×
Friday 11th of October 2024

Nuga Best Products Wholesale

ஐயப்பன் ஆறுபடை வீடுகள்


Ayyappan Arupadai Veedu

ஐயப்பனின் ஆறுபடை வீடுகள்

🛕 கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே அதில் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக இருப்பது முருகனும் ஐயப்பனும் தான். ஏன் கார்த்திகைக்கு மட்டும் இந்த சிறப்பு என்றால், ஐயப்பன் மற்றும் கார்த்திகேயனாகிய முருகன் இருவரும் பிறந்த மாதம் கார்த்திகை தான்.

🛕 இந்த மாதத்தின் சிறப்பே கார்த்திகை தீபமும் சபரிமலை ஐயப்ப சாமிக்கு ஏற்றப்படும் மகரவிளக்கும் தான். அதேபோல் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என ஆறுபடை வீடுகள் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐய்யப்ப சுவாமிக்கும் அறுபடை வீடு இருப்பது நிறைய பேருக்குத் தெரியாது. அது பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.

Ayyappan 6 Padai Veedu

  1. சபரிமலை
  2. எருமேலி
  3. ஆரியங்காவு
  4. அச்சன்கோவில்
  5. பந்தளம்
  6. குளத்துப்புழா

சபரிமலை – Sabarimalai

🛕 கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.

எருமேலி – Erumeli

🛕 இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

ஆரியங்காவு – Aryankavu

🛕 நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்.

அச்சன்கோவில் – Achankovil

🛕 செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் ‘கல்யாண சாஸ்தா’ என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.

பந்தளம் – Pandalam

🛕 இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

குளத்துப்புழா – Kulathupuzha

🛕 செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் ‘பால சாஸ்தா’ என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

🛕 – சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Also, read



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • September 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு
  • September 16, 2024
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை