- September 14, 2024
உள்ளடக்கம்
🛕 தமிழகத்தை அரசாண்ட மாமன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோவில்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவை ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு உண்டு. மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ளதும், மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டதுமான ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. அதுவானது –
🛕 இறைவன் அல்லது இறைவி தெய்வத் திருக்கோலம் பூண்டு எழுந்தருளியுள்ளது மூலவர் கருவறை என்னும் கர்ப்பக்கிருகம். மூலவர் என்பது ஆதியானவர் அல்லது முதன்மையானவர் என்பதால் அக்கர்ப்பகிருகத்திற்கு மூலத்தானம் என்றச் சிறப்புப் பெயருண்டு.
🛕 அந்த மூலத்தானத்தைச் சுற்றிலுமாக உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்ட பிரகாரங்களை திருச்சுற்றுக்கள் என்பர். தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பான்மையான திருக்கோவில்கள் மூன்று திருச்சுற்றுக்கள் என்னும் மூன்று பிரகாரங்களைக் கொண்டவை.
🛕 மூலத்தானத்தைச் சுற்றி வருவதற்தாக முதலாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை முதல் பிரகாரம் என்றும், இரண்டாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை இரண்டாம் பிரகாரம் என்றும், மூன்றாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை மூன்றாம் பிரகாரம் என்றும், மூன்றாவது மதில் சுவருக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளதை வெளிப்பிரகாரம் என்பர். அப்பிரகாரங்களை லோகங்கள் என்று இந்து சமய தத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
🛕 மூலவர் எழுந்தருளியுள்ள மூலத்தானம் பரத்துவம் என்னும் பரலோகம். பரலோகத்திற்கு அடுத்துள்ளது தேவலோகம். அந்தத் தேவலோகத்தில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் வாழ்வதால் அதற்கு பெருமைக்குரிய விபவம் என்பர். தேவலோகத்திற்கு அடுத்துள்ளது அனைத்து சீவராசிகள் திரளாக அல்லது கூட்டமாக வாழும் வியூகம் என்னும் பூலோகம் என்றும், பூலோகத்திற்கு வெளியில் உள்ளது பூதகங்கள் கூட்டமாக வாழும் அந்தர்யாமித்வம் என்னும் வெளிலோகம்.
🛕 பரலோகத்தில் உள்ள ஒரே ஒரு மூலப் பரம்பொருளே, தேவலேகத்தில் மும்மூர்த்திகளாகவும், பூலோகத்தில் அனைத்து சீவராசிகளாகவும், வெளிலோகத்தில் கூட்டமாக வாழும் பூதகங்களாகவும் தம்மைத் தாமாகவே வெளிபடுத்திக் கொண்டுள்ளார். அவ்வாறு பலவாகத் தம்மைத் தாமகாவே வெளிப்படுத்திக் கொண்டுள்ள மூலப் பரம்பெருளே வணங்கி வழிபடுவதற்குரிய அர்ச்சை என்னும் அர்ச்சனாமூர்த்தியாக மூலத்தானத்தில் ஒரு கல்லாகவும், உற்சவ மூர்த்தியாக ஐம்பொன் சிலையாகவும் உள்ளார் என்பதே தத்துவம் என்னும் உண்மை. பரத்துவம், விபவம், வியூகம், அந்தர்யாமித்வம், அர்ச்சை ஆகிய ஐந்தை பாஞ்சராத்ர தத்துவம் என தத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
🛕 இந்த தத்துவத்தை அதாவது உண்மையை உணர்வதற்காக அனுதினமும் திருக்கோவிலுக்கு சென்று மூலத்தானத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளை வழிபட்டு இறுதியில் பரமுத்தி (பரமுக்தி) என்னும் வீடுபேறு நிலையை அடையவேண்டும் என்பதே அதன் உட்பொருளாகும். அவ்வாறு உணர்வதை தன்னுணர்வு என்று தத்துவ நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
🛕 அந்தத் தன்னுணர்வு பெறவேண்டும் என்பதை உணர்த்துவதே மதுரை மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலின் மூன்று திருச்சுற்றுக்கள் (பிரகாரங்கள்) கொண்ட அமைப்பாகும்.
🛕 மேற்கண்ட தன்னுணர்வைப் பெறும் வகையில் அத்திருக்கோவில்களின் நுழைவாயிலான திருக்கோபுரங்களில் சுதைச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. திருக்கோபுரங்களின் முதலாம் நிலைகால் படியிலும் ஒரு குறியீடாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அக்குறியீடுகளின் மய்யத்தில் ஒரு மூலப்புள்ளியையும், அதனைச் சுற்றிலும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக மூன்று செவ்வகங்களையும், புவியின் திசைகளான வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகள் நோக்கும் கோடுகளையும் காணலாம்.
Our Sincere Thanks to: 🙏 T.L.Subash Chandira Bose 🙏
திருவிளையாடல் புராணத்தில் நான்காம் படலத்தில் வருகின்ற தடாதகை பிராட்டியார் திருத்தலம் மதுரையம்பதியிலே நாகமலைபுதுக்கோட்டை மலை அடிவாரத்தில் உள்ளது. அன்னை தூரி விளையாடிய இடம், குளித்த இடம் மலை மேல் உள்ளது. கோரக்க சித்தர் வணங்கிய .மிகப் பழ்மையான கோவில். அன்னையின் அருளினை அனைவரும் பெருவோமாக!!