- January 9, 2023
? செவ்வாய் இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார். திருடு, வெட்டுக்காயம், தீ காயம், எதிரிகள், பேராசை, அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும். செவ்வாய்க்கு 4, 7, 8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1, 4, 7 இருப்பது நல்லதல்ல. 2, 4, 7, 8, 12 ஆம் இடங்கள் இருப்பது நல்லதல்ல. இந்த இடங்களில் இருந்தால் தோஷம் ஆகும்.
? அங்காரகன், குஜன், மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொறியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி. பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு. அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.
? அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன். சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன்.
? தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் எனப்படும் செவ்வாயும் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளியிருக்கிறார். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் இவருக்கு சிறப்பு நாட்கள்தாம். நமதுமனை மங்களம் சிறக்க செவ்வாயின் அருள் வேண்டும். செவ்வாயின் அருள் வேண்டி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
? தென்னிந்திய மக்கள் செவ்வாய்க் கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால், இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் என்று தினமலர் நாளிதழில் படித்தேன். அதனால் தான் செவ்வாய்யைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன். நமது வீட்டில் எல்லாம் திருமண காலங்களில் பெண் பார்க்கும் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தவறாது அடிபடும் வார்த்தை செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்றுதான். இந்த தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும் என்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது.
? நான் சொல்ல வந்தது, ஒன்பது கிரகங்களில் நீங்கள் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டும் தான். ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம் இருக்கும். நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். நீங்கள் இதனை ஒரு ஆய்வாகவே எடுத்துக்கொள்ளலாம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதலுடன் கேளுங்கள் அந்த காரியம் நிச்சயம் நடந்தேறும். உங்கள் வேலை உடனே நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை பயன்படுத்துங்கள். உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். செவ்வாய் கிழமை நாம் பயன்படுத்தலாம். முருகனை முழு மனதுடன் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்.
? அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்.
திருச்சிற்றம்பலம்