- June 5, 2023
Read Ganesha Mantras in English
ஓம் அல்லல் அறுப்பவனே சரணம் கணேசா
ஓம் ஆனந்த உருவே சரணம் கணேசா..
ஓம் ஆனை முகத்தோனே சரணம் கணேசா
ஓம் ஈஸ்வரன் மகனே சரணம் கணேசா..
ஓம் எங்குமிருப்பவனே சரணம் கணேசா
ஓம் ஏற்றம் அளிப்பவனே சரணம் கணேசா..
ஓம் கருணாகரனே சரணம் கணேசா
ஓம் சுருதிப் பொருளே சரணம் கணேசா..
ஓம் கலியுக நாதனே சரணம் கணேசா
ஓம் கருணையூற்றே சரணம் கணேசா..
ஓம் துயர் துடைப்பவனே சரணம் கணேசா
ஓம் வேத முதல்வனே சரணம் கணேசா..
ஓம் வேதாந்த சாரமே சரணம் கணேசா
ஓம் ஞான மூர்த்தியே சரணம் கணேசா..
ஓம் தோஷம் தீர்ப்பவனே சரணம் கணேசா
ஓம் நவக்கிரஹ நாயகனே சரணம் கணேசா..
ஓம் வினை தீர்க்ககும் வினையாகனே சரணம் கணேசா
ஓம் எங்கும் நிறைந்த இறைவனே சரணம் சரணம் சரணம் கணேசா..!
ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்
கடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். யானை முகத்தானே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி மிக சிறந்த பலன்களை பெறலாம். அதோடு நமது தோஷங்கள் விலகி எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
Super
Easy way to remember and pray the lord Ganesha.
Thanks!
Om namashivaya