×
Friday 24th of March 2023

Nuga Best Products Wholesale

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டமைப்பு


Meenakshi Temple Architecture

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டமைப்பு

?  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்.

?  ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில். கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும். எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம். அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.

?  நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது. ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால்.

?  1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்! ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர். ஏனெனில் அப்படத்தில் மீனாட்சி அம்மன் கோவில் வட்டவடிவில் இருந்தது. கெப்ளர் உடனடியாக மதுரைக்கே வந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார். அப்போது தான் விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன!

 

Meenakshi Temple Facts

?  சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார். சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.

?  அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததை கண்டு வியந்தார். அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும்(RADAR) வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார். ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார். காரணம் 965 என்பது விண்வெளியில் தவிர்க்க இயலாத எண்!

?  ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்! வான அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கும் இந்த காலத்து விஞ்ஞானம் எல்லாம் அன்றே இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார். அதே போல மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்!

?  அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது! மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை!

?  மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றச் சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன! நாயன்மார்கள் பிரகாரம், 108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.

?  இறுதியில் தன் ஆராய்ச்சிக் குறிப்பில் உலகின் முதல் நாசா மீனாட்சி அம்மன் கோவிலே. அநேகமாக பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட் விட்டிருக்கலாம் அது இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம் உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக்கோவில் என எழுதி வைத்தார்!

Also read,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • March 1, 2023
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்
  • January 4, 2023
மலேசியா பத்துமலை முருகன் கோவில்
  • December 7, 2022
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோவில்