எவர்களை நாங்கள் அறிவோமோ, எவர்களை அறியமாட்டோமோ அவர்களையெல்லாம் அக்னிபகவானே! நீர், அனைத்தையும் அறியும் ஜாதவேதஸ் ஆதலால், அறிவீர், அவர்களுக்குரிய இதை அவர்களிடம் சேர்த்தருள வேண்டும். அதனால் அவர்கள் சந்தோஷமடையட்டும். இன்ன கோத்திரத்தினரும் + தர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 காற்று இனிமையாக வீசட்டும், நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும், செடி கொடிகள் இனிமையை அளிப்பவையாக இருக்கட்டும். இன்ன கோத்திரத்தினரும் இன்ன பெயருள்ளவரும் ஆதித்திய ரூபியுமாகிய எங்கள் பிரபிதாமஹரை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 இரவும் காலையும் இனிமையாயிருக்கட்டும் பூமியின் புழுதியும் இன்பந்தருவதாயிருக்கட்டும். நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பமளிக்கட்டும். இன்ன கோத்திரத்தினரும் + தர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 வனவிருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவைகளாயிருக்கட்டும். சூரியன் இன்பந்தரட்டும். பசுக்கள் மதுரமான பாலையளிக்கட்டும். இன்ன கோத்திரத்தினரும்+ தர்ப்பணம் செய்கின்றேன்.

🛕 இன்ன கோத்திரனத்தினரும் (ஸீதா) என்ற பெயருள்ளவரும் வசு ரூபிணியும் ஆகிய எனது தாயை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் மூன்று தடவை.

🛕 இன்ன கோத்திரத்தினரும் (லக்ஷ்மீ) என்ற பெயருள்ளவரும் ருத்ர ரூபிணியும் ஆகிய எனது பிதா மஹியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன். மூன்று தடவை.

🛕 இன்ன கோத்திரத்தினரும் (ருக்மிணீ) என்ற பெயருள்ளவரும் ஆதித்ய ரூபிணியும் ஆகிய எனது ப்ரபிதாமஹியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன். மூன்று தடவை.

🛕 இன்ன கோத்திரத்தினரும் இன்ன பெயருள்ளவரும் வசு ரூபியுமாகிய எங்கள் மாதாமஹருக்குத் தர்ப்பணம் மூன்று தடவை.

🛕 வசு ரூபிணியாகிய எங்கள் மாதாமஹிக்குத் தர்ப்பணம். மூன்று தடவை.

🛕 ருத்ர ரூபிணியாகிய எங்கள் மாதாவின் பிதாமஹிக்குத் தர்ப்பணம். மூன்று தடவை.

🛕 ஆதித்ய ரூபிணியாகிய எங்கள் மாதாவின் ப்ரபிதாமஹிக்குத் தர்ப்பணம். மூன்று தடவை.

🛕 அன்னரஸமாகவும், அமிருதமாகவும் நெய்யாகவும், பாலாகவும், தேனாகவும், பானகமாகவும், பரிணமித்து (எது வேண்டுமோ அதுவாய் நின்று நீங்கள்) எனது பித்ருக்களைத் திருப்தி செய்வீர்களாக. (பித்ருக்களே!) திருப்தியடையுங்கள், திருப்தியடையுங்கள், திருப்தியடையுங்கள்.

🛕 (பூணூலை வலமாக மாற்றிக் கொள்ளவும்). தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் அவ்வாறே மகாயோகிகளுக்கும் நமஸ்காரம் ஸ்வதா என்றும் ஸ்வாஹா என்றும் பெயர் கொண்டு விளங்கும் பரதேவதைக்கு எப்போது மீண்டும் மீண்டும் நமஸ்காரம். (இங்ஙனம் மூன்று தடவை). அபிவாதனமும் நமஸ்காரமும்.

🛕 (பூணூலை இடமாக மாற்றிக் கொள்ளவும்) பித்ருக்களே மிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததியையும் செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசீர்வதித்து அளித்துக்கொண்டு கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் எழுந்தருளுங்கள். இந்தக் கூர்ச்சத்திலிருந்து இரண்டு வர்க்க பித்ருக்களையும் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்கு எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்.

🛕 (பவித்திரத்தை வலது காதில் வைத்துக் கொண்டு, உபவீதியாக, ஆசமனம் செய்துவிட்டு மறுபடி பவித்திரத்தைப் போட்டுக்கொண்டு, பூணூலை இடமாக மாற்றிக் கொள்ளவும்.) எவர்களுக்குத் தாயோ, தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ (தர்ப்பணம் செய்ய) அவர்களெல்லாம் நான் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தியடையட்டும் (என்று சொல்லிக் கூர்ச்சத்தைப் பிரித்து நுனி வழியாகத் தர்ப்பணம் செய்க. பவித்திரத்தைப் பிரித்துப் போட்டு விட்டுப் பூணூலை வலமாய்ப் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்க. (பின்பு பிரம்ம யஜ்ஞம் செய்க.)

🛕 பித்ரு தர்ப்பண விதி முற்றும்.

🛕 பித்ரு தர்ப்பணப் பொழிப்புரை முற்றும்.

Sandhyavandanam Mahimai in Tamil

ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை

ஜகத்குரு மகா பெரியவாள் உபதேசித்தது:

🛕 ஒரு கதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜிகல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள். இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

🛕 திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐசுவர்யத்தை வைத்து, தானம்செய்யப் போவதாக விளம்பரம் செய்தார்.

🛕 அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அனேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்தக் காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல், தானம் வாங்க வந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள்.

🛕 கன்னடியர் என்ற ஒரு பிராம்மணர் இருந்தார். ஸந்த்யாவந்தன கர்மாவில் வெகு ச்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார்.

🛕 அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று விரல்களைக் காட்டியது. முடியாது என்றார். பிறகு இரண்டு விரல்களைக் காட்டியது. அதற்கும் முடியாது என்றார். கடைசியாக ஒரு விரலைக் காட்டியது, சரி என்றார்.

🛕 தான் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு, கால புருஷன் அந்த உருவத்தினின்றும் மறைந்தான். அந்தத் தானத்தில் அடங்கிய சகல ஐசுவர்யங்களையும் அந்தப் பிராமணர் வாங்கிக்கொண்டார்.

🛕 மூன்று விரல்கள், மூன்று வேளைகளில் செய்யப்படும் ஸந்த்யா வந்தனத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை மாலை இரு வேளைகளின் ஸந்த்யாவந்தன பலன். ஒருவிரல், ஒருவேளை, அதாவது மாத்யாந்நிகத்தின் பலன் என்பது காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளின் அர்த்தம்.

🛕 ஸந்த்யா வந்தனத்தின் ஒருவேளையின் பலனைக் கொடுத்ததன் மூலமும், ஐசுவர்யத்தைத் தானம் வாங்கியதன் மூலமும் பிராம்மணருக்குப் பாபம் சம்பவித்துவிட்டது.

🛕 அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிய வழியைத் தெரிந்துகொள்ள அகத்திய முனிவர் தவம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் மலைச்சாரலுக்குச் சென்றார். போகும் முன், தம்மிடமிருந்த தனத்தைப் பாதுகாக்கும்படி, கோவில் பூஜை செய்து வந்த ஒரு குருக்களிடம் ஒப்படைத்தார். எங்கே சென்றாலும் அகத்திய முனிவர் காணப்படவில்லை.

🛕 முனிவரைக் காணாமையால், அவர் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில், அகத்திய முனிவர் ஓர் கிழ வடிவத்துடன் பிராம்மணர் முன் தோன்றினார். அவரிடத்தில், பிராமணர் இக்கதையைச் சொன்னார். அந்தக் கிழவர், நீ போகின்ற வழியில் ஒரு பசுமாடு உமக்குத் தென்படும்.

அந்த இடத்திலிருந்து நீ ஒரு கால்வாய் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். பசுமாடு எவ்வளவு தூரம் சென்று நிற்கின்றதோ அவ்வளவு தூரத்திற்குக் கால்வாய் வெட்ட வேண்டும்.

🛕 நடுவில் பசுமாடு எந்த இடங்களில் சாணி போட்டுமூத்திரம் பெய்கிறதோ அந்த அந்த இடங்களில், சாணிபோட்ட இடத்தில் மடை அமைக்கவும், மூத்திரம் பெய்யும் இடத்தில் வாய்க்கால் வெட்ட வேண்டும் .இவ்விதம் செய்தால் உமக்கு ஏற்பட்டிருக்கும் பாபம் போய்விடும் என்று கிழவர் சொன்னார்.

🛕 கன்னடியர் அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்டு, திரவியத்தைத் திரும்ப வாங்குவதற்காக குருக்களிடம் சென்றார்.

🛕 குருக்களுக்குப் பிராமணர் கொடுத்த தனத்தின் மீது மோகம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்து பவுன் இளம் துவரம் பருப்பை ஒத்திருக்குமாதலால், குருக்கள் பிராமணரிடம் துவரம் பருப்புகளைக் கொடுத்து, “நீர் கொடுத்த திரவியம் இதுதான், எடுத்துக் கொள்ளும்” என்றார்.

🛕 குருக்களின் வஞ்சகச் செயலை அறிந்துகொண்ட பிராமணர், “நான் கொடுத்தது இதுவல்ல, நான் கொடுத்ததைக் கொடுங்கள்” என்றுமிகவும் பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்.

🛕 எந்தப்பயனும் ஏற்படவில்லை. ஆகவே, ராஜாவிடம் சென்று முறையிட்டுக் கொண்டார். குருக்களும் தருவிக்கப்பட்டார்.

🛕 ஆனால் குருக்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே குருக்கள் பூஜைசெய்யும் லிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தால் நான் ஒப்புக் கொள்கிறேன் என்று பிராமணர் கூறினார்.

🛕 அவ்விதம் செய்வதாகக் குருக்களும் சம்மதித்துவிட்டார். குருக்கள் ஆபிசாரப் பிரயோகத்தில் தேர்ந்தவரானதால், லிங்கத்திலுள்ள ஸ்வாமியைப் பக்கத்திலுள்ள ஒருமரத்தில் ஆகர்ஷனம் செய்துவிட்டார்.

🛕 இதை ஸ்வாமி, பிராமணரின் சொப்பனத்தில் தோன்றி, நடந்ததைச் சொல்லிவிட்டார். பிராமணர் மறுபடியும் ராஜாவிடம் சென்று “குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிராமணர் செய்யும்படிச் செய்ய வேணுமாகக் கேட்டுக்கொண்டார்”. குருக்கள் மறுப்பளித்தார்.

🛕 ராஜா விடவில்லை. மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்யுமாறு ஆணையிட்டார் ராஜா. குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தார். உடல் எரிந்து போய்விட்டது.

🛕 எரிச்சுக்கட்டி ஸ்வாமி என்பது அந்த ஆலயமூர்த்தியின் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் அந்த ஆலயம் இருக்கிறது. பிறகு, பிராமணர் தம் தனத்தை எடுத்துக்கொண்டு கிழவர் சொல்லியபடி பசுமாட்டைக் கண்டு கால்வாய் வெட்டினார்.

🛕 “கன்னடியன் கால்வாய்” என்பது அதன் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கின்றது. அந்தக் கால்வாயின் பிரதேசங்கள் இன்றைக்கும் செழித்திருக்கின்றன. இந்தக் கதையினால் ஸந்த்யாவந்தனத்தின் பெருமை நன்கு விளங்குகிறது.

🛕 எனவே ஸந்த்யா வந்தனம் ஒரு கடமை. அதுசெய்வதால் உலக க்ஷேமம் ஏற்படுகின்றது. ச்ரத்தையுடன் செய்தால் மோக்ஷம் லபிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டு, நமது கடமைகளில் ஒன்றாகச் செய்து வரவேண்டும் என்று உங்கள் எல்லோரிடமும் தெரிவிக்கின்றோம்.

Also, read



2 thoughts on "சந்தியாவந்தனம் மற்றும் அதன் மகிமை"

  1. VIJAYAN RAMAKRISHNAN says:

    Thanks for this Sandhyavandanam details. Will you please share Yajur veda ammavasai tharpanam in sanskrit with meaning please.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • September 13, 2024
திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகள்
  • August 14, 2024
பக்தி